[X] Close
JUST IN
  • BREAKING-NEWS 2 நாட்களில் ஹெல்மெட் அணியாமல் பிடிபட்டவர்கள் ஒரு லட்சம் பேர் - டிஜிபி அலுவலகம்
  • BREAKING-NEWS “கன்னடம்தான் முக்கியத்துவம் வாய்ந்த மொழி” - எடியூரப்பா
  • BREAKING-NEWS இந்தியக் கடற்படையின் கப்பல்தளத்தில் அப்ரண்டிஸ் பணி
  • BREAKING-NEWS “ஒரு மொழியை திணித்தால் ஏற்க மாட்டோம்”- கமல்ஹாசன்

கோவை, நீலகிரி, தேனி மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்பு

chance-for-heavy-rain-in-3-districts

தமிழகத்தில் கோவை, நீலகிரி, தேனி மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் கனமழை பெய்யக்கூடும் என சென்னை வானிலை மையம் எச்சரித்துள்ளது.

ஏனைய உள்மாவட்டங்கள் மற்றும் தென்மாவட்டங்களில் லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும் எனவும் வானிலை ஆய்வு மையம் கூறியுள்ளது. தென் தமிழக பகுதியில் மணிக்கு 40 முதல் 50 கிலோமீட்டர் வேகத்தில் காற்று வீசக்கூடும் என்பதால் மீனவர்கள் கடலுக்கு செல்ல வேண்டாம் என எச்சரிக்கப்பட்டுள்ளது.

சென்னையை பொறுத்தவரை வானம் மேகமூட்டத்துடன் காணப்படும் என்றும் சில இடங்களில் லேசான மழைக்கு வாய்ப்புள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. கேரளா, கடலோர மற்றும் தெற்கு கர்நாடகா பகுதிகள், ராஜஸ்தான், உத்தரப்பிரதேசம், மத்தியபிரதேசம் உள்ளிட்ட மாநிலங்களில் கனமழை பெய்யக் கூடும் என வானிலை ஆய்வு மையம் கூறியுள்ளது.

Advertisement:
Advertisement:
Advertisement:
[X] Close