[X] Close
JUST IN
  • BREAKING-NEWS மும்பை பங்குச்சந்தை சென்செக்ஸ், தேசிய பங்குச்சந்தை குறியீட்டெண் நிஃப்டி ஏற்றம்
  • BREAKING-NEWS தூத்துக்குடியில் கனிமொழி பெற்ற வெற்றிக்கு எதிரான வழக்கை வாபஸ் பெறுவதாக உயர்நீதிமன்றத்தில் தமிழிசை தரப்பில் மனு தாக்கல்
  • BREAKING-NEWS தமிழகத்தில் இன்றும் மழை தொடரும் என வானிலை மையம் அறிவிப்பு
  • BREAKING-NEWS இடைத்தேர்தலில் போட்டியிடுவதற்காக விருப்பமனு அளித்தவர்களிடம் இன்று நேர்காணல் நடத்துகிறது அதிமுக
  • BREAKING-NEWS நாங்குநேரி, விக்கிரவாண்டி தொகுதி இடைத்தேர்தலுக்கான வேட்புமனுத்தாக்கல் இன்று தொடங்குகிறது

“தமிழ் மக்கள் எப்போதும் புலியை போன்றவர்கள்”- மம்தா பானர்ஜி பேச்சு..!

mamta-banerjee-speech-at-karunanidhi-s-death-anniversary-meeting

தமிழகத்தின் முதுபெரும் அரசியல் தலைவர்களின் ஒருவரான முன்னாள் முதலமைச்சர் கருணாநிதி கடந்த ஆண்டு இதே நாளில், உடல் நலக்குறைவால் காலமானார். அவரது முதலாம் ஆண்டு நினைவு தினம் இன்று அனுசரிக்கப்படுகிறது. இதனையொட்டி, கருணாநிதியின் வெண்கலசிலை முரசொலி அலுவலக வளாகத்தில் திறக்கப்பட்டது. மேற்கு வங்‌க முதலமைச்சர் மம்தா பானர்ஜி, கருணாநிதியின் சிலையை திறந்து‌வைத்தார்.‌

இதன்பின் கருணாநிதியின் நினைவுதின பொதுக்கூட்டத்தில் மம்தா பானர்ஜி உரையாற்றினார். அப்போது பேசிய அவர், “அனைவருக்கும் வணக்கம். நான் நிறையே தமிழ் கற்க வேண்டும். அதற்காக அடிக்கடி தமிழ்நாட்டிற்கு வரவேண்டும். அன்பு சகோதரர்களே சகோதரிகளே என்று கருணாநிதி அடிக்கடி உரைப்பார். கருணாநிதியின் போராட்ட உணர்விற்கும் ஜனநாயக வேட்கைக்கும் நான் தலை வணங்குகிறேன். அத்துடன் திராவிட தமிழ்நாட்டு மக்களுக்கும் நான் தலை வணங்குகிறேன். நான் கருணாநிதியை நினைக்கும் போதெல்லாம், அவரையும் முரசொலி மாறனையும் வீட்டில் வைத்து கைது செய்த புகைப்படம் தான் நினைவிற்கு வருகிறது. 

நமது நாடு மிகப்பெரிய நாடு. இதில் அனைவரும் தங்களின் தாய்மொழியை மறக்கக் கூடாது. கருணாநிதி ஏழை எளிய மக்கள் மற்றும் சிறுபான்மையினர் ஆகியோருக்காக போராடினார். மக்களுக்காக போராடிய தலைவர்களில் கருணாநிதியும் ஒருவர். எப்போதும் கூட்டாட்சி தத்துவத்திற்கு குரல் கொடுத்தவர்.

ப்ரூக் அப்துல்லா இந்தக் கூட்டத்தில் பங்கேற்று இருக்க வேண்டும். ஆனால் அவர் தற்போது எப்படி இருக்கிறார்..? என்பதே நமக்கு தெரியவில்லை. மத்திய அரசு ஒரு மாநிலம் தொடர்பாக முடிவு எடுக்க வேண்டும் என்றால் அந்த மாநிலத்தின் மக்களிடம் கருத்து கேட்க வேண்டும். நாம் அனைவரும் முதலில் இந்தியன். அத்துடன் நமக்கு என்று தனியாக மாநில அடையாளம் உண்டு. அதை நாம் ஒரு போதும் அழியாமல் பார்த்துக் கொள்ளவேண்டும். 

         

தமிழ் மக்கள் எப்போதும் புலியை போன்றவர்கள். அவர்கள் எப்போதும் தைரியமானவர்கள். அத்துடன் நீங்கள் ஒரு நோக்கத்திற்காக சிறப்பாக போராடுவீர்கள். நீங்கள் உங்களின் உயிரை பற்றியும் கவலைப்படாமல் போராடுவீர்கள். ஏனென்றால் உங்களுக்கு மாநிலத்தின் நலன் தான் முக்கியமானதாக இருக்கும். ஆகவே தான் நான் உங்கள் முன் தலை வணங்குகிறேன். நான் மேற்கு வங்கத்தில் எப்போதும் ஜெய் பெங்கால் என்று கூறுவேன், தற்போது அத்துடன் ஜெய் தமிழ்நாடு என்று கூறுகிறேன். தமிழ் மக்கள் அனைவருக்கும் எனது நன்றி” எனக் கூறி தனது உரையை முடித்து கொண்டார். 

Advertisement:
Advertisement:
Advertisement:
[X] Close