[X] Close
JUST IN
  • BREAKING-NEWS பாட்னா உயர்நீதிமன்ற தலைமை நீதிபதியாக இருக்கும் அம்ரேஷ்வர் பிரதாப் சாஹியை சென்னை உயர்நீதிமன்ற தலைமை நீதிபதியாக நியமிக்க கொலிஜியம் பரிந்துரை
  • BREAKING-NEWS ஐரோப்பிய ஒன்றியத்துடன் புதிய பிரெக்ஸிட் உடன்பாடு ஏற்பட்டது - பிரிட்டன் பிரதமர் போரிஸ் ஜான்சன்
  • BREAKING-NEWS ப.சிதம்பரத்தை அவதிக்குள்ளாக்க வேண்டும் என்பதே அமலாக்கத்துறையின் எண்ணம் - கபில் சிபல்
  • BREAKING-NEWS நீட் தேர்வு ஆள்மாறாட்ட வழக்கில் கைதான மாணவர் உதித் சூர்யாவுக்கு நிபந்தனை ஜாமீன்
  • BREAKING-NEWS அடுத்த 5 நாட்களுக்கு கனமழை நீடிக்கும் - இந்திய வானிலை ஆய்வு மையம்

சுகாதாரமற்ற உணவு: பாதிக்கப்பட்டவருக்கு இழப்பீடு வழங்க சரவணபவனுக்கு உத்தரவு

consumer-forum-directs-saravana-bhavan-to-pay-1-1-lakh-in-damages-to-lawyer-for-deficiency-in-services

சுகாதாரமற்ற உணவால் உடல்நிலை பாதிக்கப்பட்டதாக சரவணபவன் மீது தொடரப்பட்ட வழக்கில் பாதிக்கப்பட்டவருக்கு ரூ,1.10 லட்சம் இழப்பீடு வழங்க வேண்டுமென நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது

சென்னை அண்ணாசாலையில் உள்ள சரவணபவன் உணவகத்தில் கடந்த 2014ம் ஆண்டு வழக்கறிஞரான சாமி என்பவர் உணவு உட்கொண்டுள்ளார். ஆனால் அவர் உட்கொண்ட உணவில் முடி கிடந்ததாகவும், இது குறித்து மேலாளரிடம் புகார் அளிக்கப்பட்டதும் வேறு உணவு மாற்றிக்கொடுக்கப்பட்டதாகவும் தெரிகிறது. ஆனால் சுகாதாரமற்ற அந்த உணவால் தனக்கு வாந்தி மயக்கம் உண்டானதாகவும் கடுமையான வயிற்றுவலியும் ஏற்பட்டு மருத்துவமனையில் சிகிச்சை பெற்றதாகவும் நுகர்வோர் நீதிமன்றத்தில் சாமி  வழக்கு தொடர்ந்தார். 

அதில்சுகாதாரமற்ற உணவை வழங்கிய சரவணபவன் உணவகம் இழப்பீடாக ரூ.60 லட்சமும், மன உளைச்சல் ஏற்படுத்தியற்காக ரூ.30 லட்சமும் வழங்க வேண்டுமென்றும் அவர் கோரிக்கை விடுத்தார். தான் மருத்துவமனையில் பெற்ற சிகிச்சை விவரங்களையும அவர் நீதிமன்றத்தில் தாக்கல் செய்தார்.

இந்த புகாரை விசாரித்த நுகர்வோர் நீதிமன்றம், பாதிக்கப்பட்ட சாமிக்கு ரூ.1.10 லட்சம் இழப்பீடு வழங்க வேண்டுமென சரவணபவன் உணவகத்துக்கு உத்தரவிட்டுள்ளது.

Advertisement:
இது தொடர்பான செய்திகள் :
Advertisement:
Advertisement:
[X] Close