அத்திவரதரை தரிசிக்க வரும் பக்தர்களின் 40 ஆயிரத்துக்கும் அதிகமான வாகனங்கள் காஞ்சிபுரத்தில் கடுமையான நெரிசல் ஏற்பட்டது.
நாளை வரை மட்டுமே அத்திவரதர் சயன கோலத்தில் காட்சியளிப்பார் என்பதால், பல்லாயிரக்கணக்கான பக்தர்கள் காஞ்சிபுரத்தில் குவிந்து வருகின்றனர். வெளிமாநிலங்களில் இருந்து ஆன்மீக சுற்றுலா வரும் பக்தர்கள், குடும்பத்தோடு வரும் பக்தர்கள், தங்கள் வாகனங்களை நகரின் சுற்றுவட்டாரப் பகுதிகளில் நிறுத்தி வைக்கின்றனர்.
அதனால், வாலாஜாபாத் - தாம்பரம் சாலை, காஞ்சிபுரம் பேருந்துநிலையம் செல்லும் சாலை, உத்திரமேரூர், வந்தவாசி சாலைகளில் கடுமையான போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது. பக்தர்கள் சென்ற 40 ஆயிரத்திற்கும் அதிகமான வாகனங்கள் ஆங்காங்கே நிறுத்தி வைக்கப்பட்டுள்ளதாகவும், அவை வெளியே சென்ற பிறகே புதிதாக வரும் வாகனங்களை அனுமதிக்க முடியும் என்று காவல்துறையினர் தெரிவித்துள்ளனர்.
இதனால், காஞ்சிபுரம் எல்லைகளான சென்னை - பெங்களூரு தேசிய நெடுஞ்சாலை, பொன்னேரி, வாலாஜாபாத், செவிலிமேடு, ஓரிக்கை உள்ளிட்ட பகுதிகளில் வாகனங்கள் குவிந்துள்ளன. அங்கிருந்து மினி பேருந்துகள் மூலம் பக்தர்கள் தரிசனத்திற்கு செல்லவும் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.
“குடியுரிமை திருத்த சட்டத்தை அமல்படுத்த மாட்டோம்” - 5 மாநில அரசுகள் போர்க்கொடி
50 நாட்களை நிறைவு செய்த ‘பிகில்’, ’கைதி’ - ரசிகர்களுக்கு இயக்குநர் நன்றி
சாய்ந்த 50 ஆண்டுகள் பழமையான மரம் - மீண்டும் அழகாக நட்டு வைத்த அதிகாரிகள்
பாலியல் வன்கொடுமைக்கு 21 நாட்களுக்குள் தூக்கு - ஆந்திர பேரவையில் நிறைவேறியது திஷா மசோதா
அசாம் போராட்டத்தால் ஜப்பான் பிரதமரின் இந்திய வருகை ஒத்திவைப்பு?