[X] Close
JUST IN
  • BREAKING-NEWS ராஜீவ்காந்தி குறித்த பேச்சை திரும்பப் பெறமாட்டேன் - சீமான்
  • BREAKING-NEWS தூத்துக்குடி எம்.பி. கனிமொழியின் வெற்றியை எதிர்த்து தமிழிசை தொடர்ந்த மனுவை வாபஸ் பெற உயர்நீதிமன்றம் அனுமதி
  • BREAKING-NEWS இரண்டாயிரம் ரூபாய் நோட்டுகள் அச்சிடுவதை நிறுத்தியது ரிசர்வ் வங்கி
  • BREAKING-NEWS ராஜீவ் காந்தி கொலை குறித்து சர்ச்சை பேச்சு.. சீமான் மீது வழக்குப்பதிவு
  • BREAKING-NEWS முதல்வர் பதவியை ராஜினாமா செய்துவிட்டு தேர்தல் களத்தில் நேருக்கு நேர் மோதத் தயாரா..? முதல்வருக்கு மு.க.ஸ்டாலின் சவால்
  • BREAKING-NEWS பிசிசிஐ தலைவராகிறார் கங்குலி... அனைத்து மாநில சங்கங்கள் ஏகமனதாக தேர்வு செய்கின்றனர்.

திமுக செயற்குழு உறுப்பினர் வெட்டிக் கொலை

dmk-officer-murdered-in-tuticorin

தூத்துக்குடி அருகே திமுக செயற்குழு உறுப்பினர் ஒருவர் வெட்டிக் கொல்லப்பட்ட சம்பவம் அதிச்சியை ஏற்படுத்தியுள்ளது. காரில் வீடு திரும்பிய அவரை, இருசக்கர வாகனத்தில் வந்த கும்பல் வெட்டி சாய்த்துள்ளது.

தூத்துக்குடி மாவட்டம் குலையன்கரிசலைச் சேர்ந்த வி.எஸ்.கருணாகரன், திமுகவில் செயற்குழு உறுப்பினராக இருந்துள்ளார். தூத்துக்குடி தெற்கு மாவட்ட திமுக அலுவலகம் முத்தையாபுரத்தில் உள்ள இவரது இடத்தில் இயங்கியது. திருச்செந்தூர் எம்எல்ஏ அனிதா ராதாகிருஷ்ணனின் தீவிர ஆதரவாளராக இருந்த நிலையில், மக்களவைத் தேர்தலுக்குப் பிறகு இருவருக்கும் கருத்து வேறுபாடு ஏற்பட்டு, கட்சி அலுவலகம் வேறு இடத்துக்கு மாற்றப்பட்டது.‌

கருணாகரன் தூத்துக்குடி அனல் மின் நிலைய ஒப்பந்தப் பணிகளோடு, விவசாயமும் செய்துள்ளார். தூத்துக்குடி மாவட்டத்தில் ஒ.என்.ஜி.சி நிறுவனம் பெட்ரோலியம் கொண்டு செல்லும் குழாய்கள் பதித்து வருவதை, விவசாயிகள் எதிர்க்கும் நிலையில், கருணாகரன் ஆதரித்ததாக கூறப்படுகிறது. இந்த சர்ச்சையில் குலையன்கரிசல் விவசாயிகள் சங்கத்தை பூட்டி சாவியை எடுத்துச் சென்றதாகவும் சொல்லப்படுகிறது.

இந்நிலையில், கருணாகரன் நேற்று மாலை தனது காரில் தோட்டத்திற்கு சென்றபோது, இருசக்கர வாகனங்களில் வந்த கும்பல் அவரை வழிமறித்துள்ளது. காரிலிருந்து இறங்கிய கருணாகரனை கண்மூடித்தனமாக வெட்டிச் சாய்த்த அந்த கும்பல், அங்கிருந்து தப்பியது. இந்த கோரத் தாக்குதலில் அவர் நிகழ்விடத்திலேயே உயிரிழந்தார். கொலை குறித்து விசாரணை நடத்தி வரும் காவல்துறையினர், தப்பியோடிய கொலையாளிகளைத் தேடி வருகின்றனர்.

Advertisement:
இது தொடர்பான செய்திகள் :
Advertisement:
Advertisement:
[X] Close