[X] Close
JUST IN
  • BREAKING-NEWS உளவு பார்த்த புகாரில் கைது செய்யப்பட்டு பாகிஸ்தான் சிறையில் உள்ள குல்பூஷண்ஜாதவ் விவகாரத்தில் இந்தியாவிற்கு சாதகமான தீர்ப்பு: சாதகமான தீர்ப்பு வந்துள்ளதால்,அவரை பாகிஸ்தான் தூக்கிலிட முடியாது;பாகிஸ்தான் தனதுதீர்ப்பை மறுபரிசீலனை செய்யவேண்டும் -சர்வதேச நீதிமன்றம்
  • BREAKING-NEWS இந்த ஆண்டு ரூ.600 கோடி செலவில் 2 ஆயிரம் புதிய பேருந்துகள் வாங்கப்படும் - முதல்வர் பழனிசாமி அறிவிப்பு
  • BREAKING-NEWS தமிழகம், புதுச்சேரியில் 2 நாட்களுக்கு மிதமான மழைபெய்ய வாய்ப்பு - சென்னை வானிலை ஆய்வு மையம்
  • BREAKING-NEWS ஹைட்ரோ கார்பன், நியூட்ரினோ போன்ற அனைத்து திட்டங்களுமே வளர்ச்சிக்கான திட்டம் - தமிழிசை சவுந்தரராஜன்
  • BREAKING-NEWS அண்ணா பல்கலைக்கழக கல்விக் கட்டணம் உயர்வு : அட்டவணை வெளியீடு
  • BREAKING-NEWS ”உள்ளாட்சித் தேர்தலுக்கான அறிவிப்பு அக்டோபரில் வெளியாகும்” - மாநில தேர்தல் ஆணையம்
  • BREAKING-NEWS கர்நாடக அணைகளில் இருந்து தமிழகத்திற்கு காவிரி நீர் திறப்பு

தனியார் தண்ணீர் லாரிகளின் வேலைநிறுத்த அறிவிப்பு வாபஸ்

private-water-lorries-strike-withdraw

நாளை தொடங்கவிருந்த தண்ணீர் லாரி வேலைநிறுத்த அறிவிப்பை வாபஸ் பெறுவதாக தனியார் தண்ணீர் லாரி சங்கம் அறிவித்துள்ளது

தமிழகத்தில் 25 ஆயிரத்திற்கும் மேற்பட்ட தண்ணீர் லாரிகளை கொண்டும் சென்னைக்கு மட்டும் 5 ஆயிரத்திற்கும் மேற்பட்ட தனியார் தண்ணீர் லாரிகளை கொண்டும் தண்ணீர் விநியோகம் செய்யப்பட்டு வருகிறது. இந்த தனியார் தண்ணீர் லாரி சங்கத்தின் மூலம் ஏராளமான பொதுமக்களுக்கு பல கோடி லிட்டர் தண்ணீர் வழங்கப்பட்டு வருகிறது. 

இந்த நிலையில், தமிழ்நாடு தனியார் தண்ணீர் லாரி உரிமையாளர்கள் சங்கத்தின் அவசர ஆலோசனைக் கூட்டம் சென்னையில் நேற்று நடைபெற்றது. இதில், தண்ணீர் எடுக்க இடம் இல்லை என்பதாலும், கிடைக்கும் இடங்களில் தண்ணீர் எடுக்க எதிர்ப்பு கிளம்புவதாலும் வாகனங்களை இயக்குவதை நாளை முதல் நிறுத்துவதென முடிவெடுக்கப்பட்டது.

அதுமட்டுமில்லாமல் திருவள்ளூர், விழுப்புரம், திருப்பூர், ஈரோடு உள்ளிட்ட மாவட்டங்களில் தண்ணீர் லாரிகள் சிறைபிடிக்கப்படுவதாக சங்கத்தின் மாநிலத் தலைவர் நிஜலிங்கம் குற்றம் சாட்டியிருந்தார். மேலும் அரசு தங்களுக்கு போதிய பாதுகாப்பு தர நடவடிக்கை எடுக்க வேண்டும் என தனியார் தண்ணீர் லாரி உரிமையாளர்கள் கோரிக்கை விடுத்திருந்தனர். 

இந்நிலையில் இந்த பிரச்னையில் போதிய பாதுகாப்பு அளிப்பதாக அரசு உறுதியளித்ததால் நாளை தொடங்கவிருந்த தண்ணீர் லாரி வேலைநிறுத்தத்தை வாபஸ் பெறுவதாக தனியார் தண்ணீர் லாரி சங்கம் அறிவித்துள்ளது

Advertisement:
இது தொடர்பான செய்திகள் :
Advertisement:
Advertisement:
[X] Close