[X] Close
JUST IN
  • BREAKING-NEWS தமிழகத்தில் 2 நாட்கள் மழைக்கு வாய்ப்பு: சென்னை வானிலை ஆய்வு மையம் தகவல்
  • BREAKING-NEWS குழந்தைகளை கடத்தி வைத்த புகாரில் நித்தியானந்தா மீது கிரிமினல் வழக்குப்பதிவு
  • BREAKING-NEWS 2021-ஆம் ஆண்டு தேர்தலில் தமிழக மக்கள் அதிசயம் நிகழ்த்துவார்கள்: ரஜினிகாந்த்
  • BREAKING-NEWS தமிழகத்தின் 33‌-ஆவது மாவட்டமாக இன்று உதயமாகிறது தென்காசி

விதிமீறல் பேனர்கள் அச்சிடுவதை அரசு தான் தடுக்க வேண்டும் -உயர்நீதிமன்றம்

the-madras-high-court-has-said-government-to-prevent-illegal-banners-are-not-satisfactory

சட்டவிரோத பேனர்களை தடுக்க அரசு எடுத்த நடவடிக்கைகள் திருப்திகரமாக இல்லை என சென்னை உயர்நீதிமன்றம் தெரிவித்துள்ளது.

சட்டவிரோத பேனர்களை அகற்ற வேண்டும் என்ற 2017ஆம் ஆண்டு உயர் நீதிமன்ற உத்தரவை அமல்படுத்தாத தமிழக அரசின் மீது டிராபிக் ராமசாமி நீதிமன்ற அவதூறு வழக்கு தொடர்ந்திருந்தார். இந்த வழக்கு இன்று நீதிபதிகள் எம்.எம். சுந்தரேஷ் மற்றும் எம். நிர்மல்குமார் அமர்வில் விசாரணைக்கு வந்தபோது, விதிமீறல் பேனர்கள் அச்சிடுவதை அச்சிடும் இடத்திலேயே தடுக்கும் வகையில் அரசு கொண்டு வந்த சட்டத்தை எதிர்த்தும், அச்சகங்களுக்கு எதிராக அரசு எடுக்கும் நடவடிக்கைகளை எதிர்த்தும் அச்சகங்கள் தொடர்ந்த வழக்குகள் உயர்நீதிமன்றத்தில் நிலுவையில் இருப்பதாக அரசு கூடுதல் தலைமை வழக்குரைஞர் எஸ்.ஆர். ராஜகோபாலன் தெரிவித்தார்.

Image result for உயர்நீதிமன்றம்

இதற்கு அதிருப்தி தெரிவித்த நீதிபதிகள், விதிமீறல் பேனர்கள் அச்சிடுவதை அரசு தான் தடுக்க வேண்டும் என்றும், நீதிமன்றத்தின் வேலை இல்லை என தெரிவித்தனர். அரசியல் கட்சி தலைவர்கள், சினிமா பிரபலங்கள், விஐபி-கள் வைக்கும் பேனர்களை தினந்தோறும் பார்க்க முடிகிறது என நீதிபதிகள் கண்டனம் தெரிவித்தனர். அதன்பின்ன பேனர் வழக்கு குறித்து தலைமை செயலாளர் அறிக்கை தாக்கல் செய்துவிடுவதாக அரசு தலைமை வழக்குரைஞர் விஜய் நாராயண் தெரிவித்தார். இதனையடுத்து வழக்கு விசாரணையை ஜூலை 1ஆம் தேதிக்கு நீதிபதிகள் தள்ளிவைத்து உத்தரவிட்டனர்.

Advertisement:
இது தொடர்பான செய்திகள் :
Advertisement:
Advertisement:
[X] Close