[X] Close
JUST IN
  • BREAKING-NEWS தமிழ்நாடு திரைப்பட இயக்குநர் சங்கத்தேர்தலில் தலைவர் பதவிக்கு போட்டியிட்ட ஆர்.கே.செல்வமணி வெற்றி
  • BREAKING-NEWS இந்தோனேஷியா ஓபன் பேட்மிண்டன்: வெள்ளிப்பதக்கம் வென்றார் சிந்து
  • BREAKING-NEWS ''அதிமுகவின் உண்மையான தொண்டர்கள் திமுகவில் இணைய வேண்டும்'' - திமுக தலைவர் ஸ்டாலின்
  • BREAKING-NEWS ஆங்கிலப் புத்தாண்டில் இந்து கோயில்களை திறக்க தடை கோரிய வழக்கு தள்ளுபடி

மருத்துவமனைக் காவலர்களான திருநங்கைகள் - புதிய தொடக்கம்

8-transgenders-appointed-hospital-securities-in-thanjavur

தமிழகத்தில் முதன்முறையாக தஞ்சாவூர் அரசு மருத்துவமனை ஒன்றில் 8 திருநங்கைகள் காவலர்களாகப் பணி நியமனம் செய்யப்பட்டுள்ளனர்.

தமிழகம் உட்பட இந்தியா முழுவதும் திருநங்கைகள் தங்களுக்கான சமூக அங்கீகாரத்திற்காக போராடி வருகின்றனர். அனைத்து வேலைவாய்ப்புகளும் தங்களுக்கு கிடைக்கவில்லை எனக்கூறி குரல் எழுப்பி வருகின்றனர். அதேசமயம் நீதித்துறை, காவல்துறை, கலைத்துறை உள்பட பல துறைகளில் சாதித்தும் உள்ளனர். இந்நிலையில் முதன்முறையாக தமிழக மருத்துவமனையொன்றில் காவலர்களாக திருநங்கைகள் நியமிக்கப்பட்டுள்ளனர். 

தஞ்சாவூர் ராஜா மிராசுதார் அரசு மருத்துவமனையில் உள்ள சீமாங்க் திட்டத்தின் கீழ் 24 மணி நேரமும் இயங்கும் மகப்பேறு பிரிவுக்காக, ஒப்பந்த அடிப்படையில் காவலர்களைத் தேர்வு செய்யும் ஏற்பாடுகள் நடைபெற்றன. இதற்காக எட்டு திருநங்கைகள் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளனர்.


 
மருத்துவமனையில் வேலைவாய்ப்பு வழங்கியதற்கு திருநங்கைகள் உட்பட பலரும் வரவேற்பு தெரிவித்துள்ளனர். முன்னதாக, பணியாணை பெற்ற இந்த எட்டு பேரும், ஜூன் 19 சென்னைத் தலைமைச்செயலகத்தில் சுகாதாரத் துறை அமைச்சர் விஜயபாஸ்கரைச் சந்தித்து நன்றி தெரிவித்தனர். தமிழகச் சுகாதாரத் துறைச் செயலாளர் பீலா ராஜேஷ், தஞ்சாவூர் அரசு மருத்துவக் கல்லூரி முதல்வர் குமுதா உட்பட மருத்துவத் துறை அதிகாரிகள் பலர் இந்த நிகழ்ச்சியில் உடனிருந்தனர். 

Advertisement:
இது தொடர்பான செய்திகள் :
Advertisement:
Advertisement:
[X] Close