[X] Close
JUST IN
  • BREAKING-NEWS டெல்லியில் மைக்ரோசாஃப்ட் இணை-நிறுவனர் பில்கேட்ஸ், பிரதமர் நரேந்திர மோடியுடன் சந்திப்பு
  • BREAKING-NEWS போராட்டத்தில் ஈடுபட்ட அரசு மருத்துவர்கள் மீதான பழிவாங்கும் நடவடிக்கைகளை நிறுத்த வேண்டும் - உயர்நீதிமன்றம்
  • BREAKING-NEWS உள்ளாட்சித் தேர்தலில் சென்னையை தனித்தொகுதியாக அறிவிக்க வேண்டும் – சீமான்
  • BREAKING-NEWS அதிசயம், அதிர்ஷ்டத்தை நம்புகிறவர் ரஜினி - அமைச்சர் ஜெயக்குமார்
  • BREAKING-NEWS ராஜஸ்தானில் பேருந்து - லாரி மோதி விபத்து: 14 பேர் உயிரிழப்பு
  • BREAKING-NEWS இலங்கையின் அதிபராக பதவியேற்றார் கோத்தபய ராஜபக்ச
  • BREAKING-NEWS டிசம்பர் 2-ல் உள்ளாட்சித் தேர்தல் அறிவிப்பாணை: மாநில தேர்தல் ஆணையம் தகவல்

ஏரியை தூர்வாரிய கிராம மக்கள்..! இளைஞர்களின் முயற்சியால் அசத்தல்..!

youth-new-attempt-to-save-ground-water

தருமபுரி அருகே இளைஞர்கள் முயற்சியால் கிராம மக்கள் ஏரியை தூர்வாரி அசத்தியுள்ளனர்.

தருமபுரி மாவட்டம் முழுவதும் கடுமையான தண்ணீர் பற்றாக்குறை ஏற்பட்டுள்ளது. இதனால் நிலத்தடி நீர்மட்டம் கடுமையாக பாதிக்கப்பட்டு விவசாயம் மற்றும் குடிநீருக்கு தண்ணீர் கிடைக்காமல் மக்கள் மிகுந்த சிரமத்திற்குள்ளாகி வருகின்றனர். இதனால் செக்காரப்பட்டி கிராமத்தைச் சேர்ந்த இளைஞர்கள் நிலத்தடி நீரைச் சேமிக்க ஏரிகளை தூர்வார வேண்டும் என முடிவெடுத்தனர். கிராம மக்களும்இ இளைஞர்களின் முடிவுக்கு வரவேற்பு தெரிவித்தனர்.

அதன்படி கிராம மக்கள் இரண்டு நாட்கள் கூலி இல்லாமல் வேலை செய்து கோம்பைக்காடு கசிவுநீர் குட்டையை தூர்வாரினர். இந்த ஏரியில் தண்ணீர் வரும் காலங்களில் அதிக அளவிலான பறவைகள் வருவதற்கும் வாய்ப்பு உள்ளது. இந்தப் பறவைகளுக்கு தேவையான உணவினை இங்கே கிடைப்பதற்கு ஏதுவாக கொய்யா,  நாவல் உள்ளிட்ட செடிகளை நட்டு வைத்துள்ளனர்.

மேலும் ஏரி நிரம்பி உபரி நீர் வெளியேறும் காலங்களில், தண்ணீரை வீணாக்க கூடாது என்பதற்காக உபரி நீர் செல்லும் பாதைகளில் சுமார் 15 அடி ஆழத்திற்கு மழை நீர் சேகரிப்புத் தொட்டிகளை அமைத்து தண்ணீரை சேகரிக்கவும் திட்டமிட்டுள்ளனர். ஏரியை தூர்வாரும் பணிக்கு தொண்டு நிறுவனம் ஒன்றும் நிதியுதவி அளித்துள்ளது.

Advertisement:
இது தொடர்பான செய்திகள் :
Related Tags : ஏரிதருமபுரிDharmapuriYouth
Advertisement:
Advertisement:
[X] Close