[X] Close
JUST IN
  • BREAKING-NEWS தேர்தல் விதிகளை மீறியதாக தமிழக காங்கிரஸ் கமிட்டி தலைவர் கே.எஸ்.அழகிரி மீது 3 பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு
  • BREAKING-NEWS இடைத்தேர்தல் தேர்தலில் நாங்குநேரி - 66.10%, விக்கிரவாண்டி - 84.36% வாக்குப்பதிவு - தலைமை தேர்தல் அதிகாரி சத்யபிரதா சாஹூ
  • BREAKING-NEWS தொடர் மழை காரணமாக நீலகிரி மாவட்டத்தில் உள்ள பள்ளி, கல்லூரிகளுக்கு நாளை விடுமுறை அறிவிப்பு - ஆட்சியர்
  • BREAKING-NEWS தீபாவளிக்கு மறுநாள் அக்.28ஆம் தேதி (திங்கள் கிழமை) அரசு விடுமுறை

“ஆம்புலன்ஸில் உயிருக்கு போராடிய நோயாளி”- ஆட்டோ மோதியதில் உயிரிழப்பு

accident-near-sivagangai

திருப்புவனத்தில் 108 ஆம்புலன்ஸ் மீது பயணிகள் ஆட்டோ மோதியதில் 108 ஆம்புலன்ஸ் ஓட்டுநர் படுகாயம் அடைந்தார்.

சிவகங்கை மாவட்டம் திருப்புவனத்தை சேர்ந்தவர் கீர்த்தி ராஜன் (20). இவருக்கு திடீரென மூச்சுத் திணறல் ஏற்பட்டிருக்கிறது. இதனையடுத்து அக்கம்பக்கத்தினர் இதுகுறித்து 108 ஆம்புலன்ஸ்க்கு தகவல் கொடுத்தனர். அதன்பேரில் அங்கு வந்த ஆம்புலன்ஸ், கீர்த்தி ராஜனை ஏற்றிக் கொண்டு மதுரை அரசு மருத்துவமனைக்கு புறப்பட்து. ஆனால் செல்லும் வழியிலேயே கீர்த்தி ராஜன் உடல்நிலை மேலும் கவலைக்கிடமாகியுள்ளது.

இதனையடுத்து சுதாகரித்த ஆம்புலன்ஸ் டிரைவர், உடனே திருப்புவனத்தில் உள்ள தனியார் மருத்துவமனைக்கு ஆம்புலன்ஸை கொண்டுச் சென்றார். அங்கு தனியார் மருத்துவமனை வாசலில் 108 ஆம்புலன்ஸை நிறுத்திவிட்டு நோயாளியை இறக்கியுள்ளார். அபோது அந்தப்பக்கமாக வந்த பயணிகள் ஆட்டோ 108 ஆம்புலன்ஸ் மீது திடீரென மோதியது. இதில் 108 ஆம்புலன்ஸ் ஓட்டநர் ரமேஷ் படுகாயம் அடைந்தார். அத்துடன் நோயாளி கீர்த்தி ராஜனும் உயிரிழந்தார். இந்த சம்பவம் அப்பகுதியில் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

Advertisement:
Advertisement:
Advertisement:
[X] Close