[X] Close
JUST IN
  • BREAKING-NEWS நீட் தேர்வு ஆள்மாறாட்ட வழக்கில் சென்னை மருத்துவ மாணவரின் தந்தை சரவணனின் ஜாமீன் மனுவை தள்ளுபடி செய்தது உயர்நீதிமன்ற கிளை
  • BREAKING-NEWS மேயர் பதவிக்கான தேர்தலை மறைமுகமாக நடத்துவதற்கு அவசரச் சட்டம் கொண்டுவர தமிழக அமைச்சரவைக் கூட்டத்தில் முடிவு என தகவல்
  • BREAKING-NEWS உள்ளாட்சிகளில் உயர்த்தப்பட்ட சொத்துவரியை மறுபரிசீலனை செய்ய நிதித்துறை முதன்மை செயலாளர் தலைமையில் குழு அமைக்கப்பட்டுள்ளது - அமைச்சர் எஸ்.பி.வேலுமணி
  • BREAKING-NEWS சர்க்கரை ரேஷன் அட்டைகளை தகுதியின் அடிப்படையில் அரிசி ரேஷன் அட்டைகளாக மாற்றிக்கொள்ளலாம் - தமிழக அரசு
  • BREAKING-NEWS தூத்துக்குடி மக்களவை தேர்தல் வழக்கு: கனிமொழி தொடர்ந்த மனுவை தள்ளுபடி செய்தது சென்னை உயர்நீதிமன்றம்
  • BREAKING-NEWS ஒடிசாவில் நடிகர் கமல்ஹாசனுக்கு கவுரவ டாக்டர் பட்டம் வழங்கினார் முதல்வர் நவீன் பட்நாயக்
  • BREAKING-NEWS சென்னை ஐஐடி மாணவி பாத்திமா தற்கொலை தொடர்பாக விசாரணை நடத்த மத்திய குற்றப்பிரிவு காவல்துறையினர் கேரளா விரைகின்றனர்

முதுகலை நாட்டுப்புறவியல் படிப்பில் முதல் திருநங்கை

first-transgender-in-master-graduation-in-madurai-kamaraj-university

தமிழகத்திலேயே முதன்முறையாக திருநங்கை ஒருவரை முதுகலை நாட்டுப்புறவியல் படிப்பில் 50 சதவிகித கட்டண சலுகையுடன் மதுரை காமராஜர் பல்கலைக்கழகம் சேர்த்துக் கொண்டுள்ளது.

திருநங்கைகளுக்கு முறையான அங்கீகாரம் இல்லாத நமது சமுதாயத்தில் இன்னும் கிடைக்கவில்லை. ஆகவே அவர்கள் வாழ்வில் நல்ல நிலையை அடைய வேண்டும் என்ற எண்ணத்திற்கு இது தடையாக உள்ளது. அதனை கடந்து, தனது கனவை நனவாக்கிட வேண்டும் என்ற லட்சியத்தோடு மதுரை காமராஜர் பல்கலைக்கழகத்தில் முதுகலை நாட்டுப்புறவியல் பாடப்பிரிவில் சேர்ந்துள்ளார் திருநங்கை வர்ஷா. இவர் புதுக்கோட்டை மாவட்டம் விராலிமலையைச் சேர்ந்தவர் ஆவார்.

மூன்றாம் பாலினத்தோரும் உயர்க்கல்வி பெற பல்கலைக்கழக மானியக்குழு ஏற்கெனவே வழிவகை செய்துள்ளது. இருப்பினும், பெற்றோரின் ஆதரவு இல்லாத ஒரே காரணத்தால், பல திருநங்கைகள் தங்களின் கனவை நோக்கி பயணிக்க முடிவதில்லை. வர்ஷாவின் வெற்றிப் பயணத்திற்கு மதுரை காமராஜர் பல்கலைக்கழகமும் ஒரு முக்கிய காரணம். வர்ஷாவை மாணவி‌யாக சேர்த்துக் கொண்டது மட்டுமன்றி, அவரை ஊக்குவிக்கும் பொருட்டு கல்விக் கட்டணத்தில் 50 சதவிகித சலுகையும்  வழங்கியுள்ளது. இதனால் வர்ஷா சொல்ல முடியாத அளவிற்கு மகிழ்ச்சியில் உள்ளார்.

தனக்குப் பிடித்த நாட்டுப்புறவியலை படிப்பது மட்டுமல்லாமல் திருநங்கைகளின் வாழ்க்கை தரத்தை உயர்த்தவும் பாடுபடவுள்ளதாக கூறுகிறார்.

Advertisement:
இது தொடர்பான செய்திகள் :
Advertisement:
Advertisement:
[X] Close