[X] Close
JUST IN
  • BREAKING-NEWS வளிமண்டல மேலடுக்கு சுழற்சியால் தமிழகத்தில் 3 நாட்களுக்கு மழை நீடிக்கும் - வானிலை ஆய்வு மையம்
  • BREAKING-NEWS சென்னை ராயப்பேட்டை ஒய்.எம்.சி.ஏ மைதானத்தில் அக்டோபர் 6ஆம் தேதி திமுக பொதுக்குழு கூட்டம்
  • BREAKING-NEWS நீட் ஆள் மாறாட்ட புகாரில் தொடர்புடைய மாணவர் உதித் சூர்யாவை தேடி தேனியிலிருந்து தனிப்படை காவல்துறையினர் 5பேர் சென்னை வருகை
  • BREAKING-NEWS தாய்மொழிக்கு பதிலாக இந்தியை கற்க வேண்டும் என கூறவில்லை - மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா
  • BREAKING-NEWS இந்தி திணிப்புக்கு எதிராக நாளை திமுக நடத்தவிருந்த போராட்டம் ஒத்திவைப்பு. ஆளுநரின் உறுதிமொழியை ஏற்று முடிவு எடுக்கப்பட்டதாக ஸ்டாலின் அறிவிப்பு

நிதி ஆயோக் கூட்டம் : முதலமைச்சர் பழனிசாமி நாளை டெல்லி பயணம்

edappadi-palanisamy-visit-delhi-for-niti-aayog-meeting

நிதி ஆயோக் கூட்டத்தில் பங்கேற்பதற்காக, முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி நாளை டெல்லி செல்கிறார்.

மக்களவைத் தேர்தலில் வெற்றி பெற்று பாஜக அரசு 2வது முறையாக பதவியேற்ற பிறகு, நிதி ஆயோக் கூட்டம் நடைபெறுகிறது. பிரதமர் நரேந்திர மோடி கிர்கிஸ்தான் பயணத்தை முடித்து நாடு திரும்பிய பிறகு, நாளை மறுதினம் இக்கூட்டம் நடத்தப்படுகிறது. இதில் பங்கேற்பதற்காக முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி நாளை டெல்லி செல்கிறார். அவருடன் தமிழக அமைச்சர்கள் சிலரும், அதிமுக நாடாளுமன்ற உறுப்பினர்களும் டெல்லி செல்வதாக தகவல் வெளியாகியுள்ளது. 

தமிழகத் தலைமைச் செயலாளர் கிரிஜா வைத்தியநாதன் உள்ளிட்ட அதிகாரிகளும் முதல்வருடன் டெல்லி செல்வார்கள் எனக் கூறப்படுகிறது. புதுச்சேரி முதல்வர் நாராயணசாமியும் நிதி ஆயோக் கூட்டத்தில் கலந்து கொள்கிறார். விவசாயத்தை மேம்படுத்துவது, விவசாயிகளின் நல்வாழ்வு, பொருளாதார வளர்ச்சி வேகம் பெற நடவடிக்கைகள், வேலைவாய்ப்புகளை பெருக்குவது போன்ற முக்கிய விவகாரங்கள் குறித்து நிதி ஆயோக் கூட்டத்தில் ஆலோசிக்கப்படுகிறது. 

ஜூலை 5ஆம் தேதி மத்திய அரசின் நிதி நிலை அறிக்கை தாக்கல் செய்யப்படவுள்ள நிலையில், டெல்லியில் நிதி ஆயோக் கூட்டம் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. இந்தக் கூட்டத்தின் போது பிரதமர் மோடி மற்றும் உள்துறை அமைச்சர் அமித் ஷா ஆகியோரை முதலமைச்சர் பழனிசாமி சந்தித்து பேசுவார் எனத் தெரிகிறது.

Advertisement:
இது தொடர்பான செய்திகள் :
Advertisement:
Advertisement:
[X] Close