[X] Close
JUST IN
  • BREAKING-NEWS தமிழகம், புதுச்சேரியில் குறைந்த காற்றழுத்த தாழ்வு நிலையால் 3 நாட்களுக்கு மழை பெய்யும் - சென்னை வானிலை ஆய்வு மையம்
  • BREAKING-NEWS தமிழகத்தில் 3 இடங்களில் ஹைட்ரோகார்பன் எடுக்க இன்று மாலை ஒப்பந்தம் கையெழுத்தாகிறது டெல்லி தனியார் ஓட்டலில் ஓஎன்ஜிசி நிறுவனத்துக்கு அனுமதி வழங்குகிறார் அமைச்சர் தர்மேந்திர பிரதான்
  • BREAKING-NEWS தமிழ் உள்ளிட்ட அனைத்து பிராந்திய மொழிகளிலும் அஞ்சல் துறை தேர்வுகள் நடத்தப்படும் - மாநிலங்களவையில் ரவிசங்கர் பிரசாத் அறிவிப்பு
  • BREAKING-NEWS அறிமுகமானது முறைப்படுத்தப்பட்ட வாடகைத் தாய் மசோதா
  • BREAKING-NEWS தனியார் மருத்துவமனைக்கு ராஜகோபாலை மாற்ற நீதிமன்றம் அனுமதி

பள்ளி மாணவியை பாலியல் வன்கொடுமை செய்தவர் கைது 

police-arrested-a-driver-with-a-sexually-abused-school-girl-in-the-car

திருவள்ளூர் அருகே பள்ளி மாணவியை காரில் கடத்தி பாலியல் வன்கொடுமை செய்த கார் ஓட்டுநர் ஒருவரை பொன்னேரி அனைத்து மகளிர் போலீசார் கைது செய்தனர்.

திருவள்ளூர் மாவட்டம் பொன்னேரியை சேர்ந்த பள்ளி மாணவி ஒருவர் அதே பகுதியில் பன்னிரண்டாம் வகுப்பு படித்து வருகிறார். இந்நிலையில் அந்த பள்ளி மாணவியை கும்மிடிப்பூண்டி பகுதியைச் சேர்ந்த வினோத் குமார் என்ற கார் ஓட்டுநர் கத்தி முனையில் மாணவியை மிரட்டி தனது காரில் கடத்தி சென்றுள்ளார். அப்போது யாரும் இல்லாத பகுதியில் காரை நிறுத்தி விட்டு அந்த மாணவியிடம் தகறாறு செய்து அந்த மாணவியை பாலியல் வன்கொடுமை  செய்ததாக கூறப்படுகிறது. 

Image result for மருமகளை வன்கொடுமை மாமனார்

இதனனையறிந்த அந்த மாணவியின் பெற்றோர் உடனடியாக பொன்னேரி மகளிர் காவல் நிலையத்தில் புகார் அளித்தனர். இதனையடுத்து பாதிக்கப்பட்ட அந்த மாணவியின் பெற்றோர் அளித்த புகாரின் பேரில் போக்சோ சட்டத்தின் கீழ் வழக்கு பதிவு செய்து கைது செய்தனர். பின்னர் குற்றவாளியை திருவள்ளூரில் உள்ள மாவட்ட குற்றவியல் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்திய பொன்னேரி மகளிர் காவல் துறையினர், நீதிபதியின் உத்தரவின் போரில் குற்றவாளியை சென்னை புழல் மத்திய சிறையில் அடைத்தனர்.

Advertisement:
இது தொடர்பான செய்திகள் :
Advertisement:
Advertisement:
[X] Close