[X] Close
JUST IN
  • BREAKING-NEWS குடியுரிமை திருத்த சட்டத்திற்கு எதிராக போராடிய மாணவர்கள் மீது நடைபெற்ற தடியடிக்கு கண்டனம் தெரிவித்து, டெல்லியில் காங்கிரஸ் கட்சியின் பொதுச்செயலாளர் பிரியங்கா காந்தி தர்ணா போராட்டம்
  • BREAKING-NEWS குடியுரிமை சட்டத்தை ஆதரித்த அதிமுக அரசை கண்டித்து நாளை மறுநாள் முதல்வர் இல்லம் முற்றுகை போராட்டம் நடத்தப்படும் - ஜவாஹிருல்லா
  • BREAKING-NEWS உள்ளாட்சித் தேர்தல்: மாநில தேர்தல் ஆணையருக்கு எதிராக, உச்சநீதிமன்றத்தில் திமுக அவமதிப்பு வழக்கு
  • BREAKING-NEWS குற்றவாளி என அறிவிக்கப்பட்டுள்ள எம்எல்ஏ குல்தீப் சிங்கிற்கான தண்டனை விவரத்தை நாளை அறிவிக்கிறது டெல்லி தீஸ் ஹசாரி நீதிமன்றம்
  • BREAKING-NEWS உன்னாவ் பெண் பாலியல் வன்கொடுமை வழக்கு: எம்எல்ஏ குல்தீப் சிங் செங்காரை குற்றவாளி என அறிவித்தது டெல்லி நீதிமன்றம்
  • BREAKING-NEWS தேசிய குடியுரிமை திருத்த சட்டத்திற்கு எதிராக உச்சநீதிமன்றத்தில் மக்கள் நீதி மய்யம் சார்பில் வழக்கு
  • BREAKING-NEWS ஜாமியா பல்கலைக்கழக மாணவர்கள் மீது தடியடி- டெல்லியில் விடியவிடிய போராட்டம்

செந்தில் பாலாஜி மீது தேர்தல் அதிகாரியிடம் அதிமுக புகார்

admk-complaint-against-dmk-candidate-senthil-balaji

அரவக்குறிச்சி தொகுதி திமுக வேட்பாளர் செந்தில் பாலாஜி மீது தமிழக தேர்தல் அதிகாரியிடம் அதிமுகவினர் புகார் தெரிவித்துள்ளனர். 

மக்களவைக்கான இறுதிக்கட்ட தேர்தல் வாக்குப்பதிவு இன்று நடந்து வருகிறது. தமிழகத்தில் நான்கு சட்டப்பேரவை இடைத் தேர்தலுக்கான வாக்குப் பதிவும் 13 வாக்குச்சாவடிகளில் மறுவாக்குப் பதிவும் இன்று நடந்து வருகிறது. இதில், அரவக்குறிச்சி தொகுதிக்குட்பட்ட தோட்டக் குறிச்சி வாக்குச்சாவடியை பார்வையிட, திமுக வேட்பாளர் செந்தில் பாலாஜி இன்று காலை வருவதாக இருந்தது.

அவரை வரவேற்க, திமுக தொண்டர்கள் வாக்குச்சாவடிக்கு வெளியே, 300 மீட்டர் தொலைவில் திரண்டிருந்தனர். அப்போது அங்கு வந்த போலீசார், அவர்களை கலைந்து செல்லும்படி கூறினர். ’நாங்கள் வாக்கு சாவடியில் இருந்து முந்நூறு மீட்டருக்கு வெளியேதான் நிற்கிறோம். இங்கிருந்து ஏன் வெளியேற வேண்டும். இதனால் யாருக்கு என்ன பாதிப்பு?’’ என்று திமுகவினர் கேட்டனர்.

இதையடுத்து திமுக தொண்டர்களுக்கும் போலீசாருக்கும் வாக்குவாதம் ஏற்பட்டது. இதனால் அந்தப் பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது. இந்நிலை யில், வாக்காளர்களை வாக்களிக்க விடாமல் தடுப்பதாகவும் வாகனம் மூலம் ஆட்களை கொண்டு வந்து வாக்களிக்க வைக்க ஏற்பாடு செய்வதாகவும், திமுக வேட்பாளர் செந்தில்பாலாஜி மீது அதிமுகவினர் தமிழக தேர்தல் அதிகாரி சத்யபிரதா சாஹூவிடம் புகார் தெரிவித்துள்ளனர்.

Advertisement:
இது தொடர்பான செய்திகள் :
Advertisement:
Advertisement:
[X] Close