[X] Close
JUST IN
  • BREAKING-NEWS கோழிப்பண்ணை உரிமையாளர்கள் சோளத்தை வரியின்றி இறக்குமதி செய்ய அனுமதிக்க வேண்டும்- பிரதமர் மோடிக்கு முதல்வர் பழனிசாமி கடிதம்
  • BREAKING-NEWS கர்நாடக சட்டப்பேரவையில் வரும் 18ம் தேதி காலை 11 மணிக்கு நம்பிக்கை வாக்கெடுப்பு நடைபெறுகிறது
  • BREAKING-NEWS முன்னாள் அமைச்சர் கல்ராஜ் மிஷ்ரா ஹிமாச்சல பிரதேசத்தின் புதிய ஆளுநராக நியமனம் . ஹிமாச்சல் ஆளுநராக இருந்த ஆச்சார்யா தேவ்ரட் குஜராத் ஆளுநராக பணியிடமாற்றம்
  • BREAKING-NEWS ‘பெருங்களத்தூர் டூ சிங்கப்பெருமாள் கோவில்- 8 வழிச்சாலை’ : முதல்வர் அறிவிப்பு
  • BREAKING-NEWS தேசிய புலனாய்வு அமைப்பான என்ஐஏவுக்கு கூடுதல் அதிகாரம் அளிக்கும் மசோதாவுக்கு மக்களவையில் ஒப்புதல் அளிக்கப்பட்டது

விளையாட்டாய் இரும்பு ஆணியை விழுங்கிய சிறுவன் !

the-small-boy-swallowed-the-iron-nail-at-hosur

கிருஷ்ணகிரி மாவட்டம் ஓசூர் அருகே இரும்பு ஆணியை விழுங்கிய 5 வயது சிறுவனுக்கு அரசு மருத்துவமனை மருத்துவர்கள் சிகிச்சை அளித்து வருகின்றனர்.

ஓசூர் அருகே உள்ள போடிச்சிப்பள்ளி கிராமத்தைச் சேர்ந்தவர் வெங்கட்ராம். இவரது 5 வயது மகன் விஸ்வநாத், இன்று காலை தனது வீட்டின் முன்பு விளையாடிக் கொண்டிருந்தபோது, திடீரென அங்கு இருந்த இரும்பு ஆணியை, விளையாட்டாய் எடுத்து வாயில் போட்டு முழங்கியுள்ளான். ஆணி வயிற்றுக்குள் சிக்கி கொண்டது. இதனால் அச்சமுற்ற விஸ்வநாத், இது குறித்து தனது பெற்றோரிடம் தகவல் தெரிவித்துள்ளார்.

இதனைத்தொடர்ந்து உடனடியாக சிறுவனை கெலமங்கலம் அரசு ஆரம்ப சுகாதார நிலையத்திற்கு அழைத்துச் சென்றனர். அங்கு பரிசோதனை செய்த மருத்துவர்களால் ஆணியை எடுக்க முடியவில்லை. இதனையடுத்து மருத்துவர்களில் அறிவுரையின் பேரில் ஓசூர் அரசு மருத்துவமனையில் சிறுவனை அனுமதித்தனர். அங்கு அவருக்கு ஸ்கேன், எக்ஸ்ரே போன்ற சோதனை மேற்கொள்ளபட்டடு. அப்போது சிறுவன் விழுங்கிய ஆணி, அவனது வயிற்றுப் பகுதியில் சிக்கி இருப்பது தெரிந்தது. இந்த ஆணியை எடுப்பதில் மிகவும் சிரமம் உள்ளதாக கூறிய ஓசூர் அரசு மருத்துவமனை மருத்துவர்கள், மேல் சிகிச்சைக்காக  கிருஷ்ணகிரியில் உள்ள அரசு மருத்துவமனைக்கு சிறுவனை அனுப்பி வைத்தனர்.

Advertisement:
இது தொடர்பான செய்திகள் :
Advertisement:
Advertisement:
[X] Close