[X] Close
JUST IN
  • BREAKING-NEWS ராஜீவ்காந்தி கொலை குறித்து சீமான் பேசியது தொடர்பாக மாவட்ட தேர்தல் அதிகாரியிடம் விரிவான அறிக்கை கேட்டுள்ளார் தமிழக தலைமை தேர்தல் அதிகாரி சத்யபிரதா சாஹூ
  • BREAKING-NEWS நீட் ஆள்மாறாட்ட வழக்கில் மாணவர் இர்பானின் காவலை அக்டோபர் 25 வரை நீட்டித்தது தேனி நீதிமன்றம்
  • BREAKING-NEWS நாளை முதல் காலவரையற்ற வேலைநிறுத்தம்: ஆவின் பால் டேங்கர் லாரி ஒப்பந்த உரிமையாளர்கள் அறிவிப்பு
  • BREAKING-NEWS இன்று முதல் 4 நாட்களுக்கு தமிழகத்தில் கனமழைக்கு வாய்ப்புள்ளதாக வானிலை மையம் அறிவிப்பு

அரக்கோணத்தில் தயார் நிலையிலிருக்கும் தேசிய பேரிடர் மீட்புப் படை

fani-cyclone-ndrfon-high-alert

ஃபோனி புயல் பாதிப்புகளிலிருந்து பாதுகாக்கும் முன்னேற்பாடாக சென்னை எழும்பூர் ரயில்வே அலுவலகத்தில் 2 குழுக்களும், அரக்கோணத்தில் 12 குழுக்களும் தயார் நிலையில் உள்ளதாக தேசிய பேரிடர் மீட்புப் படை தெரிவித்துள்ளது.

வங்கக்கடலில் உருவான ஃபோனி புயலானது, அதிதீவிர புயலாக வலுப்பெற்று தற்போது சென்னைக்கு வடகிழக்கே 470 கி.மீ தொலைவில் நிலைகொண்டுள்ளது. இந்த ஃபோனி புயலானது மேலும் வடமேற்கு திசையில் நகர்ந்து ஒடிசா மாநிலத்தின் பூரி பகுதியில் கரையைக் கடக்க வாய்ப்பு உள்ளதாக கணிக்கப்பட்டுள்ளது. எனவே வங்கக்கடல் பகுதியில் 30 முதல் 40 கி.மீ வேகத்தில் காற்று வீசக்கூடும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதனால் மீனவர்கள் மத்திய மேற்கு வங்கக்கடல் பகுதிக்குச் செல்ல வேண்டாம் என அறிவுறுத்தப்பட்டுள்ளது.

இந்நிலையில்  ஃபோனி புயல் பாதிப்புகளிலிருந்து பாதுகாக்கும் முன்னேற்பாடாக 5 மாநிலங்களில் 47 குழுக்கள் தயார் நிலையில் இருப்பதாக தேசிய பேரிடர் மீட்புப் படை தெரிவித்துள்ளது. மேற்கு வங்க மாநிலத்தில் 6 குழுக்களும், ஒடிசாவில் 25 குழுக்களும், ஆந்திராவில் 12 குழுக்களும், சென்னை எழும்பூர் ரயில்வே அலுவலகத்தில் 2 குழுக்களும், கேரளாவில் 2 குழுக்களும் தயார் நிலையில் இருப்பதாக தேசிய பேரிடர் மீட்புப் படை தெரிவித்துள்ளது. இதுதவிர தேவைப்பட்டால் எந்த இடத்திற்கும் சென்று உதவுவதற்காக 12 குழுக்கள் அரக்கோணத்தில் தயார் நிலையில் இருப்பதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Advertisement:
இது தொடர்பான செய்திகள் :
Advertisement:
Advertisement:
[X] Close