[X] Close
JUST IN
  • BREAKING-NEWS ஒரே சமயத்தில் மக்களவை மற்றும் மாநில சட்டசபைகளுக்கு தேர்தல் நடத்துவது குறித்து மீண்டும் ஆலோசனை நடத்த மோடி அரசு முடிவு
  • BREAKING-NEWS மீன்பிடி தடைக்கால நிவாரண தொகையாக மீனவர் குடும்பம் ஒன்றுக்கு ரூ.5000 வழங்கப்படும்- தமிழக அரசு
  • BREAKING-NEWS நிதி ஆயோக் கூட்டத்தில் தமிழக மக்களின் உணர்வுகளை முதல்வர் பழனிசாமி எதிரொலிக்கவில்லை- திமுக தலைவர் மு.க.ஸ்டாலின்
  • BREAKING-NEWS பொறியியல் படிப்பிற்கான தரவரிசைப் பட்டியல் ஜூன் 20ம் தேதி வெளியிடப்படும்- அமைச்சர் கே.பி.அன்பழகன்
  • BREAKING-NEWS சென்னையில் பெட்ரோல் லிட்டருக்கு ரூ. 72.64 காசுகளாகவும், டீசல் லிட்டருக்கு ரூ. 67.52 காசுகளாகவும் விலை நிர்ணயம்
  • BREAKING-NEWS கோதாவரி - காவிரி நதிநீர் இணைப்பை முதன்மையாக நிறைவேற்ற பிரதமர் மற்றும் நீர்வள அமைச்சரிடம் கோரிக்கை வைத்துள்ளேன் - முதல்வர் பழனிசாமி
  • BREAKING-NEWS தமிழகத்தின் ஒப்புதலின்றி மேகதாதுதுவில் அணை கட்ட அனுமதி வழங்க கூடாது என கோரிக்கை விடுத்துள்ளோம் - முதல்வர் பழனிசாமி

பீகார் இளைஞர் துண்டு துண்டாக வெட்டி படுகொலை 

a-couple-has-arrest-for-brutal-murder-case-in-erode

ஈரோடு அருகே பீகார் மாநிலத்தை சேர்ந்த நவீன்குமார் என்ற இளைஞரை பீகார் தம்பதியினர் துண்டு துண்டாக வெட்டி படுகொலை செய்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

பீகார் மாநிலத்தை சேர்ந்த நிதீஷ்குமார்-சசி தம்பதியினர். இவர்கள் ஈரோடு மாவட்டம் ராசாம்பாளையம் அடுத்த முத்துமாணிக்கம் நகர் பகுதியில் கடந்த ஏழு மாதமாக வாடகை வீட்டில் தங்கி, சாய ஆலையில் கூலி வேலை செய்து வந்துள்ளனர். இவர்கள் அடிக்கடி சொந்த ஊரான பீகாருக்கு ரயிலில் சென்றுள்ளனர். அப்போது ரயிலில் பீகாரை சேர்ந்த நவீன்குமார் என்ற இளைஞர் பழக்கமாகியுள்ளார். பின்னர் நவீன்குமார் இவர்கள் வீட்டில் தங்கி,ஈரோட்டில் கூலி வேலை செய்து வந்துள்ளார்.

Image result for crime murder

இந்த நிலையில் நிதீஷ்குமார்-சசி தம்பதியினர் திடீரென நவீன்குமாரின் பெற்றோருக்கு போன் மூலம் தொடர்பு கொண்டு 2 லட்சம் ரூபாய் கேட்டு மிரட்டல் விடுத்ததாக கூறப்படுகிறது. அதிர்ச்சியடைந்த நவீன்குமார் பெற்றோர், இது குறித்து பீகார் காவல் நிலையத்தில் புகார் கொடுத்தனர். இந்த புகாரின் பேரில் பீகார் காவல்துரையினர் நவீன்குமாரை தேடி ஈரோட்டிற்கு வந்தனர்.

இதனிடையே நிதீஷ்குமார் மற்றும் சசி ஆகிய இருவரும் நவீன்குமாரை இரும்புகளை துண்டாக்க பயன்படும் ஆக்சா பிளேடு மூலம் தலை, கை, கால்,இடுப்பு பகுதி என தனிதனியாக துண்டுதுண்டாக வெட்டி, கொடூரமான முறையில் படுகொலை செய்து சாக்கு பையில் போட்டு மூட்டை கட்டி வைத்துவிட்டனர். இந்த சூழலில் பீகார் காவல்துறையினர் தமிழ்நாடு காவல்துறையினர் உதவியுடன் வந்து ராசாம்பாளையம் அடுத்த முத்துமாணிக்கம் நகரில் விசாரணை செய்து நிதீஷ்குமார் - சசி வீட்டில் சோதனை செய்தனர். அப்போது நவீன்குமாரை கொலை செய்து மூட்டைகட்டி வைத்திருப்பது தெரிய வந்தது. அதனை கண்டு அதிர்ச்சியடைந்த காவல்துறை நவீன்குமார் உடலை கைபற்றி உடற்கூறு ஆய்வுக்கு ஈரோடு  தலைமை மருத்துவமனைக்கு அனுப்பிவைத்தனர்.

இதனைதொடர்ந்து நிதீஷ்குமார்-சசி தம்பதியினரை காவல்துறையினர் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். மேலும் நவீன்குமார் கொலை சம்பவம் குறித்து யார்யாருக்கு தொடர்பு உள்ளது. கொலை செய்ததற்கான காரணம் என்ன ? என்பது குறித்து வீரப்பன்சத்திரம் காவல்துறையினர் தீவர விசாரணை மேற்கொண்டுள்ளனர். இக்கொடூர கொலை சம்பவம் அப்பகுதியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

Advertisement:
இது தொடர்பான செய்திகள் :
Related Tags : MurderCrimeErodeபடுகொலைகொலை
Advertisement:
Advertisement:
[X] Close