[X] Close
JUST IN
  • BREAKING-NEWS இ-சிகரெட் விற்பனை, உற்பத்தி, ஏற்றுமதி இறக்குமதிக்கு தடை - மத்திய அமைச்சரவைக் கூட்டத்தில் முடிவு
  • BREAKING-NEWS தாய்மொழிக்கு பதிலாக இந்தியை கற்க வேண்டும் என கூறவில்லை - மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா
  • BREAKING-NEWS இந்தி திணிப்புக்கு எதிராக நாளை திமுக நடத்தவிருந்த போராட்டம் ஒத்திவைப்பு. ஆளுநரின் உறுதிமொழியை ஏற்று முடிவு எடுக்கப்பட்டதாக ஸ்டாலின் அறிவிப்பு
  • BREAKING-NEWS சென்னை உள்பட மாநிலத்தின் பல்வேறு பகுதிகளில் இடிமின்னலுடன் கனமழை. வளிமண்டல மேலடுக்குச் சுழற்சி காரணமாக மழை நீடிக்கும் எனத் தகவல்

கழிவறையில் இருந்த குழந்தையின் சடலம் ! நாய் இழுத்து சென்ற அவலம்

the-body-of-the-baby-in-the-toilet-at-hosur

ஓசூர் அரசு மருத்துவமனையில் பிறந்த சில மணி நேரத்தில் இறந்த ஆண் குழந்தையின் சடலத்தை நாய் இழுத்து சென்றதை கண்டு பொதுமக்கள் அதிர்ச்சியடைந்தனர்.

கிருஷ்ணகிரி மாவட்டம் ஓசூர் அடுத்த கர்னுர் பகுதியில் வசித்து வருபவர் நாகம்மா-முரளி தம்பதியினர். இவருக்கு மூன்று குழந்தைகள் உள்ள நிலையில் 4 வது முறையாக நிறைமாத கர்ப்பிணியாகியுள்ளார். ஆரம்ப சுகாதார நிலையத்தில் மருத்துவ பரிசோதனைகள் செய்து வந்த நிலையில் நேற்று காலை பிரசவ வலி ஏற்பட்டது. இதையடுத்து அவர்கள் தனியார் மருத்துவமனைக்கு நேற்று காலை சென்றுள்ளனர். அங்கு பரிசோதித்த மருத்துவர்கள் குழந்தை எடை குறைவாக உள்ளதால் பச்சிளம் குழந்தைகள் மையத்தில் வைக்க வேண்டும். அதனால் ஓசூர் அரசு மருத்துவமனை செல்லுமாறு அறிவுறுத்தி உள்ளனர். 

இதனையடுத்து மருத்துவர்களின் ஆலோசனைப்படி ஓசூர் அரசு மருத்துவமனைக்கு நேற்று மாலை 6 மணி அளவில் நாகம்மா வந்துள்ளனர்.
 அவருக்கு அங்கு அழகான ஆண் குழந்தை பிறந்துள்ளது. குழந்தை எடை குறைவாக உள்ளதால்,பச்சிளம் குழந்தைகள் வார்டில் வைத்துள்ளனர். பின் இரவு 8 மணியளவில் அந்த ஆண் குழந்தை இறந்துவிட்டதாக கூறி குழந்தையை நாகம்மாளிடம் ஒப்படைத்துள்ளனர். இதனால் அவர்கள் அதிர்ச்சியடைந்தனர். இரவு நேரத்தில் குழந்தையின் சடலத்தை ஒப்படைத்தால் எங்கு எடுத்துச் செல்வது என்று விடை தெரியாமல் பிரசவ வார்டில் குழந்தை வைத்துள்ளனர். ஆனால் இதற்கு பிரசவ வார்டில் இருந்த மற்ற தாய்மார்கள் எதிர்ப்பு தெரிவித்ததன் காரணமாக கழிவறையில் ஒரு பிளாஸ்டிக் பையில் குழந்தையின் சடலத்தை வைத்துள்ளனர்.

இந்நிலையில் அதிகாலை 3 மணியளவில் சடலத்தை எடுத்துச் செல்லலாம் என்று கழிவறைக்கு சென்ற போது அங்கு குழந்தையின் சடலம் காணவில்லை. இதையடுத்து அங்கு சுத்தம் செய்து கொண்டிருந்த துப்புரவு பணியாளர் இடம் கேட்ட போது உங்களை யார் இங்க வைக்கச் சொன்னது அதை நான் குப்பை தொட்டியில் வீசி விட்டதாக தெரிவித்துள்ளனர். இதையடுத்து அவர்களும் தேடிப்பார்த்து கிடைக்காத நிலையில் வேறு வழியின்றி அமைதியாக இருந்துள்ளனர்.

இந்த சூழலில் குப்பையில் இருந்த குழந்தையின் சடலத்தை அங்கு சுற்றித் திரிந்த நாய்கள் எடுத்து சென்று குழந்தையின் சடலத்தை தலை, கை, கால் பகுதி இல்லாமல் கிடந்துள்ளது. அப்போது அந்த பகுதிக்கு வந்த ஆம்புலன்ஸ் டிரைவர் வாகனத்தை நிறுத்தும் போது, கண்டு அதிர்ச்சி அடைந்துள்ளார். உடனே அவர் காவல்துறைக்கு தகவல் தெரிவித்துள்ளார். பின் தகவலறிந்த வந்த காவல்துறையினர் மற்றும் மருத்துவ குழு சடலத்தை மீட்டு பிரேத பரிசோதனைக்காக ஓசூர் அரசு மருத்துமனையில் வைத்துள்ளனர். இதுகுறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். மேலும் இச்சம்பவம் குறித்து ஓசூர் தலைமை மருத்துவ அலுவலர் பூபதியை தொடர்பு கொண்ட போது இது குறித்து எனக்கு தெரியாது என அலட்சியமாக தெரிவித்துள்ளார்.

Advertisement:
இது தொடர்பான செய்திகள் :
Advertisement:
Advertisement:
[X] Close