[X] Close
JUST IN
  • BREAKING-NEWS இந்தியாவுக்கு எதிரான டி20 போட்டி: தென்னாப்பிரிக்க அணி 9 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி
  • BREAKING-NEWS அதிமுக எம்எல்ஏக்கள் கூட்டம் நாளை மறுநாள் நடைபெறுகிறது
  • BREAKING-NEWS தமிழகம் முழுவதும் கருணாநிதி சிலை திறக்கப்படும்: ஈரோட்டில் கருணாநிதி சிலையை திறந்து வைத்து மு.க.ஸ்டாலின் பேச்சு
  • BREAKING-NEWS இடைத்தேர்தலில் போட்டியிடும் நாம் தமிழர் கட்சி வேட்பாளர்கள் 25-ம் தேதி அறிவிக்கப்படுவார்கள்: சீமான்

5 வயது சிறுமிக்கு பாலியல் வன்கொடுமை.. சேலத்தில் நடந்த கொடூர சம்பவம்..!

sexual-harassment-to-5-year-child-in-salem

சேலம் மாவட்டம் ஓமலூர் அருகே ஐந்து வயது சிறுமியை பாலியல் வன்கொடுமை செய்ததாக இளைஞர் ஒருவர் கைது செய்யப்பட்டார்.

சேலம் மாவட்டம் ஓமலூர் அருகேயுள்ள ஒரு பகுதியை சேர்ந்த கூலி தம்பதியினரின் 5 வயது மகள் அங்குள்ள அங்கன்வாடி மையத்தில் படித்து வருகிறார். சிறுமியின் பெற்றோர் அருகில் உள்ள செங்கல் சூளைக்கு கூலி வேலைக்கு சென்று விட்டனர். பின்னர் வேலை முடிந்து வீட்டிற்கு வந்தபோது சிறுமி அழுது கொண்டு இருந்தார். அவரிடம் விசாரித்த தாய் தந்தையர், சிறுமியின் உடலில் காயம் இருப்பதை பார்த்து அதிர்ச்சியடைந்தனர்.

பின்னர் சிறுமியை ஓமலூர் அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்த்தனர். ஓமலூர் அரசு மருத்துவமனையில் சிறுமியை பரிசோதித்த மருத்துவர்கள் சிறுமி பாலியல் வன்கொடுமைக்கு ஆளாகி இருப்பதை உறுதி செய்தனர். இதையடுத்து உயர் சிகிச்சைக்காக சேலம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

சிறுமியிடம் போலீசார் நடத்திய விசாரணையில், வீட்டில் விளையாடி கொண்டிருந்தபோது சிறுமியின் உறவுக்கார இளைஞர் ஒருவர், சிறுமியை பாலியல் வன்கொடுமை செய்து காயப்படுத்தியது தெரிய வந்தது. அந்த இளைஞர் அதிகளவில் மதுவை குடித்துவிட்டு போதையில் வந்து, சிறுமியை பாலியல் வன்கொடுமை செய்ததும் தெரியவந்துள்ளது.

இதையடுத்து நடந்த சம்பவம் குறித்து சிறுமியின் தந்தை ஓமலூர் காவல் நிலையத்தில் புகார் கொடுத்தார். புகாரினை வழக்குப்பதிவு செய்த போலீசார் சிறுமியை பாலியல் வன்கொடுமை செய்த இளைஞரை கைது செய்து விசாரணை நடத்தினர். இதையடுத்து, சிறுமியை பாலியல் வன்கொடுமை செய்தல், காயப்படுத்துதல், போக்சோ உட்பட ஐந்து பிரிவுகளில் அந்த இளைஞர் மீது வழக்குப்பதிவு செய்து, ஓமலூர் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி, சேலம் மத்திய சிறையில் அடைத்தனர்

Advertisement:
இது தொடர்பான செய்திகள் :
Advertisement:
Advertisement:
[X] Close