[X] Close
JUST IN
  • BREAKING-NEWS 2ம் கட்டமாக மக்களவை தேர்தல் நடைபெறும் தமிழகம். புதுச்சேரி உள்ளிட்ட 97 மக்களவை தொகுதிகளுக்கு வேட்பு மனுத்தாக்கல் நிறைவு
  • BREAKING-NEWS டிடிவி தரப்பு வழக்கில் உச்சநீதிமன்றம் வழங்கிய உத்தரவை மற்ற வழக்குகளுக்கு முன்மாதிரியாக கருதக்கூடாது என்ற ஆணையத்தின் கோரிக்கை நிராகரிப்பு
  • BREAKING-NEWS டிடிவி தினகரனின் அமமுகவுக்கு குக்கர் சின்னத்தை ஒதுக்க உச்சநீதிமன்றம் மறுப்பு
  • BREAKING-NEWS பொள்ளாச்சி கொடூரம்: புகார் அளித்த பெண்ணின் அண்ணனை தாக்கிய வழக்கில் 28ம் தேதி விசாரணைக்கு ஆஜராக பார் நாகராஜனுக்கு சிபிசிஐடி போலீஸ் சம்மன்
  • BREAKING-NEWS சென்னையில் பெட்ரோல் லிட்டருக்கு ரூ. 75.67 காசுகளாகவும், டீசல் லிட்டருக்கு ரூ. 70.26 காசுகளாகவும் விலை நிர்ணயம்

“காங். போட்டியிடும் தொகுதிகளை நாளை திமுக அறிவிக்கும்” - கே.எஸ் அழகிரி

what-are-congress-constituency-dmk-will-announce-tomorrow-k-s-alagiri

திமுகவுடான தொகுதி ஒப்பந்தத்தில் மகிழ்ச்சி என்றும், காங்கிரஸ் போட்டியிடும் தொகுதிகளை திமுக நாளை அறிவிக்கும் என்றும் தமிழக காங்கிரஸ் தலைவர் கே.எஸ்.அழகிரி தெரிவித்தார்.

திமுக-காங்கிரஸ் இடையே போட்டியிடும் தொகுதிகளின் ஒப்பந்தம் திமுக தலைமை அலுவலகமான சென்னையில் உள்ள அண்ணா அறிவாலயத்தில் கையெழுத்தானது. அதன்பின்னர், செய்தியாளர்களிடம் பேசிய கே.எஸ்.அழகிரி, “திமுக-காங்கிரஸ் உடன்படிக்கையில் இருதரப்பும் இணைந்து செயல்பட்டு, வெற்றிபெறவுள்ள தொகுதிகள் மற்றும் வாய்ப்புகள் உள்ள தொகுதிகளை கேட்டு வாங்கியுள்ளோம். எனவே இந்த உடன்பாடு மகிழ்ச்சியானது. 9 தொகுதிகள் எவை என்று திமுக நாளை அறிவிப்பார்கள். இதில் தாமதம் எதுவும் இல்லை. காங்கிரஸ் சார்பில் வரும் 15, 16 விருப்ப மனுக்களை பெறுகிறோம். அதன்பின்னர் வேட்பாளர்கள் தேர்வு நடைபெறும். 

ராகுல் காந்தி எதிர்மறையான தலைவர் இல்லை. இனிமையான தலைவர். அவர் விரும்பிருந்தால் 2009-ல் பிரதமராக வந்திருக்க முடியும். மன்மோகன் சிங் பலமுறை அந்த வாய்ப்பை ராகுலுக்கு அளித்தார். ஆனால் ராகுல் காந்தி இன்னும் மக்களை பற்றிய அறிய வேண்டும் என்பதற்காக அந்த வாய்ப்பை மறுத்தார். ராகுல் காந்தி நேற்று கல்லூரி மாணவிகளிடம் பேசிய போது, சார் என அழைக்க வேண்டாம் பெயரை சொல்லி அழையுங்கள் என்றார். அந்த நிகழ்வு மணிரத்னம் படத்தில் வரும் காட்சி போல இருந்தது” என்று கூறினார். 

Advertisement:
இது தொடர்பான செய்திகள் :
Advertisement:
Advertisement:
[X] Close