[X] Close
JUST IN
  • BREAKING-NEWS டெல்லி அர்பித் பேலஸ் ஓட்டல் தீ விபத்தில் 17பேர் உயிரிழந்த சம்பவத்தில், தலைமறைவாக இருந்த ஓட்டல் உரிமையாளர் ராகேஷ் கோயலை கைது செய்தது டெல்லி குற்றப்பிரிவு போலீஸ்
  • BREAKING-NEWS கோவை: செட்டிபாளையத்தில் ஜல்லிக்கட்டு போட்டியை அமைச்சர் எஸ்.பி.வேலுமணி தொடங்கி வைத்தார்; ஜல்லிக்கட்டில் 700க்கும் மேற்பட்ட காளைகள், 600க்கும் மேற்பட்ட மாடுபிடி வீரர்கள் பங்கேற்பு
  • BREAKING-NEWS சென்னையில் பெட்ரோல் லிட்டருக்கு ரூ. 73.28 காசுகளாகவும், டீசல் லிட்டருக்கு ரூ. 69.57 காசுகளாகவும் விலை நிர்ணயம்
  • BREAKING-NEWS புல்வாமா தாக்குதலை தொடர்ந்து டெல்லியில் உள்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் தலைமையில் நாளை அனைத்துக் கட்சி கூட்டம் நடைபெறுகிறது
  • BREAKING-NEWS தமிழகத்தில் மார்ச் 10ம் தேதி தீவிர போலியோ சொட்டு மருந்து முகாம் நடைபெறும்
  • BREAKING-NEWS புல்வாமா பயங்கரவாத தாக்குதலை தொடர்ந்து பாகிஸ்தானில் உள்ள இந்திய தூதர் டெல்லி திரும்ப மத்திய அரசு உத்தரவு
  • BREAKING-NEWS புல்வாமா பயங்கரவாத தாக்குதலுக்கு பாகிஸ்தான் பதில் சொல்லியே ஆக வேண்டும்; சரியான, உறுதியான பதிலடி கொடுக்கப்படும் - மத்திய அமைச்சர் நிதின் கட்கரி

குடும்பத்தை தேடுகிறதா காட்டுயானை? முக்கோணம் பகுதியில் சுற்றும் சின்னதம்பி!

wild-elephant-enters-village-after-being-translocated

உடுமலை அருகே முக்கோணம் பகுதியில் காட்டுயானை சின்னதம்பி சுற்றி வருவதாகவும், மீண்டும் யானையை காட்டுக்குள் விரட்ட முயற்சித்து வருவதாகவும் வனத்துறையினர் தெரிவித்துள்ளனர்.

கோவை மாவட்டத்தில் உள்ள பெரியதடாகம் ‌வனப்பகுதியில் விவசாய நிலங்களை சின்னதம்பி என்ற காட்டுயானை சேதப்படுத்துவதாக விவசாயிகள் புகார் தெரிவித்தனர். இதனையடுத்து பெரிய போராட்டத்துக்கு பிறகு சின்னதம்பியை மயக்க ஊசி செலுத்தி வனத்துறையினர் பிடித்தனர். இதனையடுத்து வாகனம் மூலம் ஆனைமலை புலிகள் காப்பகத்தில் உள்ள டாப்சிலிப் வனப்பகுதிக்கு சின்னதம்பி யானை கொண்டு செல்லப்பட்டது.  சின்னதம்பி யானையின் இருப்பிடத்தை அறிய அதன் உடலில் ஜிபிஎஸ் கருவி பொருத்தியிருந்தனர்.

ஆனால் டாப்சிலிப் பகுதியில் விடப்ப்பட்ட யானை சின்னதம்பி நேற்று மீண்டும் ஊருக்குள் புகுந்தது. கோட்டூர், அங்கலக்குறிச்சி சுற்றுப்பகுதிகளில் உள்ள தென்னந்தோப்புகளில் புகுந்த சின்னதம்பியை வனத்துறையினர் மீண்டும் காட்டுக்குள் விரட்டும் முயற்சியில் ஈடுபட்டனர். சின்னதம்பி உடலில் ஜிபிஎஸ் பொருத்தப்பட்டுள்ளதால் அதன் உதவியுடன் யானையின் இருப்பிடத்தை வனத்துறையினர் பின் தொடர்ந்து வருகின்றனர். அதன்படி இன்று காலை உடுமலை அருகே முக்கோணம் பகுதியில் சின்னதம்பி சுற்றி வருவதாகவும், மீண்டும் யானையை காட்டுக்குள் விரட்ட முயற்சித்து வருவதாகவும் வனத்துறையினர் தெரிவித்துள்ளனர். 

இதற்கிடையே டாப்சிலிப்புக்கு கொண்டு செல்லப்பட்ட சின்னதம்பியை தேடி பெண் யானையும் அதன் குட்டிகளும் ஊருக்குள் சுற்றிவந்தன. சின்னதம்பி வழக்கமாக சுற்றிவரும் இடங்களில் எல்லாம் அந்த யானைகள் வலம் வந்து சின்ன தம்பியை தேடின. இந்நிலையில் தன் குடும்பத்தை தேடியே சின்னதம்பி மீண்டும் ஊருக்குள் புகுந்திருக்கும் என்று அப்பகுதி மக்கள் தெரிவிக்கின்றனர். 

முன்னதாக சின்னத்தம்பி யானையை அதன் குடும்பத்துடன் சேர்த்து வைக்க வேண்டும் என்று அந்தப் பகுதி மக்கள் கோரிக்கை வைத்தும், மீண்டும் கோவைக்கு இடமாற்றம் செய்ய வேண்டும் என்பதை வலியுறுத்தி சமூக வலைதளங்களில் கோரிக்கை விடுத்தனர். சின்னதம்பிக்கு ஆதரவாக ஒரு தரப்பினரும், எதிராக மற்றொரு தரப்பினரும் குரல் கொடுத்து வருகின்றனர். ஆனால் யார் ஆதரவையும் எதிர்பார்க்காத சின்னதம்பி தன் வழியை பார்த்து அதன் போக்கில் போய்கொண்டு இருப்பதாக விலங்கியல் ஆர்வலர்கள் கருத்து தெரிவிக்கின்றனர்.
 

Advertisement:
இது தொடர்பான செய்திகள் :
Advertisement:
Advertisement:
[X] Close