[X] Close
JUST IN
  • BREAKING-NEWS ஒரே சமயத்தில் மக்களவை மற்றும் மாநில சட்டசபைகளுக்கு தேர்தல் நடத்துவது குறித்து மீண்டும் ஆலோசனை நடத்த மோடி அரசு முடிவு
  • BREAKING-NEWS மீன்பிடி தடைக்கால நிவாரண தொகையாக மீனவர் குடும்பம் ஒன்றுக்கு ரூ.5000 வழங்கப்படும்- தமிழக அரசு
  • BREAKING-NEWS நிதி ஆயோக் கூட்டத்தில் தமிழக மக்களின் உணர்வுகளை முதல்வர் பழனிசாமி எதிரொலிக்கவில்லை- திமுக தலைவர் மு.க.ஸ்டாலின்
  • BREAKING-NEWS பொறியியல் படிப்பிற்கான தரவரிசைப் பட்டியல் ஜூன் 20ம் தேதி வெளியிடப்படும்- அமைச்சர் கே.பி.அன்பழகன்
  • BREAKING-NEWS சென்னையில் பெட்ரோல் லிட்டருக்கு ரூ. 72.64 காசுகளாகவும், டீசல் லிட்டருக்கு ரூ. 67.52 காசுகளாகவும் விலை நிர்ணயம்
  • BREAKING-NEWS கோதாவரி - காவிரி நதிநீர் இணைப்பை முதன்மையாக நிறைவேற்ற பிரதமர் மற்றும் நீர்வள அமைச்சரிடம் கோரிக்கை வைத்துள்ளேன் - முதல்வர் பழனிசாமி
  • BREAKING-NEWS தமிழகத்தின் ஒப்புதலின்றி மேகதாதுதுவில் அணை கட்ட அனுமதி வழங்க கூடாது என கோரிக்கை விடுத்துள்ளோம் - முதல்வர் பழனிசாமி

குடும்பத்தினரை கொன்றுவிட்டு தற்கொலை செய்துகொண்ட ஆசிரியர்

teacher-killed-his-family-and-suicide-in-covai

கோவையில் ஆசிரியர் ஒருவர், தன் குடும்பத்தினருக்கு விஷம் கொடுத்து கொன்றுவிட்டு, தூக்கிட்டு தற்கொலை செய்துகொண்ட சம்பவம் நடந்துள்ளது.

கோவை மாவட்டம் கருமத்தம்பட்டியைச் சேர்ந்த அந்தோணி ஆரோக்கியதாஸ், திருப்பூரில் உள்ள கூலிபாளையத்தில் அரசு தொடக்கப் பள்ளி ஆசிரியராக பணியாற்றி வந்தார். இவருடன் மனைவி ஷோபனா, தாய் புவனேஸ்வரி, 7 வயது மகன் ரித்திக், ஒன்றரை வயது மகள் ரியா ஏஞ்சலின் ஆகியோர் வசித்து வந்தனர். இந்நிலையில் அந்தோணி வீடு உள்பக்கமாக பூட்டப்பட்டிருந்த நிலையில் வெகு நேரமாகியும் திறக்கப்படவில்லை. இதனால் சந்தேகமடைந்த அக்கம்பக்கத்தினர் உள்ளே சென்று பார்த்தபோது, அந்தோணி உள்ளிட்ட சடலமாக கிடந்தது அதிர்ச்சியை ஏற்படுத்தியது. 

அந்த வீட்டில் காவலர்கள் சோதனை நடத்தியபோது, அந்தோணி எழுதிய கடிதம் ஒன்று கிடைத்துள்ளது. அதில் தனக்கு 12 ஆண்டுகளாக முதுகுவலி இருந்ததாகவும், அதற்கு சிகிச்சை பெற வாங்கிய கடனை திருப்பிச் செலுத்த முடியாததே தற்கொலைக்கான காரணம் குறிப்பிடப்பட்டுள்ளது.

தான் இல்லை என்றால் குடும்பத்தினர் ஆதரவின்றி தவிப்பார்கள் என்பதால், முதலில் அவர்களுக்கு விஷம் கொடுத்து கொலை செய்த அந்தோணி, பின்னர் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டதாக காவல்துறையினர் தெரிவித்தனர். முதுகுவலியும், அதற்கான சிகிச்சைக்கு வாங்கிய கடனும் தான் இந்த கொலை மற்றும் தற்கொலைக்கு காரணமா, அல்லது வேறு ஏதேனும் காரணங்கள் உண்டா ? என காவல்துறை விசாரணை நடத்தி வருகிறது.

Advertisement:
Advertisement:
Advertisement:
[X] Close