[X] Close
JUST IN
  • BREAKING-NEWS ஒரே சமயத்தில் மக்களவை மற்றும் மாநில சட்டசபைகளுக்கு தேர்தல் நடத்துவது குறித்து மீண்டும் ஆலோசனை நடத்த மோடி அரசு முடிவு
  • BREAKING-NEWS மீன்பிடி தடைக்கால நிவாரண தொகையாக மீனவர் குடும்பம் ஒன்றுக்கு ரூ.5000 வழங்கப்படும்- தமிழக அரசு
  • BREAKING-NEWS நிதி ஆயோக் கூட்டத்தில் தமிழக மக்களின் உணர்வுகளை முதல்வர் பழனிசாமி எதிரொலிக்கவில்லை- திமுக தலைவர் மு.க.ஸ்டாலின்
  • BREAKING-NEWS பொறியியல் படிப்பிற்கான தரவரிசைப் பட்டியல் ஜூன் 20ம் தேதி வெளியிடப்படும்- அமைச்சர் கே.பி.அன்பழகன்
  • BREAKING-NEWS சென்னையில் பெட்ரோல் லிட்டருக்கு ரூ. 72.64 காசுகளாகவும், டீசல் லிட்டருக்கு ரூ. 67.52 காசுகளாகவும் விலை நிர்ணயம்
  • BREAKING-NEWS கோதாவரி - காவிரி நதிநீர் இணைப்பை முதன்மையாக நிறைவேற்ற பிரதமர் மற்றும் நீர்வள அமைச்சரிடம் கோரிக்கை வைத்துள்ளேன் - முதல்வர் பழனிசாமி
  • BREAKING-NEWS தமிழகத்தின் ஒப்புதலின்றி மேகதாதுதுவில் அணை கட்ட அனுமதி வழங்க கூடாது என கோரிக்கை விடுத்துள்ளோம் - முதல்வர் பழனிசாமி

டென்மார்க் டூ கோவை: பெற்றோரை மூன்று ஆண்டுகளாக தேடும் மகன்!

son-looking-for-parents-for-three-years-in-covai

குடும்ப வறுமை காரணமாக தனது இரண்டரை வயதில் டென்மார்‌க்கில் உள்ள தம்பதிக்கு தத்துக்கொடுக்கப்பட்ட தமிழர் ஒருவர் தனது பெற்றோரை தேடி கோவைக்கு வந்துள்ளார். 

கோவையை பூர்வீகமாக கொண்டவர் கேஸ்பர் ஆண்டர்சன். 1975ஆம் ஆண்டு, இரண்டரை வயது குழந்தையாக இருந்த போது, குடும்ப வறுமை காரணமாக இவரது பெற்றோர் குழந்தைகள் இல்லத்தில் இவரை விட்டு சென்றனர். கோவை மாவட்ட நீதிமன்றத்தின் உத்தரவுப்படி டென்மார்க் நாட்டை சேர்ந்த தம்பதியினருக்கு, பாதுகாவலர் சட்டத்தின் கீழ் கேஸ்பர் ஆண்டர்சன் தத்துக்கொடுக்கப்பட்டார். பெற்றோர் இவருக்கு ராஜ்குமார் என பெயரிட்டிருந்தனர். டென்மார்க்கிற்கு சென்ற பின்னர் பெயரை கேஸ்பர் ஆண்டர்சன் என மாற்றி உள்ளனர்.

பின்னாளில் தான் தத்துக்கொடுக்கப்பட்டதை அறிந்த கேஸ்பர், தனது பெற்றோரை தேடும் முயற்சியில் ஈடுபட தொடங்கினார். இவருடைய பெற்றோர் அய்யாவு, மாரியம்மாள் ஆகிய இருவரும் கோவையை அடுத்த பழைய மருதமலை கோவில் சாலையில் உள்ள கருப்பராயன் கோவில் பகுதியில் வசித்து வந்ததாக கூறப்படுகிறது. ஆனால் தற்போது அந்த பெயரில் யாரும் வசிக்கவில்லை என அப்பகுதி மக்கள் தெரிவித்துள்ளனர். கடந்த 2015ஆம் ஆண்டு முதல் கேஸ்பர் ஆண்டர்சன் தனது பெற்றோரை தேடி வருகிறார்.

கோவை முழுவதும் ஒவ்வொரு பகுதியாக சென்று தனது பெற்றோர் குறித்து விசாரித்து வருகிறார் கேஸ்பர் ஆண்டர்சன். 45 ஆண்டுகள் ஆன பின்னரும், பெற்றோரை தொலைத்த குழந்தையாகவே  இவரது மனநிலை உள்ளது. தன்னை பெற்றவர்களை ஒரு முறையாவது சந்தித்திட வேண்டும் என்ற நோக்கத்தில் தொடர்ந்து பாசப்போராட்டம் நடத்தி வருகிறார் இந்த டென்மார்க் ராஜ்குமார்.

இது குறித்து பேசிய  கேஸ்பர் ஆண்டர்சன், என் பெற்றோர் யார் என்று பார்க்க வேண்டுமென ஆசையாக உள்ளது. எதற்காக தத்துக்கொடுக்கப்பட்டேன் என்ற காரணத்தை தெரிந்து கொள்ள வேண்டும். இந்த ஆவணத்தில் தத்துக்கொடுக்கப்பட்டதற்கான காரணம் இருக்கிறது. அந்த காரணம் உண்மையாகவும் இருக்கலாம். ஆனால் சரியான காரணம் என்னவென்று தெரிந்து கொள்ள வேண்டும் என்று தெரிவித்துள்ளார்

Advertisement:
இது தொடர்பான செய்திகள் :
Advertisement:
Advertisement:
[X] Close