ஒருமுறை மட்டுமே பயன்படுத்தக்கூடிய நெகிழிப் பொருட்களுக்கான தடை நாளை முதல் அமலுக்கு வருவதால் மக்கள் கைகளுக்கு மீண்டும் வரப் போகும் மஞ்சள் துணிப்பைகள்.
பிளாஸ்டிக் எனப்படும் நெகிழி பொருட்களை பயன்படுத்த விதிக்கப்பட்டுள்ள தடை நாளை முதல் அமலுக்கு வருகிறது. அதன்படி உணவுப் பொருள்களை கட்ட பயன்படுத்தப்படும் நெகிழி தாள், நெகிழிகளால் ஆன தெர்மாகோல் தட்டுகள், நெகிழி பூசப்பட்ட காகிதக் குவளைகள், நெகிழி குவளைகள், நீர் நிரப்ப பயன்படும் பைகள், நெகிழி பொட்டலங்கள், நெகிழி தூக்கு பைகள், நெகிழி கொடிகள், நெகிழி விரிப்புகள், நெகிழி பூசப்பட்ட காகிதத் தட்டுகள்,நெகிழி தேநீர் குவளைகள், நெகிழி உறிஞ்சு குழல்கள், நெகிழி பூசப்பட்ட பைகள், நெய்யாத நெகிழி பைகள் போன்ற 14 வகையான நெகிழி பொருள்களுக்கு முற்றிலும் தடை செய்யப்பட்டுள்ளது. இதனை முற்றிலும் பயன்படுத்த தடை விதிக்கப்பட்டுள்ளது.
இதேபோல் நெகிழிகளுக்கு மாறாக வாழையிலை,பாக்குமர இலை,அலுமினியத்தாள்,காகிதச் சுருள்,தாமரை இலை ஆகியவற்றை பயன்படுத்தலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும், கண்ணாடி, உலோகத்தால் ஆன குவளைகள், மூங்கில், மரப்பொருள்கள், காகித குழல்கள், துணி, காகிதம், சணல் பைகள், காகித மற்றும் துணிக் கொடிகளைப் பயன்படுத்த அறிவுறுத்தப்பட்டுள்ளது. இதேபோல், பீங்கான் பாத்திரங்கள், மண் கரண்டிகள், மண் குவளைகளை பயன்படுத்த வேண்டுகோள் விடுக்கப்பட்டுள்ளது. தடையை மீறி நெகிழி பொருள்களை தயாரித்தாலோ, விற்பனை செய்தாலோ அதனை பறிமுதல் செய்து நடவடிக்கை எடுக்கவும் குழு அமைக்கப்பட்டுள்ளது.
“நிர்பயா வழக்கு குற்றவாளிகளை தூக்கிலிடும் பணியை செய்யத் தயார்”-தமிழக கான்ஸ்டபிள் விருப்பம்
''அளவில் பெரியதாக இருக்கிறது'': வாங்க ஆள் இல்லாமல் கிடக்கும் எகிப்து வெங்காயம்!
குடியுரிமை சட்டத் திருத்த மசோதா மக்களவையில் நிறைவேற்றம்..!
திருவண்ணாமலையில் இன்று மாலை மகா தீபம்.. பக்தர்களுக்கு சிறப்பு ஏற்பாடு..!
“நிர்பயா வழக்கு குற்றவாளிகளை தூக்கிலிடும் பணியை செய்யத் தயார்”-தமிழக கான்ஸ்டபிள் விருப்பம்
“என்கவுன்ட்டர் மகிழ்ச்சியான விஷயம் அல்ல” - மௌனத்தை கலைத்த சமந்தா
‘வர்லாம் வர்லாம் வா...’.. 80 வயதிலும் தளராத மனம்.... யார் இந்த சுல்தான் தாத்தா..!
தாயின் குரலை முதன்முதலாக கேட்கும் குழந்தையின் ரியாக்ஷன்: மனங்களை வென்ற வீடியோ!