[X] Close
JUST IN
  • BREAKING-NEWS பிரதமர் மோடிக்கு வாழ்த்துகள்; மோடி அரசு ஜனநாயக கொள்கைகளை காக்கும் என நம்புகிறேன் - மு.க.ஸ்டாலின்
  • BREAKING-NEWS கர்நாடக எம்எல்ஏக்கள், அமைச்சர்களுடன் நாளை முதல்வர் குமாரசாமி ஆலோசனை
  • BREAKING-NEWS ஈரோடு மக்களவை தொகுதி மதிமுக வேட்பாளர் கணேச மூர்த்தி 2,10,618 வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி
  • BREAKING-NEWS ட்விட்டரில் இருந்து தான் காவலாளி நீக்கப்பட்டுள்ளது; என் மனதளவில் காவலாளியாகவே இருக்கிறேன் - தனது ட்விட்டர் பக்கத்தில் சவுகிதார் (காவலாளி) என இருந்ததை நீக்கியதற்கு பிரதமர் மோடி விளக்கம்
  • BREAKING-NEWS தஞ்சை மக்களவை தொகுதியில் திமுக வேட்பாளர் பழனிமாணிக்கம், தமாகாவின் என்.ஆர்.நடராஜனை 3,63,047 வாக்கு வித்தியாசத்தில் தோற்கடித்தார்

தாயின் ஈமச் சடங்கிற்கு விடுப்புக்கேட்ட காவலரை தாக்கிய ஆய்வாளர்..! சிசிடிவி காட்சிகள்..!

sub-inspector-attacks-police-in-chenneia

விடுப்புத்தர மறுப்பதாக வாக்கி டாக்கியில் பு‌கார் கூறிய காவலர் மீது ஆய்வாளர் தாக்குதல் நடத்தும் சிசிடிவி காட்சி அதிர்ச்சியை ஏற்படுத்தியிருக்கிறது.

தேனாம்பேட்டை போக்குவரத்து காவல் நிலையைத்தில் பணி புரியும் காவலர் தருமன். இவர் தனது தாயின் ஈமச்சடங்கில் பங்கேற்க கடந்த 21-ஆம் தேதி விடுப்பு கேட்டபோது ஆய்வாளர் ரவிச்சந்திரன் விடுப்பு தர மறுத்துள்ளார். இதனையடுத்து வாக்கி டாக்கி மூலம் காவல் கட்டுப்பாட்டு அறைக்கு தருமன் புகார் கூறினார். அதனைத்தொடர்ந்து அனுமதியின்றி அவர் விடுப்பு எடுத்ததாகத் தெரிகிறது.

காவல் கட்டுப்பாட்டு அறைக்கு வாக்கி டாக்கி மூலம் தருமன் புகார் கொடுத்ததால் கோபம் கொண்ட ஆய்வாளர் ரவிச்சந்திரன், காவலர் தருமன் வீட்டிற்கு போகும் வழி பார்த்து காத்திருந்ததாக தெரிகிறது. அவ்வழியே இருசக்கர வாகனத்தில் சென்ற தருமனின் கையைப் பிடித்து ஆய்வாளர் ரவிச்சந்திரன் கீழே தள்ளியுள்ளார். இது அங்கிருந்த சிசிடிவி காட்சியில் பதிவாகியுள்ளது. இதில் தருமன் பலத்த காயம் அடைந்தார். 

இதுதரவிர தருமன் மது அருந்திவிட்டு பணிக்கு வருவதாகவும் ஆய்வாளர் ரவிச்சந்திரன் குற்றம்சாட்டினார். அத்துடன் தருமன் பணியிடை நீக்கம் செய்யப்படுவதற்கும் ரவிச்சந்திரன் காரணமாக இருந்துள்ளதாக தெரிகிறது. தற்போது தருமனை, ஆய்வாளர் ரவிச்சந்திரன் கீழே தள்ளும் சிசிடிவி காட்சிகள் வெளியாகியிருக்கிறது. இதுதொடர்பான காட்சிகளை வைத்து உயரதிகாரிகள் விசாரணை நடத்தி வருகின்றனர்.

இதனிடையே தருமன் இதுகுறித்து கூறும்போது, “பைக்கில் செல்லும் போது பின்னால் இருந்து இழுத்ததால் சாலையில் விழுந்தேன். அதன்பின் ரோந்து வாகனத்தில் ஏற்றினர். தலையில் காயம் ஏற்பட்டதால் என்ன நடந்ததென்று தெரியவில்லை. அரை மயக்கத்தில் இருந்தபோது மது ஊற்றினர். மயக்கம் தெளிந்த நிலையில் கண் விழித்து பார்த்த போது  மருத்துவமனையில் இருந்தேன்” எனக் கூறியுள்ளார். எனவே ஆய்வாளர் ரவிச்சந்திரன் வேண்டுமென்ற தருமன் வாயில் மது ஊற்றினாரா என்ற சந்தேகமும் நிலவுகிறது.

 

Advertisement:
இது தொடர்பான செய்திகள் :
Advertisement:
Advertisement:
[X] Close