[X] Close
JUST IN
  • BREAKING-NEWS முதலமைச்சர் பழனிசாமி தலைமையில் நாளை மறுநாள் தமிழக அமைச்சரவைக் கூட்டம்
  • BREAKING-NEWS நாடாளுமன்ற குளிர்காலக் கூட்டத் தொடர் நாளை தொடக்கம்: ஒத்துழைப்பு அளிக்க அனைத்துக் கட்சிகளுக்கு அரசு வேண்டுகோள்
  • BREAKING-NEWS குன்னூரில் பலத்த மழை காரணமாக கடும் வெள்ளப்பெருக்கு: மக்கள் தவிப்பு
  • BREAKING-NEWS இலங்கை அதிபர் தேர்தலில், இலங்கை பொதுஜன முன்னணி வேட்பாளர் கோத்தபய ராஜபக்ச முன்னிலை

நாளை மறுநாள் ‘கஜா’புயல் குறித்து ஆளுநர் ஆய்வு 

tamil-nadu-governor-banwarilal-purohit-will-visit-delta-districts-which-affected-gaja-cyclone-in-november-21-22

‘கஜா’ புயல் பாதித்த 3 மாவட்டங்களில் 21, 22 ஆகிய தேதிகளில் ஆளுநர் பன்வாரிலால் புரோஹித் நேரில் ஆய்வு மேற்கொள்கிறார். 

‘கஜா’ புயலால் நாகை, புதுக்கோட்டை, திருவாரூர், தஞ்சை, கடலூர் உள்ளிட்ட கடலோர மாவட்டங்கள் கடும் சேதத்திற்கு உள்ளாகின. புயல் ஓய்ந்தாலும் மக்களின் இன்னல்கள் தொடர்ந்து கொண்டிருக்கின்றன. சூறைக்காற்றில் மேற்கூரைகள் பறந்த நிலையில், வீட்டிலிருக்கும் அனைத்து பொருள்களும் மழையால் சேதமடைந்தன. 

புயல் ஏற்படுத்திய சேதங்கள் மிக அதிகமென்றாலும், மாணவர்களுக்கு கல்வி பாதிக்கும் நிலையையும் ஏற்படுத்திச் சென்றது. பல ஆயிரம் மின்கம்பங்கள் சாய்ந்து கிடக்கின்றன. மின்சாரம் இன்றி பொதுமக்கள் பாதிக்கப்பட்டிருக்கிறார்கள். ஏராளமான பயிர்களும், வீடுகளும், பொருட்களும் சேதம் அடைந்தன. இதனால் தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் இருந்தும் பாதிக்கப்பட்ட மாவட்டங்களுக்கு நிவாரணப் பொருட்கள் வழங்கப்பட்டு வருகின்றன. 

              

இந்நிலையில், ‘கஜா’ புயல் பாதித்த 3 மாவட்டங்களில் வரும் 21, 22ம் தேதிகளில் ஆளுநர் பன்வாரிலால் புரோஹித் நேரில் ஆய்வு மேற்கொள்கிறார். நாகை, திருவாரூர், தஞ்சை மாவட்டங்களில் ஆளுநர் ஆய்வு மேற்கொள்கிறார். சென்னை எழும்பூரில் இருந்து நாளை இரவு 10 மணிக்கு காரைக்கால் விரைவு ரயிலில் ஆளுநர் நாகை செல்கிறார். 3 மாவட்டங்களில் ஆய்வை முடித்த பின்னர் நவம்பர் 22இல் திருச்சியில் இருந்து விமானத்தில் சென்னை செல்கிறார். முன்னதாக, முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி புயல் பாதித்த பகுதிகளை நாளை ஹெலிகாப்டர் மூலம் பார்வையிடுவதாக தகவல் வெளியாகி இருந்தது.

Advertisement:
இது தொடர்பான செய்திகள் :
Advertisement:
Advertisement:
[X] Close