[X] Close
JUST IN
  • BREAKING-NEWS நாட்டின் தண்ணீர் பற்றாக்குறையை போக்க ரூ.3.5 லட்சம் கோடி செலவிட மத்திய அரசு திட்டம் - பிரதமர் மோடி
  • BREAKING-NEWS திமுக போட்ட வழக்கினால் மன உளைச்சல் ஏற்பட்டுதான் ஜெயலலிதா மரணமடைந்தார் - நாங்குநேரி தேர்தல் பரப்புரையில் முதல்வர் பழனிசாமி பேச்சு
  • BREAKING-NEWS ராஜீவ் கொலை வழக்கில் சிறையில் உள்ள 7 பேரை விடுவிக்க தமிழக அரசு அழுத்தம் தர வேண்டும் - வைகோ
  • BREAKING-NEWS 7 பேர் விடுதலை குறித்து முதல்வர் பழனிசாமி விளக்கமளிக்க வேண்டும் - மு.க.ஸ்டாலின் ட்வீட்
  • BREAKING-NEWS ஐஎன்எக்ஸ் முறைகேடு வழக்கு: சிதம்பரம், கார்த்தி சிதம்பரம் மீது குற்றப்பத்திரிகை தாக்கல்
  • BREAKING-NEWS நாங்குநேரி பணப்பட்டுவாடா புகார் தொடர்பாக திமுக எம்.எல்.ஏ. சரவணகுமார் மீது வழக்குப்பதிவு

இளைஞரை விஷம் வைத்து கொன்ற தம்பதி ! விசாரணையில் திடுக்கிடும் தகவல்!

a-couple-held-for-murder-in-thiruvallur

மதுவில் விஷம் கலந்து தனியார் நிறுவன ஊழியரை கொலை செய்த தம்பதியை காவல்துறையினர் கைது செய்துள்ளனர்

திருவள்ளூர் மாவட்டம், கொப்பூரைச் சேர்ந்தவர் குணசேகர். இவர் ஸ்ரீபெரும்புதூரில் உள்ள தனியார் நிறுவனத்தில் வேலை பார்த்து வந்துள்ளார். இந்த நிலையில், கடந்த மே மாதம் 24-ஆம் தேதி முதல் அவரை காணவில்லை. 26-ஆம் தேதி காலை கொப்பூர் பகுதியில் உள்ள சிங்கிலி குட்டை பகுதியில் குணசேகர் இறந்து கிடந்தார். சடலத்தைக் கைப்பற்றிய மணவாளநகர் போலீசார், கொலை குறித்து விசாரணை நடத்தி வந்தனர். ஆனால், அதே பகுதியைச் சேர்ந்த பெண் மீது சந்தேகம் இருப்பதாக கொலை செய்யப்பட்ட குணசேகரனின் மனைவி ஆஷா மாவட்ட எஸ்பி அலுவலகத்தில் புகார் அளித்தார். இதனையடுத்து, விசாரணையை தீவிரப்படுத்திய போலீசார், அதே கொப்பூர் கிராமத்தைச் சேர்ந்த மஞ்சுளா என்ற பெண்ணுக்கும், கொலை செய்யப்பட்ட குணசேகரனுக்கும் முறையற்ற உறவு இருந்ததை விசாரணையில் கண்டறிந்தனர். 

இந்த விவகாரம் மஞ்சுளாவின் கணவர் தனசேகருக்கும் தெரியவரவே, கணவன் மனைவிக்கும் இடையே தகராறு ஏற்பட்டதாகவும் கூறப்படுகிறது. குணசேகர் தான் தம்மை கட்டாயப்படுத்துவதாகவும், தமக்கு அதில் உடன்பாடில்லை என்றும் கணவன் தனசேகரிடம் மனைவி மஞ்சுளா தெரிவித்ததாக போலீசார் தெரிவித்தனர். இதனால்,குணசேகரனை கொலை செய்ய முடிவு செய்த தனசேகர், மனைவி மஞ்சுளா மூலம் குணசேகரனை தனியாக வர வழைத்து மது வாங்கி வந்து அதில் விஷத்தை கலந்து கொடுத்துள்ளார். அதனை அருந்திய குணசேகரன் மயங்கி விழவே அவரை தலையில் பலமாக தாக்கிவிட்டு அங்கிருந்து இருவரும் தலைமறைவானது விசாரணையில் தெரியவந்தது. 

இதையடுத்து மஞ்சுளா மற்றும் அவரது கணவர் தனசேகர் ஆகிய இருவரையும் கைது செய்த மணவாளநகர் போலீசார், நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி புழல் சிறையில் அடைத்தனர்.

Advertisement:
Advertisement:
Advertisement:
[X] Close