[X] Close
JUST IN
  • BREAKING-NEWS கேக்குறவன் கேனப்பயலா இருந்தா எறும்பு ஏரோப்பிலேன் ஓட்டுது என்று சொல்வார்களாம்; அதுபோல் இருக்கிறது கோடநாடு விவகாரத்தில் என்னை தொடர்புபடுத்துவது - முதல்வர் எடப்பாடி பழனிசாமி
  • BREAKING-NEWS மக்களவை தேர்தல் தேதியை மார்ச் முதல் வாரத்தில் தேர்தல் ஆணையம் அறிவிக்க வாய்ப்பு என தகவல்; மக்களவை தேர்தல் 6 அல்லது 7 கட்டங்களாக நடைபெற வாய்ப்புள்ளதாகவும் தகவல்
  • BREAKING-NEWS ஆஸ்திரேலியாவுக்கு எதிரான 2வது ஒருநாள் போட்டியில் இந்திய அணி வெற்றி
  • BREAKING-NEWS கோடநாடு விவகாரத்தில் சயான், மனோஜ் இருவரும் பிணைத் தொகையை செலுத்தியதை தொடர்ந்து ஜாமீன் வழங்கப்பட்டது
  • BREAKING-NEWS திமுக எம்எல்ஏக்கள் மட்டுமல்ல தமிழகமே அதிமுக ஆட்சி கலைய காத்துக்கொண்டிருக்கிறது - கனிமொழி
  • BREAKING-NEWS பொருளாதாரத்தில் பின்தங்கிய பொதுப்பிரிவினருக்கு 10% இடஒதுக்கீடு வழங்கும் சட்டத்திற்கு எதிராக உயர்நீதிமன்றத்தில் திமுக மனு
  • BREAKING-NEWS சென்னையில் முதல்வர் பழனிசாமி தலைமையில் தமிழக அமைச்சரவை கூட்டம் தொடங்கியது

பாலியல் தொல்லை கொடுத்ததாக பேராசிரியரைக் கண்டித்து போராட்டம்

college-students-protest-against-sexual-abuse-professor

மாணவிகளுக்கு பாலியல் தொந்தரவு அளித்ததாக பேராசிரியரைக் கண்டித்து நாகையில் கல்லூரி மாணவர்கள் போராட்டத்தில் ஈடு‌பட்டனர். 

நாகை மாவட்டம் சீர்காழியை அடுத்த புத்தூரில் அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் 500க்கும் மேற்பட்டமாணவ, மாணவிகள் படிக்கின்றனர். இங்கு வணிகவியல்துறை தலைவராக திருவாரூரை சேர்ந்த  பேராசிரியர் சண்முகசுந்தரம் பணியற்றி வருகிறார். இவர் 2ஆம் ஆண்டு பயிலும் மாணவிகளிடம் இரட்டை அர்த்தத்தில் பேசுவதுடன், தொடர்ந்து பாலியல் தொந்தரவும் கொடுத்துள்ளார். இதனை மாணவிகள் வெளியில் சொல்லமுடியாமல் தவித்துவந்துள்ளனர். 

இந்நிலையில், கடந்த 20 நாட்களுக்கு முன்பு சண்முகசுந்தரம் கொடுத்த தொந்தரவால் வணிகவியல் 2ம் ஆண்டு படிக்கும் மாணவி ஒருவர் கல்லூரியிலேயே விஷம் அருந்தி தற்கொலைக்கு முயன்றுள்ளார். மேலும் மூன்று மாணவிகள் சண்முகசுந்தரம் பாலியல் தொந்தரவு செய்ததாக கல்லூரி முதல்வர் லட்சுமியிடம் புகார் தெரிவித்துள்ளனர். இதுதொடர்பாக எந்த நடவடிக்கையும் எடுக்காததால் ஆத்திரமடைந்த மாணவர்கள் இன்று வகுப்பை புறக்கணித்து கல்லூரியை முற்றுகையிட்டு போராட்டத்தில் ஈடுபட்டனர்.

தகவலறிந்த கொள்ளிடம் காவல்துறையினர் விரைந்து வந்து, பேராசிரியர் சண்முகசுந்தரம் மற்றும் புகார் அளித்த மாணவிகளிடம் தனித்தனியே விசாரணை மேற்கொண்டுள்ளனர். இந்நிலையில் தற்கொலைக்கு முயன்ற மாணவியின் தாய், தனது மகளுக்கு பாலியல் தொந்தரவு செய்த சண்முகசுந்தரம் மீது உரிய நடவடிக்கை கோரி கொள்ளிடம் காவல்நிலையத்தில் புகார் அளித்துள்ளார்.

வீடியோ

Advertisement:
இது தொடர்பான செய்திகள் :
Advertisement:
Advertisement:
[X] Close