[X] Close
JUST IN
  • BREAKING-NEWS புரோ கபடி லீக் தொடரில், சென்னையில் நேற்று தமிழ் தலைவாஸ் மற்றும் புனேரி பல்தான் அணிகளுக்கு இடையேயான ஆட்டம் டிராவில் முடிவடைந்தது
  • BREAKING-NEWS முதல்வரின் சிறப்பு குறை தீர்க்கும் திட்டம் இன்று தொடக்கம்
  • BREAKING-NEWS மகாராஷ்டிரா: துலி அருகே நிம்குல் கிராமத்தில் கண்டெய்னர் லாரியுடன் பேருந்து மோதல் - 10பேர் பலி
  • BREAKING-NEWS இன்று முதல் அமலுக்கு வந்தது ஆவின் பாலின் புதிய விலை

ஆர்வமுடன் விவசாயத்தை தெரிந்துக்கொண்ட அரசுப் பள்ளி மாணவர்கள் !

government-school-students-interested-in-agriculture

விவசாயப் படிப்பு மீதான ஆர்வம் இப்போது அதிகரித்து வருவது அனைவருக்கும் தெரிந்ததே. இளைஞர்களுக்கு விவசாயம் மீது ஆர்வம் இப்போது பள்ளிக் காலத்தில் இருந்தே தொடங்கியிருக்கிறது. இதற்கு உதாரணமாக தேவகோட்டையில் இருக்கும் சேர்மன் மாணிக்க வாசகம் நடுநிலைப் பள்ளி மாணவர்கள் விவசாயம் கற்க விவசாய கல்லூரிக்கு சென்றது பலரையும் வியப்பில் ஆழ்த்தியிருக்கிறது. 

இந்த அரசுப் பள்ளி மாணவர்கள் சேது பாஸ்கரா விவசாய கல்லூரிக்கு களப் பயணமாக சென்றனர். கல்லூரியில் மாணவ, மாணவியரை நான்கு குழுக்களாக பிரித்து அவர்களுக்கு உதவியாக கல்லூரி பேராசிரியர்களும், மாணவர்களும் வழிகாட்டுதலுடன் பண்ணைக்கு அழைத்து செல்லப்பட்டனர். ஒவ்வொரு பிரிவும் ஒவ்வொரு பகுதிக்கு அழைத்து செல்லப்பட்டனர். பேராசிரியர்கள் உதவியுடன் மாணவ,மாணவியர்க்கு விவசாய கல்லூரியில் வெண்டைக்காய், பாகற்காய், புடலங்காய் போன்றவை எவ்வாறு பறிப்பது என்பது தொடர்பாகவும் நேரில் கற்று கொண்டனர். 

மாணவர்களை வைத்து எடை போட செய்து விவசாயம் தொடர்பாக நேரடியாக செயல் முறை விளக்கம் கொடுக்கப்பட்டது. 240 ஏக்கர் நிலபரப்பில் அமைந்துள்ள இக் கல்லுாரியில் இயற்கை விவசாயம் கடைபிடிக்கப்படுவதை மாணவர்களுக்கு விரிவாக எடுத்து சொல்லப்பட்டது. இயற்கை வேளாண்மை முறையில் காய்கறிகள் மற்றும் கீரைகள் பயிரிடபட்டதையும் விளக்கமாக சொல்லப்பட்டது.

பூக்களில் முக்கியமாக மல்லிகை, மரங்களில் மா,பலா,வாழை மற்றும் மாதுளை, மேலும் சந்தனம், தேக்கு, செம்மரம் போன்ற பலன் தரும் மரக்கன்றுகள் பயிரிடபட்டுள்ளதை மாணவர்களுக்கு நேரடியாக விளக்கப்பட்டது. 

பின் அனைத்து மாணவ,மாணவியரையும் அவர்கள் கையால் செடிகளை நட செய்ய சொன்னார்கள். மாணவ ,மாணவியரும் சந்தோஷமாக செடிகளை நட்டனர். இதனையடுத்து ஆடு வளர்ப்பு, மாடு வளர்ப்பு, பால் தரும் பசுக்கள், கோழி இனங்களில் கினி கோழி ,வான் கோழி, நாட்டு கோழி, புறா, முயல், வாத்து போன்றவை ஒருங்கிணைந்த பண்ணை முறையில் வளர்க்க படுவதை விரிவாகவும் நேரடியாக விளக்கப்பட்டது. பின் மாணவர்கள் விவசாயம் தொடர்பான கேள்விகளை கேட்டு கல்லூரி தாளாளருடன் பதில்களை பெற்றனர்.

பின்பு மீன் பண்ணைகளை பார்வையிட்டு பூச்சியியல் துறை ஆய்வகம், மண் அறிவியல் ஆய்வகங்களையும் பார்வையிட்டனர். இதனைத் தொடர்ந்து மாணவர்கள் அனைவரும் சேற்றில் இறங்கி சந்தோஷமாக நாற்று நட்டனர். 

Advertisement:
இது தொடர்பான செய்திகள் :
Advertisement:
Advertisement:
[X] Close