[X] Close
JUST IN
  • BREAKING-NEWS வைகை அணையின் நீர்மட்டம் 69 அடியை எட்டியதால் மதுரை, திண்டுக்கல், சிவகங்கை, ராமநாதபுரம், தேனி மாவட்ட மக்களுக்கு 3ஆம் கட்ட வெள்ள அபாய எச்சரிக்கை
  • BREAKING-NEWS சென்னையில் பெட்ரோல் லிட்டருக்கு ரூ.84.96 காசுகளாகவும், டீசல் லிட்டருக்கு ரூ.79.51 காசுகளாகவும் விலை நிர்ணயம்
  • BREAKING-NEWS டென்மார்க் ஓபன் பேட்மிண்டன் தொடரின் இறுதிப்போட்டிக்கு முன்னேறினார் இந்தியாவின் சாய்னா நேவால்
  • BREAKING-NEWS நீர் மேலாண்மை குறித்து தமிழக அரசு எந்த சிந்தனையும் இல்லாமல் இருப்பது பேராபத்தை ஏற்படுத்தும்- டிடிவி தினகரன்
  • BREAKING-NEWS முதலமைச்சரை அவதூறாக பேசியதாக திண்டுக்கல் லியோனி மீது வழக்கு
  • BREAKING-NEWS குண்டர் சட்ட முறைகளை புதுவை அரசு கடைபிடிக்கவில்லை: உயர்நீதிமன்றம்
  • BREAKING-NEWS கேரளா: பம்பை, நிலக்கல், சன்னிதானம், இலவுங்கல் பகுதிகளில் மேலும் 3 நாட்களுக்கு 144 தடை உத்தரவு நீட்டிப்பு - பத்தினம்திட்டா காவல்துறை கோரிக்கையை ஏற்று ஆட்சியர் நூஹ் உத்தரவு

தங்கிலிஷ் முறையில் ட்வீட் போட்டு அசத்தும் அமெரிக்கப் பெண்..!

an-american-woman-has-twitted-has-been-in-tamil

அமெரிக்கப் பெண் ஒருவர் தமிழில் உரையாடி அசத்தி வருகிறார்.

தமிழ்நாட்டில் பிறந்து தமிழை தாய்மொழியாக கொண்டவர்களில் கூட சிலர் தங்களது பிள்ளைகளை தமிழ் மொழியில் படிக்கவைக்க விரும்புவதில்லை. காரணம் கேட்டால்.. தமிழால் என்ன பயன்..? அதனை வைத்துக் கொண்டு மற்ற மாநிலத்திற்கு வேலைக்கு போக முடியுமா....? என ஏகவசனம் பேசுவார்கள்.. இவர்கள் ஒருபக்கம் இருந்தால் மறுபக்கமோ தங்களுக்கு இங்கிலீஷ் மட்டும்தான் தெரியும்.. தமிழ் தெரியாது என ஆங்கிலத்திலே சமூக வலைத்தளங்ளில் ஸ்டேட்டஸ் போட்டு கொள்பவர்கள் இன்னொரு தரப்பினர். அதிலும் ஆயிரத்தெட்டு தப்பு இருக்கும்.

Read Also -> உலக நன்மைக்காக மிளகாய் வத்தல் யாகம் - ஏராளமானோர் பங்கேற்பு  

ஆனால் அமெரிக்காவில் பிறந்து வளர்ந்திருந்தாலும் சமந்தா ஜோ கோசுக்கு தமிழ் மீது ஏகப்பட்ட பிரியம். இதனால் முறைப்படி தமிழைக் கற்று வருகிறார். அவரின் பெரும்பாலான ட்வீட்டுகள் தங்கிலிஷ் முறையிலேயே இருக்கின்றன. அவருக்கு ஏகப்பட்ட தமிழ் ரசிகர்களும் ட்விட்டரில் விசிறியாக இருக்கின்றனர். அவ்வப்போது நேரம் கிடைக்கும் சமயங்களில் அவர் இந்தியா வருவதும் உண்டு.

Read Also -> சிலை கடத்தல் வழக்குகளை விசாரிக்க சிபிஐ மறுத்தது ஏன்?: தமிழக அரசு விளக்கமளிக்க உத்தரவு  

சமீபத்தில் தனது பிறந்த நாளை கொண்டாடியிருக்கிறார் சமந்தா ஜோ கோஸ். இதுதொடர்பாக தனது ட்விட்டரில் தங்கிலிஷ் முறையில் பதிவிட்ட சமந்தா ஜோ, “நாளைக்கு மத்தியானம் எனக்கு பிறந்த நாள். ஆனால் என்னால் பொறுத்திருக்க முடியாது. எனக்கு இப்பவே கேக் வேண்டும்” எனக் கூறியுள்ளார்.

உடனே தமிழ் ரசிகர்கள் பலரும் அவருக்கு கேக்கையே ஸ்மைலியாக அனுப்பியுள்ளனர். அதற்கு அவரும் தங்கிலிஷ் முறையில் நன்றி தெரிவித்துள்ளார். ஜோயல் அஜித் என்பவர், என்னை மணம் புரிந்து கொள்கிறாயே அழகியே? எனக் கேட்க, அதற்கு அவரோ எனக்கு திருமணம் நிச்சயம் செய்யப்பட்டுவிட்டது. மன்னிக்கவும் எனத் தெரிவித்துள்ளார்.

Read Also -> “என்னை ஆஜராக உத்தரவிட அதிகாரம் இல்லை ஹெச்.ராஜா 

இதுபோல ட்விட்டரின் அத்தனை பதிவுகளும் தங்கிலிஷ் முறையிலேயே உள்ளன. தமிழ்நாட்டில் பிறந்து தமிழை பேசுவதையே சிலர் கௌரவக் குறைச்சலாக கருதும் நிலையில் அமெரிக்கப் பெண் ஒருவர் தமிழ் மீது கொண்ட தீராக காதலால் அதனை கற்று வருவது தமிழுக்கு மட்டும் அல்ல தமிழருக்கும் இது பெருமிதம்.

Advertisement:
Advertisement:
Advertisement:
[X] Close