[X] Close
JUST IN
  • BREAKING-NEWS கஜா புயல் எச்சரிக்கையை தொடர்ந்து தஞ்சையில் நாளை பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை - ஆட்சிய
  • BREAKING-NEWS சென்னையில் பெட்ரோல் லிட்டருக்கு ரூ.80.42 காசுகளாகவும், டீசல் லிட்டருக்கு ரூ.76.30 காசுகளாகவும் விலை நிர்ணயம்
  • BREAKING-NEWS ஆறுமுகசாமி ஆணையத்தின் விசாரணைக்கு உதவும் வகையில் காவல் ஆய்வாளரை நியமிக்க அரசு ஒப்புதல்
  • BREAKING-NEWS இலங்கை நாடாளுமன்றம் ஏற்கனவே அறிவித்தபடி நாளை காலை 10 மணிக்கு கூடுகிறது
  • BREAKING-NEWS இலங்கை நாடாளுமன்றம் கலைக்கப்பட்டதற்கு இடைக்கால தடை விதித்தது இலங்கை உச்சநீதிமன்றம்
  • BREAKING-NEWS கூவம், அடையாறு ஆற்றை பராமரிப்பு செய்யாத வழக்கில் அரசுக்கு விதித்த ரூ.2 கோடி அபராதத்துக்கு தடை
  • BREAKING-NEWS வைகை அணையில் இருந்து பாசனத்திற்காக நவ.23ம் தேதி முதல் 24ம் தேதிவரை தண்ணீர் திறக்க முதல்வர் உத்தரவு

தமிழகத்தில் மழை நீடிக்கும்: வானிலை ஆய்வு மையம்

rain-will-continue-in-tamil-nadu-meteorological-center

தமிழகத்தின் கடலோர மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

நேற்று முன் தினம் தென் மேற்கு வங்கக் கடலில் காற்றழுத்தத் தாழ்வு நிலை உருவானது. தற்போது தாழ்வு நிலை வலுவடைந்து ஆழ்ந்த காற்றழுத்ததாழ்வு நிலையாக உருமாறியுள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. இதன் காரணமாக தமிழகம், புதுச்சேரியின் பல்வேறு இடங்களில் மழைப் பெய்து வருகிறது. குறிப்பாக நெல்லை, மதுரை, திருச்சி, கடலூர், நாகை மாவட்டங்களில் கனமழைப் பெய்தது. அடுத்த 24 மணி நேரத்தில் தென் தமிழகம், கடலோர மாவட்டங்களில் மழை நீடிக்கும் என்றும், தமிழகம் முழுவதும் பரவலாக மழைப் பெய்யும் என சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

இந்த ஆழ்ந்த காற்றழுத்தத் தாழ்வு நிலை வலுவடைந்து தாழ்வு மண்டலமாக மாறி நாளை நாகை - பாம்பன் இடையே கரையைக் கடக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. தற்போது நாகை, பாம்பன் ஆகிய துறைமுகங்களில் 3 ஆம் எண் புயல் எச்சரிக்கைக் கூண்டு ஏற்றப்பட்டுள்ளது.

Advertisement:
இது தொடர்பான செய்திகள் :
Advertisement:
Advertisement:
[X] Close