[X] Close
JUST IN
  • BREAKING-NEWS ஜம்மு-காஷ்மீர்: ஷோபியான் மாவட்டத்தில் பயங்கரவாதிகளால் கடத்தப்பட்ட 2 காவல் அதிகாரிகள், ஒரு காவலரை பயங்கரவாதிகள் கொலை செய்துள்ளனர்
  • BREAKING-NEWS ராமநாதபுரம்: மண்டபம் முகாமில் இலங்கை அகதிகளுக்கு 20 நாட்களுக்கும் மேலாக உதவித்தொகை வழங்கப்படவில்லை என இலங்கை அகதிகள் குற்றச்சாட்டு
  • BREAKING-NEWS கள்ளக்குறிச்சி வட்டார போக்குவரத்து ஆய்வாளர் பாபுவின் உதவியாளர் செந்தில்குமாரின் கூட்டுறவு வங்கி லாக்கர் முடக்கம்
  • BREAKING-NEWS கரூர்: பரமத்தி, பவுத்திரம் ஆகிய பகுதிகளில் உள்ள கல்குவாரிகளில் 2ம் நாளாக வருமானவரி சோதனை
  • BREAKING-NEWS திமுக ஆட்சியைப் பிடிக்கவும் முடியாது, மு.க.ஸ்டாலின் முதலமைச்சர் ஆகவும் முடியாது - வைகைச்செல்வன்
  • BREAKING-NEWS மறைந்த முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவின் வாழ்க்கை வரலாறு பற்றிய படத்தின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர் வெளியீடு
  • BREAKING-NEWS எக்காலத்திலும் செவிலியர் படிப்புக்கு நீட் தேர்வை அனுமதிக்கமாட்டோம் - அமைச்சர் விஜயபாஸ்கர்

பெட்ரோல் விலை டம்முனு குறையும் - இல கணேசன்

bjp-leader-ila-ganesan-answered-to-multiple-questions-at-thoothukudi

பாஜகவின் மூத்த தலைவர்களுள் ஒருவரான இல கணேசன் தூத்துக்குடி சென்றுள்ளார். அங்கு செய்தியாளர்களை சந்தித்த அவர் பல்வேறு கேள்விகளுக்கு பதிலளித்தார். 

கேள்வி : பெட்ரோல் விலை உயர்ந்து கொண்டே செல்கிறதே ?

பெட்ரோல் , டீசல் விலை உயர்வு மக்களை கடுமையாக பாதித்துள்ளது ; விலை உயர்வால் பாகவினரும் பாதிக்கப்பட்டுள்ளோம்

கேள்வி :  மல்லையா , ஜெட்லி குறித்தெல்லாம் சுவாமி கருத்து தெரிவிக்கிறாரே? 

சுப்ரமணியன் சுவாமி சுதந்திரமாக பேசக் கூடியவர், பாஜக அந்த சுதந்திரத்தை கொடுத்துள்ளது

கேள்வி :  காங்கிரஸ் பல்வேறு விதமான விமர்சனங்களை உங்கள் மேல் வைக்கிறதே ?

யார் விமர்சனம் செய்தாலும் ஏற்றுக் கொள்ளலாம் ; ஆனால் காங்கிரஸ் விமர்சனம் செய்ய யோக்கியதை இல்லாத கட்சி 

கேள்வி :  தமிழகத்தில் யாருடன் கூட்டணி வைப்பீர்கள் ? 

பாஜக கண்டிப்பாக கூட்டணி வைத்துதான் போட்டியிடும் ; ஆனால் கூட்டணி குறித்து பேசுவதற்கான காலம் இன்னும் கனியவில்லை

கேள்வி :  திமுக - காங்கிரஸ் உறவு பற்றி ?

காங்கிரஸ் குறித்து ஏதேனும் கருத்து தெரிவித்தால், எங்கே அது காங்கிரசுக்கு பாதிப்பை ஏற்படுத்தி தேவையற்ற சிக்கலை ஏற்படுத்துமோ என திமுக அஞ்சுகிறது

கேள்வி :  திமுக உடன் பாஜக கூட்டணி வைக்குமா ?

கூட்டணி வைப்பது குறித்து இப்போது திமுகவும் கற்பனை செய்யவில்லை ; பாஜகவும் கற்பனை செய்யவில்லை

கேள்வி :  பெட்ரோல் விலை குறைய நடவடிக்கை எடுக்கப்படுகிறதா ?

இன்னும் ஒருவாரத்திற்குள் பெட்ரோல், டீசல் விலை டம்முனு குறைந்தாலும் ஆச்சரியப்படுவதற்கில்லை 


 

Advertisement:
இது தொடர்பான செய்திகள் :
Advertisement:
Advertisement:
[X] Close