[X] Close
JUST IN
  • BREAKING-NEWS ஸ்டெர்லைட் ஆலையை ஆய்வு செய்யும் குழுவின் முதல் கூட்டம் சென்னையில் செப்.24ஆம் தேதி காலை 10 மணிக்கு நடைபெறுகிறது
  • BREAKING-NEWS மகாத்மா காந்தியின் 150ஆவது பிறந்தநாள் விழா லோகோவை டெல்லியில் வெளியிட்டார் ஜனாதிபதி ராம்நாத் கோவிந்த்
  • BREAKING-NEWS ஸ்டெர்லைட் ஆலையில் நிபுணர் குழுவின் ஆய்வை ஒத்திவைக்க வேண்டும் என மத்திய மாசுக் கட்டுப்பாடு வாரியத்திற்கு தமிழக மாசுக்கட்டுப்பாடு வாரியம் கடிதம்
  • BREAKING-NEWS பாஜக அரசால்தான் விவசாயிகளின் வருவாய் இரட்டிப்பாகும் - அமித்ஷா
  • BREAKING-NEWS சுதந்திர இந்தியாவில் முதல் பெண் ஐஏஎஸ் அதிகாரி காலமானார்
  • BREAKING-NEWS சென்னையில் ஆட்டோ, ஷேர் ஆட்டோ கட்டணம் உயர்வு
  • BREAKING-NEWS புழல் சிறையில் வார்டன்கள் அதிரடி இடமாற்றம்

சிகிச்சைக்காக மருத்துவமனை சென்றவருக்கு ஏற்பட்ட விபத்து !

patient-injured-in-a-hospital-accident

தருமபுரி அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்கு வந்தவர் மீது மேற்கூரை காத்தாடி விழுந்ததால் சரவணன் என்பவருக்கு தலையில் படுகாயம் ஏற்பட்டது

தருமபுரி அடுத்த பழைய தருமபுரியை சேர்ந்த கூலி தொழிலாளி சரவணன். இவருக்கு கடந்த சில மாதங்களாக இரத்த அழுத்தம், நுரையீரல் கோளாறு இருந்து வந்துள்ளது. இதற்காக தருமபுரி அரசு மருத்துவ கல்லூரி மருத்துவமனையில் மாதந்தோறும் வந்து பரிசோதனை செய்து கொண்டு மாத்திரை வங்கி செல்வது வழக்கம்.

இந்நிலையில் நேற்று காலை வழக்கமான பரிசோதனைக்காக சரவணன் தருமபுரி அரசு மருத்துவ கல்லூரி மருத்துவமனைக்கு வந்து பரிசோதனை செய்துள்ளார். தொடர்ந்து தோல் மருத்துவரை பார்க்கஅந்த பிரிவுக்கு சென்று, மருத்துவரிடம் தனது பிரச்சினை குறித்து தெரிவித்துள்ளார். தொடர்ந்து மருத்துவர் சரவணின் உடலை பரிசோதனை செய்துள்ளார். அப்பொழுது அந்த அறையின் மேற்கூரையில் இருந்த காத்தாடி எதிர்பாரத விதமாக சரவணனின் தலை மீது விழுந்துள்ளது. இதில் சரவணன் தலையில் பழுத்த காயம் ஏற்பட்டு இரத்தம் கொட்டியதில் சர்வணன் மயக்கமடைந்தார். இதனையடுத்து மருத்துவர்கள் சரவணனுக்கு சிகிச்சையளித்துள்ளனர்.

தொடர்ந்து சரவணன் மருத்துவமனையில் உள்நோயாளியாக தங்கி சிகிச்சை எடுத்துக் கொள்வதாக தெரிவித்துள்ளார். ஆனால் சிகிச்சை முடிந்து மருத்துவர்கள் சரவணனை வீட்டுக்கு அனுப்பி வைத்தனர்., இந்நிலையில் சரவணனுக்கு இரவு திடிரென வாந்தி தலை சுற்றல் ஏற்பட்டுள்ளது. இதனையடுத்து 108 அவசர ஊர்தி மூலம் தருமபுரி அரசு மருத்துவ கல்லூரி மருத்துமனைக்கு வந்து சிகிச்சை பெற்று வருகிறார். மேலும் தலையில் ஏற்பட்ட காயத்திற்கு 7 தையல் போடப்பட்டிருப்பதால், சரவணனால், பேசுமுடியமாலும், தாகத்திற்கு தண்ணீர் குடிக்க முடியாமலும் தவித்து வருகிறார். தருமபுரி அரசு மருத்துமனை நிர்வாகத்தின் கவனக் குறைவால் இதுபோன்ற சம்பவங்கள் நிகழவதாக புகார் எழுந்துள்ளது. மேலும் மருத்துவமனையில் பல்வேறு பிரச்சிணைகள் ஏற்படுவதாக பொதுமக்கள் புகார் தெரிவிக்கின்றனர்.

Advertisement:
இது தொடர்பான செய்திகள் :
Advertisement:
Advertisement:
[X] Close