[X] Close
JUST IN
  • BREAKING-NEWS கிழக்கு டெல்லி மக்களவை தொகுதியில் பாஜக சார்பில் முன்னாள் கிரிக்கெட் வீரர் கவுதம் கம்பீர் போட்டியிடுகிறார்
  • BREAKING-NEWS சென்னையில் நடைபெறுவதாக இருந்த ஐபிஎல் 2019 இறுதிப்போட்டி ஐதராபாத்துக்கு மாற்றம்
  • BREAKING-NEWS கொழும்பு கொச்சிக்கடை கந்தானையில் தேவாலயம் அருகே கைப்பற்றப்பட்ட வெடிகுண்டை செயலிழக்க செய்ய முயன்றபோது குண்டு வெடித்தது
  • BREAKING-NEWS இலங்கையின் கொழும்பு பேருந்து நிலையத்தில் நின்றிருந்த பேருந்தில் இருந்து 87 டெட்டனேட்டர்கள் பறிமுதல்; வெடி குண்டுகளை செயலிழக்க செய்யும் பணியில் நிபுணர்கள் ஈடுபட்டுள்ளதாக தகவல்
  • BREAKING-NEWS காஞ்சிபுரம் மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகளில் பலத்த காற்றுடன் கனமழை; கன்னியாகுமரி மாவட்டம் தக்கலை, அழகிய மண்டபம், மூலச்சல் உள்ளிட்ட பகுதிகளில் கனமழை
  • BREAKING-NEWS இலங்கையில் தொடர் குண்டு வெடிப்பு காரணமாக இன்று நள்ளிரவு முதல் அவசரநிலை பிரகடனம்
  • BREAKING-NEWS தமிழகத்தில் உள்ளாட்சி தேர்தல் நடத்த மேலும் 3 மாதம் அவகாசம் தேவை என உச்சநீதிமன்றத்தில் தமிழக தேர்தல் ஆணையம் பிரமாணப் பத்திரம் தாக்கல்

பிறந்தநாள் கேக்குடன் சோகம் - காதல் தம்பதி மர்ம மரணம்!

thiruvallur-newly-love-married-couple-attend-suicide

மீஞ்சூர் அருகே காதல் தம்பதியின் உடல்கள் அவர்களது வீட்டில் இருந்து கண்டெடுக்கப்பட்டுள்ளன. 

திருவள்ளூர் மாவட்டம் மீஞ்சூர் அருகே கேசவபுரத்தைச் சேர்ந்தவர்கள் வெங்கடேஷ் - தனலட்சுமி தம்பதி. இருவரும் 3 மாதங்களுக்கு முன் காதல் திருமணம் செய்துள்ளனர். வெங்கடேஷ் எண்ணூரில் உள்ள நிறுவனம் ஒன்றில் வேலைபார்த்து வந்தார். இந்த நிலையில் இன்று காலை வெகுநேரம் ஆகியும் வெங்கடேஷ் வீடு திறக்கப்படாததால் அக்கம்பக்கத்தினர் ஜன்னல் வழியே உள்ளே பார்த்துள்ளனர். அங்கே தனலட்சுமி ‌வாயில் நுரை தள்ளிய நிலையில் படுக்கையிலும், வெங்கடேஷ் மின்விசிறியில் தூக்கிட்ட நிலையிலும் உயிரிழந்து கிடந்துள்ளனர். 

தகவலறிந்து நிகழ்விடத்துக்கு வந்த காவல்துறையினர் இருவரின் உடல்களையும் கூறாய்வுக்காக பொன்னேரி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். உயிரிழந்த வெங்கடேஷுக்கு நேற்று பிறந்தநாள். அதைக் கொண்டாடுவதற்காக வாங்கப்பட்ட கேக் வீட்டில் இருந்துள்ளது. வீட்டிலிருந்து கடிதம் ஒன்று கிடைத்ததாக கூறப்படுகிறது. அதில் தங்கள் இறப்புக்கு யாரும் காரணமில்லை என்று தனலட்சுமி கைப்பட எழுதியிருப்பதாக தெரிகிறது. எனவே இருவரும் தற்கொலை செய்து கொண்டிருக்கலாம் என்ற கோணத்தில் காவல்துறையினர் விசாரணை நடத்தி வருகின்றனர்.

தற்கொலை என்பது எதற்கும் முடிவல்ல. மனித உயிரை மாய்த்துக்கொள்வதற்கான உரிமை யாருக்கும் இல்லை. தற்கொலை எண்ணம் மேலிடும் போது உரிய ஆலோசனை பெற்றால் புதிய வாழ்க்கை அவர்களுக்காக காத்துக்கொண்டுள்ளது. அதற்காகவே சினேஹா போன்ற தன்னார்வ தொண்டு நிறுவனங்கள் சேவை ஆற்றி வருகின்றன. அவர்களின் எண்ணில் அழைத்து இலவசமாக ஆலோசனை பெறலாம்.

(சினேஹா தன்னார்வ தொண்டு நிறுவனம்,

எண்; 11, பார்க் வியூவ் சாலை,

ஆர்.ஏ. புரம்,

சென்னை - 600 028.

தொலைபேசி எண் - +91 44 2464 0050,   +91 44 2464 0060)

 

Advertisement:
இது தொடர்பான செய்திகள் :
Advertisement:
Advertisement:
[X] Close