[X] Close
JUST IN
  • BREAKING-NEWS என் மீது புகார் அளித்தவர்கள் மீது பரிதாபம் வருகிறது; சிலர் பின்னால் இருந்து இயக்குகிறார்கள் - பொன்.மாணிக்கவேல்
  • BREAKING-NEWS பெரியகுளம் நகர மன்ற முன்னாள் தலைவரும் துணை முதல்வர் ஓபிஎஸ்சின் சகோதரருமான ஓ.ராஜா அதிமுகவில் இருந்து நீக்கம் - ஓபிஎஸ்-ஈபிஎஸ்
  • BREAKING-NEWS ஸ்டெர்லைட் ஆலையை திறக்க அனுமதித்த தேசிய பசுமை தீர்ப்பாய உத்தரவுக்கு எதிராக முறையீடு
  • BREAKING-NEWS ஜிசாட்-7ஏ செயற்கைக்கோளுடன் ஜிஎஸ்எல்வி எஃப்11 ராக்கெட்டை இன்று விண்ணில் செலுத்துகிறது இஸ்ரோ
  • BREAKING-NEWS தமிழகம் முழுவதும் சாலைகளில் இடையூறு ஏற்படுத்தும் வகையில் பேனர்கள் வைக்க உயர்நீதிமன்றம் தடை
  • BREAKING-NEWS சென்னையில் பெட்ரோல் லிட்டருக்கு ரூ.73.29 காசுகளாகவும், டீசல் லிட்டருக்கு ரூ.68.14 காசுகளாகவும் விலை நிர்ணயம்
  • BREAKING-NEWS ஊடகங்களிடம் பேச அஞ்சும் பிரதமராக நான் இருக்கவில்லை; ஒவ்வொரு வெளிநாட்டு பயணம் முடிந்ததும் பத்திரிகையாளர் சந்திப்பு நடத்தியிருக்கிறேன் - முன்னாள் பிரதமர் மன்மோகன் சிங்

ஆசிரியருக்கு மசாஜ் செய்யும் மாணவன்; வைரலாகும் வீடியோ 

student-is-massaging-the-teachers-in-thindugal-government-school

திண்டுக்கல் மாவட்டம் ஒட்டன்சத்திரம் அருகே பள்ளி மாணவன், ஆசிரியர் ஒருவருக்கு தலையில் மசாஜ் செய்வது போன்ற வீடியோ இணையதளங்களில் வேகமாக பரவி வருகிறது. 

திண்டுக்கல் மாவட்டம் ஒட்டன்சத்திரம் அருகே உள்ள இடையகோட்டையில் நேருஜி அரசு மேல்நிலைப்பள்ளி இயங்கி வருகிறது. இந்தப் பள்ளியில் 6ஆம் வகுப்பு முதல் 12ஆம் வகுப்பு வரை உள்ளது. இந்த பள்ளியில்  சுற்றுவட்டார சுமார் பகுதிகளிலிருந்து 1000-க்கும் மேற்பட்ட மாணவ மாணவிகள் பயின்று வருகின்றனர். இங்கு கடந்த சில வருடங்களுக்கு முன்பு பள்ளியின் ஆண்டு விழாவை முன்னிட்டு 6ஆம் வகுப்பு முதல் 10ஆம் வகுப்பு வரை படிக்கும் மாணவர்களுக்கு அதே பள்ளியில் இருக்கும் ஆசிரியர் இளங்கோவன் என்பவர் மாணவர்களுக்கு ஒத்திகை நடத்தி தந்ததாகவும் 8ஆம் வகுப்பு படிக்கும் விஷால்கார்த்தி என்ற மாணவருக்கு ஒத்திகை என்ற பெயரில் மாணவனை அழைத்து சென்றுள்ளார்.

அபோது இளங்கோவன் தனக்கு தலையில் மசாஜ் செய்ய வற்புறுத்தியதாகவும், எதிரில் அமர்ந்திருந்த 11ஆம் வகுப்பு படிக்கும் மாணவர்களுக்கு பாடம் நடத்தும் ரங்கராஜ் என்ற ஆசிரியர் தனது சட்டைப் பையில் வைத்திருந்த செல்போனில் இதை வீடியோ எடுத்துள்ளார். இதை அவர் கடந்த சில தினங்களுக்கு முன் இணையதளங்களில் பரப்பியதை அடுத்து பொதுமக்கள் அதை பார்த்து அதிர்ச்சியடைந்தனர். பின்பு வாரத்தில் முதல் நாளான நேற்று சுற்று வட்டாரத்தில் இருந்து 10க்கும் மேற்பட்ட கிராம மக்கள் 300க்கும் மேற்பட்டோர் பள்ளியை முற்றுகையிட்டு தர்ணாவில் ஈடுபட்டனர். 

தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு வந்த திண்டுக்கல் மாவட்ட முதன்மை கல்வி அலுவலர், பின்பு பொதுமக்களிடம் சமரசம் பேசி பள்ளியில் மாணவர்களை படிப்பைத் தவிர்த்து பல்வேறு பணிகளில் ஈடுபடுத்திய இளங்கோவன் மற்றும் ரங்கராஜ் ஆகிய இரு ஆசிரியர் மீது துரை ரீதியாக நடவடிக்கை எடுக்கப்படும் என உறுதியளித்தின் பேரில் பொதுமக்கள் முற்றுகையை கைவிட்டனர். இச்சம்பவம் குறித்து இடையகோட்டை அரசு பள்ளியில் பெரும் பரபரப்பு ஏற்பட்டது.

இது குறித்து மாவட்ட முதன்மை கல்வி அலுவலர் சுப்பிரமணியிடம் தொடர்பு கொண்டு கேட்ட போது மசாஜ் இச்சம்பவம் ஒரு ஆண்டுக்கு முன்பு நடந்தாக தெரிய வருகிறது, இது குறித்து விசாரணை நடத்த உள்ளோம், மேலும் சில ஆசிரியர்கள் சரியாக பணி செய்யவில்லை அவர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்தனர் இது சம்மந்தமாக விசாரணை நடத்தி நடவடிக்கை எடுக்கபடும் என தெரிவித்தார்.

வீடியோ

Advertisement:
Advertisement:
Advertisement:
[X] Close