[X] Close
JUST IN
  • BREAKING-NEWS மறைந்த மத்திய அமைச்சர் அனந்த்குமாரின் தொகுதியான தெற்கு பெங்களூரு காலியாக உள்ளதாக தேர்தல் ஆணையம் அறிவிப்பு
  • BREAKING-NEWS தமிழகம் மற்றும் புதுச்சேரியில் ஒருசில இடங்களில் அடுத்த 3 மணி நேரத்துக்கு மழை பெய்யும் - வானிலை ஆய்வு மையம்
  • BREAKING-NEWS காஞ்சிபுரம்: செங்கல்பட்டு, மதுராந்தகம் மற்றும் அதன் சுற்றுவட்டாரப் பகுதிகளில் கனமழை
  • BREAKING-NEWS கஜா புயலால் பாதிக்கப்பட்ட 7 மாவட்ட மக்களுக்கு நடிகர் விஜய் தனது மக்கள் இயக்கம் மூலம் நிதியுதவி
  • BREAKING-NEWS புதுச்சேரி மற்றும் காரைக்கால் சுற்றுவட்டார பகுதிகளில் கனமழை
  • BREAKING-NEWS சென்னையில் பெட்ரோல் லிட்டருக்கு ரூ.79.31 காசுகளாகவும், டீசல் லிட்டருக்கு ரூ.75.31 காசுகளாகவும் விலை நிர்ணயம்
  • BREAKING-NEWS சென்னை மெரினா கடற்கரை சாலையில் எம்ஜிஆர் நூற்றாண்டு வளைவை திறக்க உயர்நீதிமன்றம் தடை

வேலைக்காரப் பெண்ணைக் 'தோசைக் கரண்டியால்' அடித்துக் கொன்ற அக்கா, தங்கை!

wife-of-a-businessman-who-killed-a-female-servant

சென்னையில் வீட்டு வேலைக்காரப் பெண்ணை தோசைக் கரண்டியால் அடித்துக் கொன்றதாக தொழிலதிபரின் மனைவி உள்பட இரு‌வர் சிறையில் அடைக்கப்பட்டுள்ளனர். 

காஞ்சிபுரம் மாவட்டம் செய்யாறைச் சேர்ந்த முருகானந்தம், சுஷ்மிதா தம்பதி சென்னை அடையாறு பெசன்ட் அவென்யூவில் வசித்து வந்தனர். அவர்களது வீட்டில் ஆந்திர மாநிலம் ராஜமுந்திரியைச் சேர்ந்த மகாலட்சுமி என்ற 19 வயது பெண், கடந்த 5 ஆண்டுகளாக வேலை செய்து வந்தார். சமையல் கேஸ் சிலிண்டர் நிறுவனம் நடத்திவரும் முருகானந்தம், கடந்த புதன்கிழமை பணி நிமித்தமாக வெளியே சென்றுள்ளார். அப்போது அவரை தொலைபேசியில் தொடர்பு கொண்ட மனைவி சுஷ்மிதா, வேலைக்காரப் பெண் மகாலட்சுமி வீட்டில் உயிரிழந்து கிடப்பதாகக் கூறி அதிர்ச்சியளித்தார்.

 பதறிப்போன முருகானந்தம் வீட்டில் சென்று பார்த்தபோது, உடலில் காயங்களுடன் சடலமாகக் கிடந்துள்ளார் மகாலட்சுமி. வீட்டில் யாரும் இல்லாத நேரத்தில் இச்சம்பவம் நேர்ந்துவிட்டதாக கூறி முருகானந்தத்தை நம்ப வைத்துள்ளார் சுஷ்மிதா. தகவலறிந்து சென்ற சாஸ்திரிநகர் காவல்துறையினர், மகாலட்சுமியின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக ராயப்பேட்டை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

காவல்துறை விசாரணையிலும் தான் ஒன்றும் தெரியாத அப்பாவி போலவே நாடகமாடியுள்ளா‌ர் சுஷ்மிதா. இதனிடையே மகாலட்சுமியின் பிரேத பரிசோதனை அறிக்கை, அவரது மரணத்தில் இருந்த சந்தேகத்தை வெளிச்சத்திற்கு கொண்டு வந்தது. மகாலட்சுமியின் தோள்பட்டை மற்றும் பின்னந்தலையில் அடிபட்ட காயங்களும், முழங்கால் பகுதியில் வெந்நீர் ஊற்றியதால் வெந்து போன தடயங்களும் இருந்ததால், அவர் துன்புறுத்தப்பட்டு கொல்லப்பட்டிருப்பதாக அறிக்கையில் தகவல் தெரிவிக்கப்பட்டது. அதனால் சுஷ்மிதா மீதான சந்தேகம் வலுப்பெற்ற நிலையில், விசாரணையும் தீவிரமடைந்தது. அப்போது, அவர் அளித்த வாக்குமூலத்தால் காவலர்கள் அதிர்ச்சியடைந்தனர். சைக்கோ போல் நடந்து கொண்டிருந்த மகாலட்சுமி, வீட்டில் அடிக்கடி பிரச்னை செய்து வந்ததால் அவர் மீது சுஷ்மிதா வெறுப்பில் இருந்ததாகத் தெரிகிறது.

 தன்னை வேலையை விட்டு நீக்கினால் தற்கொலை செய்து கொள்வேன் என மகாலட்சுமி மிரட்டல் விடுத்ததால் அவருக்கு ஆத்திரமும் ஏற்பட்டுள்ளது. சம்பவம் நடந்த அன்று இருவருக்கும் ஏற்பட்ட வாக்குவாதத்தில் தங்கை மித்ராசினியுடன் சேர்ந்து தேசைக் கரண்டியால் மகாலட்சுமியின் தலையிலேயே தாக்கிய சுஷ்மிதா, அவரை அடித்தே கொலை செய்திருப்பதாக காவல்துறையினர் தெரிவித்துள்ளனர். மேலும் மகாலட்சுமி‌யின் மீது அவர்கள் கொதிக்கும் வெந்நீரை ஊற்றியதால், திடீரென வலிப்பு ஏற்பட்டு அவர் உயிரிழந்துள்ளார். இச்சம்வத்தை கொலை வழக்காக பதிவு செய்த காவல்துறையினர், சுஷ்மிதா மற்றும் அவரது தங்கையை சைதாப்பேட்டை 11ஆவது நீதிமன்ற நீதிபதி முன் ஆஜர்படுத்தி புழல் பெண்கள் சிறையில் அடைத்தனர்.

Advertisement:
Advertisement:
Advertisement:
[X] Close