[X] Close
JUST IN
  • BREAKING-NEWS மாலத்தீவு அதிபர் பதவியேற்பு விழாவில் பங்கேற்க மாலேவுக்கு சென்ற இந்திய பிரதமர் மோடிக்கு உற்சாக வரவேற்பு
  • BREAKING-NEWS முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக லட்சத்தீவுகள் கடல் பகுதிக்கு மீன்பிடிக்க மீனவர்கள் செல்ல வேண்டாம் - கஜா புயலை தொடர்ந்து அரபிக் கடலில் புதிதாக புயல் உருவாவதால் அவசர கட்டுப்பாட்டு மையம் அறிவுறுத்தல்
  • BREAKING-NEWS கஜா புயலால் உயிரிழந்தோர் எண்ணிக்கை 46 ஆக அதிகரித்தது
  • BREAKING-NEWS கஜா புயலால் தமிழகம் முழுவதும் உயிரிழந்தோர் எண்ணிக்கை மதியம் 2 மணி நிலவரப்படி 40ஆக அதிகரிப்பு
  • BREAKING-NEWS வேதாரண்யம் அருகே 35க்கும் மேற்பட்ட கிராமங்களில் தொலைத்தொடர்பு சேவைகள் முழுவதும் பாதிப்பு
  • BREAKING-NEWS கஜா புயலால் கடுமையாக பாதிக்கப்பட்ட வேதாரண்யம் தனித்தீவாக காட்சியளிக்கிறது
  • BREAKING-NEWS கடற்கரையில் உள்ளவர்களை கலைந்து செல்ல அறிவுறுத்துமாறு காவல்துறைக்கு பேரிடர் மேலாண்மைத் துறை உத்தரவு

அமைச்சர் ஜெயக்குமாரின் உறவினர் பட்டப்பகலில் வெட்டிக்கொலை

minister-jayakumar-relative-murdered-in-kasimedu

சென்னை காசிமேட்டில் பட்டப்பகலில் ஒருவர் வெட்டிக்கொலை செய்யப்பட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

சென்னை காசிமேடு காசிபுரத்தை சேர்ந்தவர் சிவக்குமார். மாநகராட்சி ஊழியரான இவர், அங்குள்ள தேனீர் கடை ஒன்றில் இன்று தேனீர் குடித்துக்கொண்டிருந்துள்ளார். அப்போது முகமூடி அணிந்து வந்த 5 பேர் கொண்ட கும்பல், சிவகுமாரை பயங்கர ஆயுதங்களால் தாக்கியுள்ளனர். அவர்களின் தாக்குதலில் சிவக்குமார் படுகாயமடைந்துள்ளார். அந்தப்பகுதி ஆள் நடமாட்டம் அதிகமுள்ள பகுதி என்பதால், அந்தக் கும்பல் அங்கிருந்து உடனே தப்பி ஓடியுள்ளது.

இதையடுத்து அங்கிருந்தவர்கள் காசிமேடு காவல்துறையினருக்கு தகவல் தெரிவித்துள்ளனர். சம்பவ இடத்திற்கு வந்த காவலர்கள் உயிருக்குப்போராடிய சிவக்குமாரை மீட்டு, அரசு மருத்துவமனையில் அனுமதித்துள்ளனர். ஆனால் சிகிச்சை பலனின்றி அவர் உயிரிழந்துள்ளார். சிவக்குமார் காசிமேடு மீனவர் ஐக்கிய சபையில் முன்னாள் நிர்வாகியாக இருந்தவர்.

இவர் ஆளும் கட்சியின் முக்கியப் பிரமுகருக்கு ஆதரவாக செயல்பட்டு வந்ததாக கூறப்படுகிறது. இந்நிலையில் ராயபுரத்தை சேர்ந்த மற்றொரு ஆளும் கட்சியை சேர்ந்த பிரமுகரின் பேனர் கிழிக்கப்பட்டதால், பிரச்னை ஏற்பட்டதாக தகவல் கசிந்துள்ளது. இதுபோன்ற பல அரசியல் பிரச்னைகளின் உச்சமாகவே, இன்று சிவக்குமார் வெட்டிப்படுகொலை செய்யப்பட்டதாகவும் கூறப்படுகிறது.

ஆள்நடமாட்டம் மிகுந்த பகுதியில் இப்படி ஒரு படுகொலை சம்பவம் நடந்திருப்பது, அப்பகுதி மக்களிடையே அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது. கொலை செய்யப்பட்ட சிவக்குமார், மீன்வளத்துறை அமைச்சர் ஜெயக்குமாரின் உறவினர் என்பது குறிப்பிடத்தக்கது.

Advertisement:
இது தொடர்பான செய்திகள் :
Advertisement:
Advertisement:
[X] Close