[X] Close
JUST IN
  • BREAKING-NEWS மேகதாது அணை விவகாரத்தில் மத்திய அரசுக்கு தமிழக அரசு அழுத்தம் தர வேண்டும்; மேகதாது அணை கட்டுவதற்கு உச்சநீதிமன்றத்தில் உடனடியாக தடை பெற வேண்டும் - மு.க.ஸ்டாலின்
  • BREAKING-NEWS நாடாளுமன்ற தேர்தலில் மம்தா பானர்ஜியால் பெரிய அளவில் வெற்றி பெற முடியாது; கொல்கத்தாவில் நடந்த மாநாட்டில் மிகக் குறைவாகவே கூட்டம் கூடியது - கே.பாலகிருஷ்ணன்
  • BREAKING-NEWS வாக்குப்பதிவு இயந்திரத்தில் முறைகேடு செய்யலாம் என தவறான தகவலை பரப்பியதாக லண்டனில் நடந்த நிகழ்ச்சி தொடர்பாகவும், நிகழ்ச்சி ஏற்பாட்டாளர் மீதும் டெல்லி போலீசில் தேர்தல் ஆணையம் புகார்
  • BREAKING-NEWS நாடாளுமன்ற தேர்தலில் பாஜக-அதிமுக கூட்டணி உறுதி - மத்திய அமைச்சர் ராம்தாஸ் அத்வாலே
  • BREAKING-NEWS தமிழகத்தில் போலியோ சொட்டு மருந்து வழங்குவது தாமதமாகும்; மத்திய தடுப்பு மருந்து தொழில்நுட்பக்குழு பரிந்துரையால் பிப்.3ல் போலியோ சொட்டு மருந்து முகாம் இல்லை - அமைச்சர் விஜயபாஸ்கர்
  • BREAKING-NEWS பட்டாசு ஆலை தொடர்பான வழக்கில் விசாரணையை 29ம் தேதிக்கு ஒத்திவைத்தது உச்சநீதிமன்றம்
  • BREAKING-NEWS அதிமுக உள்கட்சி விவகாரத்தில் பாஜக மூக்கை நுழைப்பது தவறானது - தம்பிதுரை எம்.பி.

“லெக் பீஸ் இல்லையா?”- ஹோட்டல் ஓனரின் கைவிரலை வெட்டிய கும்பல் 

hotel-incident-in-nellai

பிரியாணியில் லெக் பீஸ் இல்லை என்ற ஆத்திரத்தில் நெல்லையில் ஹோட்டல் உரிமையாளரின் நான்கு விரல்களையும், காலையும் வெட்டியதுடன் அவரது மனைவியின் கை விரலையும் வெட்டிய சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. 

நெல்லையை அடுத்துள்ள முக்கூடல் செல்லும் சாலையில் உள்ளது சுத்தமல்லி. நெல்லை மாநகரத்தையொட்டியுள்ள இங்கு ஆயிரக்கணக்கான வீடுகள் உள்ளன. இங்குள்ள ஒரு ஓட்டலில் ஏழுபேர் கொண்ட கும்பல், பிரியாணி வாங்கிச்சென்றனர்.
 கோபாலசமுத்திரத்திலுள்ள தாமிரபரணி ஆற்றில் குளித்துவிட்டு சாப்பிட்டபோது  சிக்கன் பிரியாணியில் லெக் பீஸ் இல்லை என ஆத்திரமுற்றனர். ஓட்டல் உரிமையாளர் ஜாகீர்உசேன் மனைவி பானு இருந்தார். அவரை சரமாரியாக தாக்கிய கும்பல் அவரது தலையிலும் கையிலும் அரிவாளால் வெட்டியுள்ளது. 

இதில் அவரது இடதுகை விரல் துண்டிக்கப்பட்டது. மேலும் கடைக்குள் இருந்த ஜாகீர்உசேன் மீதும் சரமாரியாக தாக்குதல் நடத்தினர். இதில் அவரது வலதுவகையின் நான்கு விரல்களை துண்டித்து விழுந்துள்ளது. ‘லெக் பீஸ் வைக்கமாட்டாயா’ என கேட்டு அவரது காலிலும் வெட்டிவிட்டு அந்தக் கும்பல் தப்பிவிட்டனர்.


இந்தச் சம்பவத்தில் ஆபத்தான நிலையில் இருவரும் நெல்லை அரசு மருத்துவக்கல்லுாரி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனர். இந்த நிலையில் சுத்தமல்லியில்  குற்றவாளிகள், ரவுடிகளில் அட்டகாசம் தினம் தினம் அதிகரித்துவருகிறது என ஊர்மக்கள் குற்றம் சாட்டுகின்றனர். குறிப்பாக வியாபாரிகள் பாதிக்கப்படுகிறார்கள் என்பதால் குற்றவாளிகளை கைது செய்ய வலியுறுத்தி சுத்தமல்லியில் நூற்றுக்கணக்கான கடைகளை அடைத்து  வியாபாரிகள் போராட்டத்தில் ஈடுபட்டனர்.. 
இதனிடையே சுத்தமல்லியை சேர்ந்த சபரி, பேட்டையை சேர்ந்த சுடலைமுத்து ஆகியோரை காவல்துறையினர் பல்வேறு பிரிவின் கீழ் கைது செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். மேலும் இதில் தொடர்புள்ள சிலரை  காவல்துறையினர் தேடி வருகின்றனர்

Advertisement:
இது தொடர்பான செய்திகள் :
Advertisement:
Advertisement:
[X] Close