[X] Close
JUST IN
  • BREAKING-NEWS கருணாசுக்கு ஸ்டாலின் கண்டனம் தெரிவிக்காதது ஏன்? - அமைச்சர் ஜெயக்குமார்
  • BREAKING-NEWS திமுக பஞ்சாயத்து கட்சியாக மாறிவிட்டது; ஸ்டாலின் வழக்கு தொடர்ந்தால் சந்திக்க தயார் - அமைச்சர் ஜெயக்குமார்
  • BREAKING-NEWS என்னை கைது செய்ய தனிப்படை அமைக்கப்பட்டது பற்றி தெரியாது; நான் தலைமறைவாக இல்லை - ஹெச்.ராஜா
  • BREAKING-NEWS ஜம்மு-காஷ்மீர்: ஷோபியான் மாவட்டத்தில் பயங்கரவாதிகளால் கடத்தப்பட்ட 2 காவல் அதிகாரிகள், ஒரு காவலரை பயங்கரவாதிகள் கொலை செய்துள்ளனர்
  • BREAKING-NEWS ராமநாதபுரம்: மண்டபம் முகாமில் இலங்கை அகதிகளுக்கு 20 நாட்களுக்கும் மேலாக உதவித்தொகை வழங்கப்படவில்லை என இலங்கை அகதிகள் குற்றச்சாட்டு
  • BREAKING-NEWS கள்ளக்குறிச்சி வட்டார போக்குவரத்து ஆய்வாளர் பாபுவின் உதவியாளர் செந்தில்குமாரின் கூட்டுறவு வங்கி லாக்கர் முடக்கம்
  • BREAKING-NEWS கரூர்: பரமத்தி, பவுத்திரம் ஆகிய பகுதிகளில் உள்ள கல்குவாரிகளில் 2ம் நாளாக வருமானவரி சோதனை

கால் மேல் கால் போட்டு அமர்ந்து நூதனப் போராட்டம் 

protest-of-kachanatham-massacre-incidient-in-kovai

கோவை ஆட்சியர் அலுவலகத்தில் தாழ்த்தப்பட்ட மக்களுக்கு பாதுகாப்பு வழங்க கோரி கால் மேல் கால் போட்டு அமர்ந்து போராட்டம்.

சிவகங்கையில் கால் மேல் கால் போட்டு அமர்ந்ததால் தாழ்த்தப்பட்ட மக்கள் மூவரை கொலை செய்யப்பட்ட நிலையில், கோவையில் கால் மேல் கால் போட்டு அமர்ந்து தாழ்த்தப்பட்ட மக்களுக்கு பாதுகாப்பு வழங்க வலியுறுத்தி போராட்டத்தில் ஈடுபட்டனர். 

சிவகங்கை மாவட்டம் மானாமதுரை அருகே கச்சநத்தம் கிராமத்தில் வாழ்ந்து வரும் தாழ்த்தப்பட்ட மக்கள் மீது தாக்குதல் நடத்தப்பட்ட சம்பவத்தில் மூவர் உயிரிழந்தனர். தேநீர் கடையில் கால் மேல் கால் போட்டு அமர்ந்ததாக கூறி இந்தச் சம்பவத்தில் ஈடுபட்டதாக விசாரணையில் தெரிய வந்தது. இந்நிலையில் கோவையில் தாழ்த்தப்பட்ட மக்களுக்கு பாதுகாப்பு வழங்க கோரியும், குறிப்பாக கால் மேல் கால் போட்டு அமர்ந்து இருப்பவர்களுக்கு பாதுகாப்பு அளிக்க வலியுறுத்தியும் கோவையில் தமிழ்ப் புலிகள் கட்சியினர் நூதன முறையில் போராட்டத்தில் ஈடுபட்டனர். 

அவர்கள் கோவை ஆட்சியர் அலுவலகம் முன்பாக நாற்காலியில் அமர்ந்து கால் மேல் கால் போட்டுக் கொண்டு போராட்டத்தில் ஈடுபட்டனர். உடனடியாக காவல் துறையினர் வந்து அவர்களிடம் இருந்த நாற்காலியை எடுத்து வைத்தனர். பின்னர் கோவை மாவட்ட ஆட்சியரிடம் இது குறித்து மனு அளித்தனர். மனு அளித்து வருவதற்குள் அவர்கள் போராட்டத்திற்காக கொண்டு வந்த இரு நாற்காலிகள் காணாமல் போனதாகவும் புகார் தெரிவித்துள்ளனர். 

Advertisement:
Advertisement:
Advertisement:
[X] Close