[X] Close
JUST IN
  • BREAKING-NEWS 2020ஆம் ஆண்டுக்கான தமிழக அரசின் பொதுவிடுமுறை நாட்கள் பட்டியல் வெளியீடு - ஆங்கிலப்புத்தாண்டு, பொங்கல், தீபாவளி என மொத்தம் 23 நாட்களுக்கு பொதுவிடுமுறை
  • BREAKING-NEWS திருவள்ளூர், காஞ்சிபுரம், வேலூர், தி.மலை, திண்டுக்கல், தேனி, நீலகிரி, கோவையில் மிக கனமழைக்கு வாய்ப்பு - இந்திய வானிலை மையம்
  • BREAKING-NEWS மேட்டூர் அணை வேகமாக நிரம்பி வருவதால் காவிரி கரையோர மக்களுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை
  • BREAKING-NEWS ஐஎன்எக்ஸ் மீடியா விவகாரம்: சிபிஐ வழக்கில் ப.சிதம்பரத்துக்கு ஜாமீன்
  • BREAKING-NEWS வங்கக் கடலில் உருவானது காற்றழுத்த தாழ்வுப்பகுதி: கனமழைக்கு வாய்ப்பு

விசாரணைக்கு நிர்மலா தேவி முழு ஒத்துழைப்பு: சந்தானம் பேட்டி

nirmala-devi-gave-full-cooperation-for-investigation-former-ias-santhanam

கல்லூரி மாணவிகளை தவறான பாதைக்கு அழைத்ததாக கைது செய்யப்பட்ட பேராசிரியை நிர்மலா தேவி விசாரணைக்கு முழு ஒத்துழைப்பு தந்ததாக விசாரணை அதிகாரி சந்தானம் தெரிவித்துள்ளார்.

கல்லூரி மாணவிகளை தவறான பாதையில் செல்ல வற்புறுத்தியதாகக் கைது செய்யப்பட்ட பேராசிரியை நிர்மலா தேவி, 5 நாட்கள் சிபிசிஐடி விசாரணை முடிந்து நேற்று சாத்தூர் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டார். விசாரணைக்காக நிர்மலா தேவியை மீண்டும் காவலில் எடுக்க சிபிசிஐடி கோராததால் அவர் மதுரை மத்திய சிறையில் அடைக்கப்பட்டார். மே 9ஆம் தேதி வரை நிர்மலா தேவியை நீதிமன்ற காவலில் வைக்க உத்தரவிடப்பட்டுள்ளது. இதனிடையே மதுரை மத்திய சிறையில் அடைக்கப்பட்டிருக்கும் நிர்மலா தேவியிடம் ஆளுநர் பன்வாரிலால் அமைத்த ஒரு நபர் விசாரணைக் குழுவின் தலைவர் ஓய்வு பெற்ற ஐஏஎஸ் அதிகாரி சந்தானம் இன்று விசாரணை நடத்தினார். மதுரை மத்திய சிறைக்கே நேரில் சென்ற சந்தானம் அங்கு நிர்மலா தேவியிடம் விசாரணை நடத்தினார். சுமார் 4 மணி நேரம் விசாரணை நடத்தப்பட்டுள்ள நிலையில் மீண்டும் மதியம் 3 மணிக்கு விசாரணைக்கு தொடங்கும் என சந்தானம் தெரிவித்துள்ளார்.

இதனிடையே நிர்மலா தேவி விவகாரத்தில் தொடர்புடைய பேராசிரியர் முருகன், ஆராய்ச்சி மாணவர் கருப்பசாமி ஆகியோரிடமும் விசாரணை நடத்த சந்தானம் திட்டமிட்டுள்ளார். 

வீடியோ

Advertisement:
Advertisement:
Advertisement:
[X] Close