[X] Close
JUST IN
  • BREAKING-NEWS உள்ளாட்சித் தேர்தலில் யாருக்கும் ரஜினி ஆதரவில்லை- ரஜினி மக்கள் மன்றம் அறிக்கை
  • BREAKING-NEWS கடலோர மாவட்டங்களில் இன்று மிதமான மழைக்கு வாய்ப்பு: வானிலை ஆய்வு மையம் தகவல்
  • BREAKING-NEWS தனிநபர் வருமான வரி விகிதங்களை குறைக்க பரிசீலிப்பதாக மத்திய அமைச்சர் நிர்மலா சீதாராமன் தகவல்

ஸ்டாலினுடன் முதல்வர் ஆலோசனை!

tn-chief-minister-edappadi-palanisamy-advice-to-stalin

 

காவிரி விவகாரம் தொடர்பாக நாளை நேரில் ஆலோசனை நடத்த எதிர்க்கட்சித் தலைவர் ஸ்டாலினுக்கு முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி அழைப்பு விடுத்துள்ளதாக திமுக தெரிவித்துள்ளது. 

முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி திமுக செயல்தலைவரும், எதிர்க்கட்சித் தலைவருமான ஸ்டாலினை தொலைபேசியில் தொடர்பு கொண்டு பேசியதாகவும், நாளை நேரில் பேச்சுவார்த்தை நடத்த அழைப்பு விடுத்ததாகவும் திமுக வட்டாரங்கள் தெரிவித்துள்ளன. ஏற்கனவே கடந்த 22ம் தேதி முதலமைச்சர் தலைமையில் நடைபெற்ற அனைத்து கட்சிக் கூட்டத்தில் எதிர்க்கட்சித் தலைவர் ஸ்டாலின் கலந்துகொண்டார். காவிரி மேலாண்மை வாரியம் அமைக்க அனைத்து கட்சி பிரதிநிதிகளுடன் சென்று பிரதமரிடம் நேரில் வலியுறுத்த நேரம் கேட்டுள்ளதாக முதலமைச்சர் தெரிவித்திருந்தார். 

இந்நிலையில் காவிரி விவகாரம் தொடர்பாக வரும் 7ம் தேதி அனைத்துக் கட்சிக் கூட்டத்திற்கு கர்நாடகா முதலமைச்சர் சித்தராமைய்யா அழைப்பு விடுத்துள்ளார். இந்தப் பின்னணியில் எதிர்க்கட்சித் தலைவர் ஸ்டாலினுடன், முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி தொலைபேசியில் தொடர்பு கொண்டு பேசியுள்ளார்.
 

Advertisement:
இது தொடர்பான செய்திகள் :
Advertisement:
Advertisement:
[X] Close