[X] Close
JUST IN
  • BREAKING-NEWS இருசக்கர வாகனத்தை ஓட்டுபவருடன் பின்னால் அமர்ந்து செல்பவருக்கும் ஹெல்மெட் கட்டாயம்- உயர்நீதிமன்றம்
  • BREAKING-NEWS ஹெல்மெட் கட்டாயம் என்பதை அமல்படுத்த தமிழக அரசுக்கு சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவு
  • BREAKING-NEWS இருசக்கர வாகனங்களை விற்கும் நிறுவனங்களே ஹெல்மெட்டையும் இலவசமாக வழங்க வேண்டும்- தமிழிசை சவுந்தரராஜன்
  • BREAKING-NEWS வாகன ஆய்வாளர் வங்கி லாக்கரில் 9.5 கிலோ தங்கம் பறிமுதல்
  • BREAKING-NEWS சென்னை, கடலூர், நாகை துறைமுகங்களில் ஒன்றாம் எண் புயல் எச்சரிக்கை கூண்டு ஏற்றப்பட்டுள்ளது
  • BREAKING-NEWS சென்னையில் இன்று பெட்ரோல் லிட்டருக்கு ரூ.85.48 காசுகளாகவும், டீசல் லிட்டருக்கு ரூ.78.10 காசுகளாகவும் விலை நிர்ணயம்
  • BREAKING-NEWS திமுகவுக்கு எதிராக வரும் 25ம் தேதி மாவட்ட தலைநகரங்களில் கண்டன ஆர்ப்பாட்டம் - முதல்வர் பழனிசாமி

மாணவர்களுக்கு விபத்துக் காப்பீடு: செங்கோட்டையன் தகவல்

accident-insurance-for-tn-govt-school-students

இந்தியாவிலேயே முதன்முறையாக தமிழகத்தில் அரசுப் பள்ளி மாணவர்களுக்கு விபத்துக் காப்பீட்டுத் திட்டம் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளதாக பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் கே.ஏ.செங்கோட்டையன் தெரிவித்துள்ளார்.

சென்னையில் பத்தாம் வகுப்பு மற்றும் பனிரெண்டாம் வகுப்பு பொதுத்தேர்வு முன்னேற்பாடு பணிகள் குறித்து அதிகாரிகளுடன்  பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் செங்கோட்டையன் ஆய்வு செய்தார். பின்னர், செய்தியாளர்களை சந்தித்த அமைச்சர், தமிழகத்தில் அரசுப் பள்ளி மாணவர்களுக்கு விபத்துக் காப்பீட்டுத் திட்டம் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளதாக தெரிவித்தார்.மேலும் அடுத்த ஆண்டு அரசுப் பள்ளிகளில் கண்காணிப்பு கேமராக்கள் பொருத்தப்படும் என்றும், மாணவர்களின் கல்வித்தரத்தை உயர்த்த அரசு தீவிர நடவடிக்கைகள் எடுத்து வருவதாகவும் கூறினார். அரசுப் பள்ளி மாணவர் விபத்தில் உயிரிழக்க நேரிட்டால் அடுத்த 48 மணி நேரத்திற்குள் 1 லட்சம் ரூபாய் காப்பீடுத் தொகை வழங்க அரசு ஆணை பிறப்பித்துள்ளதாக அமைச்சர் செங்கோட்டையன் தெரிவித்தார்.

வீடியோ

Advertisement:
Advertisement:
Advertisement:
[X] Close