[X] Close
JUST IN
  • BREAKING-NEWS ஸ்டெர்லைட் ஆய்வுக்குழுவின் கருத்து கேட்பு கூட்டம்
  • BREAKING-NEWS மாலத்தீவில் எதிர்க்கட்சி வேட்பாளர் வெற்றி
  • BREAKING-NEWS தேர்தலுக்கு பின்பும் பாஜகவுடன் திமுக கூட்டணி வைக்காது: மு.க.ஸ்டாலின்
  • BREAKING-NEWS ‘கச்சா எண்ணெய் உற்பத்தியை உயர்த்த முடியாது’: சவுதி அரேபியா திட்டவட்டம்
  • BREAKING-NEWS ரஃபேல் விவகாரம்: ஊழல் ஒழிப்பு ஆணையத்தை இன்று அணுகுகிறது காங்கிரஸ்
  • BREAKING-NEWS சென்னையில் பெட்ரோல் லிட்டருக்கு ரூ.85.99 காசுகளாகவும், டீசல் லிட்டருக்கு ரூ.78.26 காசுகளாகவும் விலை நிர்ணயம்
  • BREAKING-NEWS செல்போனை திருடியதாக சிறுவன் அடித்துக்கொலை

சுடுகாட்டில் எரிக்கப்பட்ட ஏடிஎம் கார்டுகள்: பின்னணி என்ன?

more-than-100-atm-cards-and-passbooks-are-burned-in-cemetery

சென்னை அருகே சுடுகாட்டில் வங்கி வைப்பு கணக்குப் புத்தகங்கள் மற்றும் நூற்றுக்கும் மேற்பட்ட ஏடிஎம் கார்டுகள் எரிந்த நிலையில் மீட்கப்பட்டுள்ளன. 

சென்னை புழலில் உள்ள சுடுகாட்டிற்கு அங்கு பணிபுரியும் ஊழியர்கள் இருவர் வழக்கம்போல் இன்று சென்றுள்ளனர். அப்போது அங்கு தீப்பற்றி எரிவதை கண்டு அருகில் சென்று பார்த்த போது தீயில் இந்தியன் வங்கியைச் சேர்ந்த 100க்கும் மேற்பட்ட ஏடிஎம் கார்டுகள் மற்றும் நிரந்தர வைப்பு தொகை புத்தகங்கள் ஆகியவை பாதி எரிந்த நிலையில் கிடப்பதை அவர்கள் கண்டனர். 

இதுபற்றி உடனே புழல் போலீசாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டு பாதி எரிந்த ஏடிஎம் கார்டுகள் பறிமுதல் செய்யப்பட்டன. மேலும் இந்த கார்டுகள் காலாவதியானவையா என இந்தியன் வங்கி அதிகாரிகளிடம் விளக்கம் கேட்டு புழல் போலீசார் வழக்குப் பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். ஏடிஎம் கார்டுகள் சுடுகாட்டில் எரிந்த தகவல் புழல் பகுதி வாசிகளிடையே பரவியதால் அப்பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது. இந்தச் சம்பவத்தின் பின்னணி குறித்து போலீஸார் ஆய்வு மேற்கொண்டுள்ளனர்.

Advertisement:
Advertisement:
Advertisement:
[X] Close