[X] Close
JUST IN
  • BREAKING-NEWS சென்னை மெரினா கடற்கரை சாலையில் எம்ஜிஆர் நூற்றாண்டு வளைவை திறக்க உயர்நீதிமன்றம் தடை
  • BREAKING-NEWS சிலைக்கடத்தல் வழக்கில் ரன்வீர்ஷா கூட்டாளி கிரன்ராவின் முன்ஜாமீன் மனு தள்ளுபடி
  • BREAKING-NEWS சபரிமலை வழக்கின் தீர்ப்பை அமல்படுத்த அவகாசம் கோரி உச்சநீதிமன்றத்தில் தேவசம்போர்டு மனு தாக்கல்
  • BREAKING-NEWS சென்னையில் பெட்ரோல் லிட்டருக்கு ரூ.79.46 காசுகளாகவும், டீசல் லிட்டருக்கு ரூ.75.44 காசுகளாகவும் விலை நிர்ணயம்
  • BREAKING-NEWS மாலத்தீவு அதிபர் பதவியேற்பு விழாவில் பங்கேற்க மாலேவுக்கு சென்ற இந்திய பிரதமர் மோடிக்கு உற்சாக வரவேற்பு
  • BREAKING-NEWS முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக லட்சத்தீவுகள் கடல் பகுதிக்கு மீன்பிடிக்க மீனவர்கள் செல்ல வேண்டாம் - கஜா புயலை தொடர்ந்து அரபிக் கடலில் புதிதாக புயல் உருவாவதால் அவசர கட்டுப்பாட்டு மையம் அறிவுறுத்தல்
  • BREAKING-NEWS கஜா புயலால் உயிரிழந்தோர் எண்ணிக்கை 46 ஆக அதிகரித்தது

குஜராத்தில் தமிழக மீனவர்களுக்கு டீசல் வழங்கும் பணி தொடக்கம்

diesel-distribution-works-to-tn-fishermen-begins

குஜராத் மாநிலத்தில் கரை ஒதுங்கிய மீனவர்களுக்கு தமிழக அரசு சார்பில் தேவையான டீசல் வழங்கும் பணி தொடங்கியுள்ளது.

கன்னியாகுமரி கடல் பகுதியில் உருவான ‘ஒகி’ புயல் காரணமாக, பலத்த சூறைக்காற்றுடன் மழை பெய்தது. இதனால் கடலுக்கு மீன்பிடிக்கச் சென்ற தமிழகம் மற்றும் கேரளாவைச் சேர்ந்த ஏராளமான மீனவர்கள் மாயமாகினர். அவர்களை மீட்கும் பணி நடைபெற்று வருகிறது. மாயமான மீனவர்களில் பலர் பல்வேறு மாநிலங்களிலும் தஞ்சமடைந்துள்ளனர். குறிப்பாக தமிழக மீனவர்கள் 700 பேர் குஜராத் மாநிலத்தின் வேரவல் கடற்பகுதியில் தஞ்சம் அடைந்திருக்கின்றனர்.
அவர்களின் தேவைகளை அறிந்து கொள்ளும் விதமாக புதிய தலைமுறை நேரடியாக குஜராத்திற்கே சென்றுள்ளது. அப்போது புதிய தலைமுறையிடம் பேசிய மீனவர்கள், குஜராத்தில் இருந்து ஊர் திரும்ப படகுகளுக்கு தேவையான எரிபொருட்கள் மற்றும் தங்களுக்கு தேவையான உணவுப்பொருட்களை வழங்க நடவடிக்கை எடுக்க வேண்டும்  என கோரிக்கை விடுத்திருந்தனர்.

இதனையடுத்து குஜராத், மகாராஷ்டிரா மற்றும் லட்சத்தீவில் கரைசேர்ந்த தமிழக மீனவர்களை அழைத்து வருவதற்காக, ஒரு விசைப்படகிற்கு வழங்கப்படும் டீசலை 1000 லிட்டராக உயர்த்தி வழங்க முதலமைச்சர் பழனிசாமி உத்தரவிட்டார். இந்நிலையில் குஜராத் மாநிலத்தில் கரை ஒதுங்கிய மீனவர்களுக்கு தமிழக அரசு சார்பில் தேவையான டீசல் வழங்கும் பணி தொடங்கியுள்ளது. இது மீனவர்கள் தமிழகம் திரும்ப பயனுள்ளதாக இருக்கும் என கூறப்படுகிறது.

Advertisement:
இது தொடர்பான செய்திகள் :
Advertisement:
Advertisement:
[X] Close