[X] Close
JUST IN
 • BREAKING-NEWS டெல்லியில் பிரதமர் மோடி தலைமையில் அனைத்துக் கட்சி கூட்டம் நடைபெறுகிறது
 • BREAKING-NEWS சென்னை கோடம்பாக்கம் ராகவேந்திரா கல்யாண மண்டபத்தில் வரும் 26ஆம் தேதி முதல் 31ஆம் தேதி வரை ரசிகர்களை சந்திக்கிறார் நடிகர் ரஜினிகாந்த்
 • BREAKING-NEWS இலங்கை சிறையில் இருந்து தமிழக மீனவர்கள் 16 பேர் முதற்கட்டமாக விடுதலை
 • BREAKING-NEWS ஒகி புயலால் கடலில் சிக்கிய தமிழக மீனவர்கள் 433 பேரை காணவில்லை: உள்துறை அமைச்சகம்
 • BREAKING-NEWS எம்.பி, எம்எல்ஏக்கள் மீதான புகார்களை விசாரிக்க சிறப்பு நீதிமன்றம் அமைக்க உச்சநீதிமன்றம் அனுமதி
 • BREAKING-NEWS ராஜஸ்தானில் சுட்டுக்கொல்லப்பட்ட ஆய்வாளர் பெரியபாண்டியனின் உடல் சென்னை வந்தது
 • BREAKING-NEWS திருச்செந்தூர் முருகன் கோயிலில் வள்ளி குகை அருகே பிரகார மண்டபம் இடிந்ததில் பெண் ஒருவர் பலி
 • BREAKING-NEWS ஜிஷா கொலை வழக்கில் குற்றவாளி அமிருல் இஸ்லாமிற்கு தூக்கு தண்டனை- எர்ணாகுளம் நீதிமன்றம்
 • BREAKING-NEWS ஜெ. மரணம் குறித்து விசாரிக்கும் ஆறுமுகசாமி விசாரணை ஆணையத்தில் தீபக் ஆஜர்
 • BREAKING-NEWS விஏஓ தேர்விற்கு கன்னியாகுமரி மக்கள் விண்ணப்பிக்க காலநீட்டிப்பு செய்வது பற்றி பரிசீலிக்கப்படும் - அமைச்சர் ஜெயக்குமார்
 • BREAKING-NEWS ‘ஐஎன்எஸ் கல்வாரி’ என்ற நீர்மூழ்கிக் கப்பல் நாட்டுக்கு அர்ப்பணிப்பு
 • BREAKING-NEWS பெரியகுளம் அருகே கும்பக்கரை அருவியில் குளிக்க 14 வது நாளாக தடை விதிப்பு
 • BREAKING-NEWS குஜராத் மாநிலத்தில் 2 வது மற்றும் இறுதிக்கட்ட வாக்குப்பதிவு தொடங்கியது
 • BREAKING-NEWS வங்கிக் கணக்குடன் ஆதார் எண்ணை இணைக்க 2018 மார்ச் 31ஆம் தேதி வரை அவகாசம் நீட்டிப்பு
தமிழ்நாடு 03 Dec, 2017 01:09 PM

டிச.5 முதல் 7 வரை மீனவர்கள் கடலுக்கு செல்லவேண்டாம்: வானிலை மையம்

chennai-met-announce-about-fishermen-and-rain-updates

டிசம்பர் 5ஆம் தேதி முதல் 7ஆம் தேதி வரை ஆழ்கடலுக்கு மீனவர்கள் செல்ல வேண்டாம் என வானிலை ஆய்வு மையம் எச்சரித்துள்ளது.

சென்னையில் செய்தியாளர்களுக்கு பேட்டியளித்த வானிலை ஆய்வு மைய இயக்குநர் பாலச்சந்திரன், “ தமிழகத்தில் 13 இடங்களில் கனமழை முதல் மிக
கனமழை பெய்துள்ளது. சென்னையில் ஒரு சில இடங்களில் மிதமான மழை பெய்ய வாய்ப்புள்ளது. தமிழகம் மற்றும் புதுச்சேரியில் ஓரிரு இடங்களில் கனமழை
பெய்ய வாய்ப்புள்ளது. தெற்கு ஆந்திரா, வடதமிழக கடலோர பகுதிகளை நோக்கி காற்றழுத்த தாழ்வு மண்டலம் நகர வாய்ப்புள்ளது. வலுவான குறைந்த
காற்றழுத்த தாழ்வுப் பகுதி நாளைக்குள் காற்றழுத்த தாழ்வு மண்டலமாக மாறக்கூடும். எனவே டிசம்பர் 5ஆம் தேதி முதல் 7ஆம் தேதி வரை ஆழ்கடலுக்கு
மீனவர்கள் செல்ல வேண்டாம்” என்று தெரிவித்தார்.

கன்னியாகுமரி மற்றும் கேரளாவைச் சேர்ந்த 2 ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் மீன்பிடிப்புக்காக கடலுக்கு சென்ற நிலையில், ஒகி புயலால் அவர்கள் கரை
திரும்பவில்லை என உறவினர்கள் கூறி வருகின்றனர். கடலில் காணாமல் போன மீனவர்களை தேடுவதற்காக கப்பல்கள், ஹெலிகாப்டர்கள் உள்ளிட்டவை
அதிகரிக்கப்பட்டுள்ளதாக வருவாய் நிர்வாக ஆணையர் சத்யகோபால் தெரிவித்துள்ளார். இந்நிலையில் டிசம்பர் 5ஆம் தேதி முதல் 7ஆம் தேதி வரை கடலுக்கு
செல்ல வேண்டாம் என வானிலை ஆய்வு மையம் எச்சரித்திருப்பது குறிப்பிடத்தக்கது. 
 

வீடியோ

Advertisement:
Advertisement:
Advertisement:
[X] Close