[X] Close
JUST IN
  • BREAKING-NEWS வடக்கு அந்தமான், கிழக்கு வங்கக்கடல் பகுதிக்கு அடுத்த 12 மணி நேரத்திற்கு மீனவர்கள் செல்ல வேண்டாம் - சென்னை வானிலை ஆய்வு மையம்
  • BREAKING-NEWS பணத்திற்காக வாக்களிப்பது தன்னைத்தானே விற்பதற்கு சமம்: வைகோ
  • BREAKING-NEWS பாஜக நோட்டுகள், டோக்கன்களை தந்து வாக்கு கேட்காது; திட்டங்களை தந்து மட்டுமே வாக்கு கேட்கும் - தமிழிசை
  • BREAKING-NEWS நீதிமன்ற அவமதிப்பு வழக்கு: மன்னிப்புக் கேட்டார் ஹெச்.ராஜா!
  • BREAKING-NEWS பெண்கள் கரும்பல்ல; இரும்பு என்பதை நிரூபிக்கும் காலம் வந்துவிட்டது! - தமிழிசை சவுந்தரராஜன்
  • BREAKING-NEWS சென்னையில் பெட்ரோல் லிட்டருக்கு ரூ.84.64 காசுகளாகவும், டீசல் லிட்டருக்கு ரூ.79.22 காசுகளாகவும் விலை நிர்ணயம்
  • BREAKING-NEWS வைகை அணையின் நீர்மட்டம் 69 அடியை எட்டியதால் மதுரை, திண்டுக்கல், சிவகங்கை, ராமநாதபுரம், தேனி மாவட்ட மக்களுக்கு 3ஆம் கட்ட வெள்ள அபாய எச்சரிக்கை

130 அடியை தாண்டியது முல்லைப் பெரியாறு அணையின் நீர்மட்டம்

mullaperiyar-dam-water-level-increased

முல்லைப் பெரியாறு அணையின் நீர்மட்டம் 130 அடியைத் தாண்டியுள்ளது.

மேற்குத் தொடர்ச்சி மலைப் பகுதிகளில் மழை ஓய்ந்த நிலையிலும், முல்லைப் பெரியாறு அணைக்கு நீர்வரத்து கணிசமாக இருந்து வந்தது. இந்நிலையில் அணையின் நீர்மட்டம் 130.20 அடியாக அதிகரித்துள்ளது. இருப்பினும் கடந்த நாட்களைவிட அணைக்கு தற்போது நீர்வரத்து குறைந்தே காணப்படுகிறது.

இன்று காலை நிலவரப்படி அணைக்கு நீர்வரத்து 6,290 கன அடியிலிருந்து 2,645 கன அடியாகக் குறைந்துள்ளது. அணையிலிருந்து பாசனம் மற்றும் குடிநீருக்காக விநாடிக்கு 1,600 கன அடி நீர் திறந்துவிடப்படுகிறது. முல்லைப் பெரியாறு அணையின் மொத்த உயரம் 152 அடி ஆகும். அணைப் பகுதிகளில் மழை இல்லாத நிலையில், தேக்கடியில் 8 மில்லிமீட்டர் மழை பதிவாகியுள்ளது.

Advertisement:
Advertisement:
Advertisement:
[X] Close