[X] Close
JUST IN
  • BREAKING-NEWS செல்போனை திருடியதாக சிறுவன் அடித்துக்கொலை
  • BREAKING-NEWS புழல் சிறையில் இருந்த எம்எல்ஏ கருணாஸ் வேலூர் சிறைக்கு மாற்றம்
  • BREAKING-NEWS எக்காரணத்தை கொண்டும் ரஃபேல் ஒப்பந்தம் ரத்து செய்யப்படாது - மத்திய அமைச்சர் அருண் ஜெட்லி
  • BREAKING-NEWS ஸ்டெர்லைட் ஆலையில் ஓய்வு பெற்ற நீதிபதி தருண் அகர்வாலா தலைமையிலான குழு ஆய்வு
  • BREAKING-NEWS 2018 ஆம் ஆண்டிற்கான சிறந்த சர்வதேச நடிகருக்கான IARA விருதுக்கு மெர்சல் படத்தில் நடித்ததற்காக விஜய் தேர்வு
  • BREAKING-NEWS முதல்வர், காவல்துறை குறித்து அவதூறாக பேசிய வழக்கில் சட்டமன்ற உறுப்பினர் கருணாஸ் கைது
  • BREAKING-NEWS கருணாசுக்கு ஸ்டாலின் கண்டனம் தெரிவிக்காதது ஏன்? - அமைச்சர் ஜெயக்குமார்

டெங்கு பாதிக்கப்பட்ட பெண்கள் போராட்டம்: இரவில் சிகிச்சையளிக்க மறுப்பதாக குற்றச்சாட்டு

patients-protested-against-doctors-at-ariyalur

அரியலூர் அரசு மருத்துவமனையில் டெங்கு சிறப்பு சிகிச்சை பிரிவில் இரவு நேரங்களில் சிகிச்சையளிக்க மருத்துவர்கள், செவிலியர்கள் வருவதில்லை என குற்றம்சாட்டி நோயாளிகள் போராட்டத்‌தில் ஈடுபட்டனர்.

தமிழகமெங்கும் டெங்கு பாதிப்பு அதிகரித்துள்ள நிலையில், அரசு மருத்துவமனைகளில் 24 மணி நேரமும் மருத்துவக்குழு கண்காணிக்க வேண்டும் என்று தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது. இந்நிலையில் அரியலூர் அரசு மருத்துவமனையில் இரவு நேரங்களில் நோயாளிகளுக்கு சிகிச்சை அளிக்க யாரும் வருவதில்‌லை என்றும், சிகிச்சை பெற பொது பிரிவிற்கு செல்ல வேண்டிய நிலை உள்ளதாகவும் காய்ச்சல் பாதித்தவர்கள் கூறுகின்றனர்.

மேலும், செவிலியர்கள் ஷண்முகப்பிரியா, மணிமேகலை ஆகியோர் தரக்குறைவாக பேசுவதாகவும், ஊசியை மாற்றி, டெங்குவால் இறந்துவிட்டதாக கூறிவிடுவேன் என மிரட்டுவதாகவும் நோயாளிகள் குற்றம்சாட்டினர். இதனையடுத்து சம்பவ இடத்திற்கு வந்த தலைமை மருத்துவர் ரமேஷ், செவிலியர்கள் மீது துறைரீதியான நடவடிக்கை எடுக்க பரிந்துரை செய்துள்ளதாகவும், இரவு நேரங்களில் சிகிச்சையளிக்க நடவடிக்கை எடுப்பதாகவும் உறுதியளித்ததை அடுத்து நோயாளிகள் சிறப்பு சிகிச்சை பிரிவுக்கு சென்று சிகிச்சை பெற்று வருகின்றனர்.

வீடியோ

Advertisement:
Advertisement:
Advertisement:
[X] Close