[X] Close
JUST IN
 • BREAKING-NEWS மெர்சல் திரைப்படத்தில் முக்கிய பிரச்னைகள் தெரிவிக்கப்பட்டுள்ளது; படக்குழுவினருக்கு பாராட்டுக்கள்: ரஜினிகாந்த்
 • BREAKING-NEWS இந்திய அணிக்கு எதிரான முதல் ஒருநாள் கிரிக்கெட் போட்டியில் நியூசிலாந்து அணி வெற்றி
 • BREAKING-NEWS கீழடியில் 4ஆம் கட்ட அகழாய்வு பணி விரைவில் தொடங்கும்: அமைச்சர் மாஃபா பாண்டியராஜன்
 • BREAKING-NEWS பேரறிவாளனுக்கான பரோல் அனுமதியை மேலும் 6 மாத காலத்துக்கு நீட்டிக்க வேண்டும்: திருமாவளவன்
 • BREAKING-NEWS ஆசியக்கோப்பை ஹாக்கி போட்டி: மலேசிய அணியை வீழ்த்தி இந்திய அணி சாம்பியன் பட்டம்
 • BREAKING-NEWS இரட்டை இலை சின்ன விவகாரத்தில் நாங்கள் வெற்றி பெறுவது உறுதி: கே.பி.முனுசாமி
 • BREAKING-NEWS முதலமைச்சர் நாற்காலியை அடைவதோ; அதை பறிகொடுத்து தர்மயுத்தம் நடத்த வேண்டியது திமுகவில் கிடையாது: ஸ்டாலின்
 • BREAKING-NEWS அமைச்சர் ராஜேந்திர பாலாஜி பேச்சில் அதிமுகவை யார் ஆள்வது என்பது தெரிகிறது: சீமான்
 • BREAKING-NEWS திருவள்ளூர்: பொன்னேரியில் அசுத்தமாக இருந்த 4 திருமண மண்டபங்களுக்கு தலா ரூ.50,000 அபராதம்
 • BREAKING-NEWS ஆர்.கே.நகர் தொகுதியில் 10 ஆயிரம் போலி வாக்காளர்களை நீக்க வேண்டும்: ஸ்டாலின்
 • BREAKING-NEWS சேலத்தில் டெங்கு கொசு உருவாக காரணமான தனியார் மருத்துவமனைக்கு ரூ.10 லட்சம் அபராதம்
 • BREAKING-NEWS மெர்சல் படத்தின் வசனங்கள் மக்கள் எண்ணத்தை பிரதிபலிக்கும் வகையில் உள்ளது: நாராயணசாமி
 • BREAKING-NEWS விஜய்யை வளைத்து அரசியல் செய்கிறோமா? தமிழிசை
 • BREAKING-NEWS விழுப்புரம்; கள்ளக்குறிச்சி கோமுகி, மணிமுக்தா அணைகளில் இருந்து நீர் திறப்பு
தமிழ்நாடு 09 Oct, 2017 08:33 PM

சென்னை சூளைமேடு உதவி ஆய்வாளராக பொறுப்பேற்றார் திருநங்கை பிரித்திகா யாஷினி

prithika-yashini-take-charge-as-soolaimedu-sub-inspector

தவறு செய்தவர்கள்‌ மீது எந்த பாகுபாடும் இன்றி நடவடிக்கை எடுக்கப்படும் என்று திருநங்கை பிரித்திகா யாஷினி தெரிவித்துள்ளார். பயிற்சி முடித்து சென்னை சூளைமேடு உதவி ஆய்வாளராக இன்று பொறுப்பேற்றுக் கொண்ட பின் இதனை அவர் தெரிவித்தார்.

சேலம் மாவட்டம் கந்தம்பட்டியைச் சேர்ந்த திருநங்கை பிரித்திகா யாஷினி. இவர் கடந்த கடந்தாண்டு காவ‌லர் தேர்வில் வெற்றி பெற்று உதவி ஆய்வாளராக தேர்வானார். வண்டலூரில் பயிற்சி முடித்து பின்னர் தருமபுரி காவல் நிலையத்தில் பயிற்சி பெற்று வந்தார். இறுதியாக 244 காவல் உதவி ஆய்வாளர்கள் சென்னை மாநகர காவல் ஆணையர் அலுவலகத்தில் சிறப்பு வகுப்புகளில் கலந்து கொண்டு பயிற்சியை நிறைவு செய்தனர். அதில் திருநங்கை பிரித்திகாவும் ஒருவர். பயிற்சி முடித்த 244 பேருக்கும் சென்னை மாநகர காவல் எல்லைக்குட்பட்ட காவல் நிலையங்களில் பணி வழங்கப்பட்டுள்ளது. அதன்படி திருநங்கை பிரித்திகா யாசினி, சென்னை சூளைமேடு காவல்நிலையத்தில் உதவி ஆய்வாளராக பணியமர்த்தப்பட்டுள்ளார்.

இந்நிலையில் சூளைமேடு உதவி ஆய்வாளராக பிரித்திகா யாஷினி இன்று பொறுப்பேற்றுக் கொண்டார். பின்னர் புதிய தலைமுறையிடம் பேசிய அவர், " சிறு வயதில் இருந்தே காவல்துறையில் பணிபுரிய விருப்பம் இருந்ததே அந்த துறையை தேர்ந்தெடுக்க காரணம். அதுமட்டுமின்றி திருநங்கை சமுதாயத்திற்கு ஒரு ரோல் மாடலாகவும் இருக்க விரும்பினேன். சட்டத்திற்கு உட்பட்டு மக்களுக்கு எந்தவகையில் பாதுகாப்பு அளிக்க வேண்டுமோ.. எந்த வகையில் செயல்பட வேண்டுமோ அந்த வகையில் செயல்படுவேன்" என்றார்.

தமிழக காவல் துறையில் இணைந்து பணியாற்ற வந்துள்ள பிரித்திகா யாஷினிக்கு அனைத்து ஒத்துழைப்பும் வழங்கப்படும் என்று சூளைமேடு காவல் ஆய்வாளர் சிவக்குமார் தெரிவித்துள்ளார். பிரித்திகா யாஷினி சிறப்பாக பணி மேற்கொள்ள அனைத்து விதமான ஊக்குவிப்பும் வழங்கப்படும் என்றும் அவர் கூறினார். இந்தியாவிலேயே மூன்றாம் பாலினத்தை சேர்ந்த ஒருவர் காவலராக பணி பெற்றிருப்பது இதுவே முதல் முறையாகும்.

வீடியோ

Advertisement:
இது தொடர்பான செய்திகள் :
Advertisement:
Advertisement:
[X] Close