[X] Close
JUST IN
  • BREAKING-NEWS தமிழகத்தில் இன்றும் மழை தொடரும் என வானிலை மையம் அறிவிப்பு
  • BREAKING-NEWS இடைத்தேர்தலில் போட்டியிடுவதற்காக விருப்பமனு அளித்தவர்களிடம் இன்று நேர்காணல் நடத்துகிறது அதிமுக
  • BREAKING-NEWS நாங்குநேரி, விக்கிரவாண்டி தொகுதி இடைத்தேர்தலுக்கான வேட்புமனுத்தாக்கல் இன்று தொடங்குகிறது
  • BREAKING-NEWS இந்தியாவுக்கு எதிரான டி20 போட்டி: தென்னாப்பிரிக்க அணி 9 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி
  • BREAKING-NEWS தமிழகம் முழுவதும் கருணாநிதி சிலை திறக்கப்படும்: ஈரோட்டில் கருணாநிதி சிலையை திறந்து வைத்து மு.க.ஸ்டாலின் பேச்சு
  • BREAKING-NEWS இடைத்தேர்தலில் போட்டியிடும் நாம் தமிழர் கட்சி வேட்பாளர்கள் 25-ம் தேதி அறிவிக்கப்படுவார்கள்: சீமான்

தேர்தல் வெற்றிக்கு பின் அரசியல்வாதிகளின் சொத்துகள் உயர்வது எப்படி? உச்சநீதிமன்றம் கேள்வி

how-can-the-assets-of-politicians-rise-after-the-election-victory-supreme-court-question

தேர்தலில் நின்று வெற்றி பெற்ற உடனேயே அரசியல்வாதிகளின் சொத்துகள் பலமடங்கு உயர்வதை ஏன் கவனிக்கவில்லை என மத்திய அரசுக்கு உச்சநீதிமன்றம் கேள்வி எழுப்பியுள்ளது.

உச்சநீதிமன்றதில் தாக்கல் செய்யப்பட்ட பொதுநல மனுவில், "அரசியல்வாதிகள் தேர்தலின் போது தங்கள் சொத்துகள் தொடர்பான பிரமாணப் பத்திரம் தாக்கல் செய்கின்றனர். ஆனால் அதில் வருமானத்திற்கான மூல ஆதாரங்களை குறிப்பிடுவதில்லை. மேலும் அரசியல்வாதிகள் பெரும்பாலும் தங்கள் பினாமி பெயரிலேயே சொத்துகளை வாங்கி குவிக்கின்றனர். எனவே போட்டியிடும் வேட்பாளர்கள் தங்கள் குழந்தைகள், வாழ்க்கை துணை, உறவினர்கள் பெயர்களின் உள்ள சொத்து விவரங்களையும் குறிப்பிடலாமே" என தெரிவிக்கப்பட்டிருந்தது.

இந்த வழக்கு உச்சநீதிமன்ற நீதிபதி முன் இன்று விசாரணைக்கு வந்த போது, தேர்தலில் நின்று வெற்றி பெற்ற உடனேயே அரசியல்வாதிகளின் சொத்துகள் பலமடங்கு உயர்கிறது. இதனை ஏன் மத்திய அரசு கவனிக்கவில்லை என நீதிபதி கேள்வி எழுப்பினார். மேலும், அரசியல்வாதிகள் தங்கள் சொத்து விவரங்களை வருமான வரித்துறையிடம் தாக்கல் செய்கின்றனர். தேர்தலுக்கு முன் அவர்கள் தாக்கல் செய்யும் வருமான வரி விவரங்களும், தேர்தலுக்கு பின் அவர்களின் வருமான வரி விவரங்களிலும் பல்வேறு மாறுபாடுகள் இருக்கின்றன. இதுதொடர்பாக உடனடியாக வருமான வரித்துறை நடவடிக்கை எடுக்க தயங்குவது ஏன் என கேள்வி எழுப்பினர். பெரும்பாலான வழக்குகள் அந்த ஆட்சி முடியும் போது, மட்டுமே பதியப்படுவதாகவும் குறிப்பிட்ட நீதிபதி, அதற்கான காரணங்கள் என்னவென்றும் கேள்வி எழுப்பினார்.

Advertisement:
இது தொடர்பான செய்திகள் :
Advertisement:
Advertisement:
[X] Close