[X] Close
JUST IN
 • BREAKING-NEWS மெர்சல் திரைப்படத்தில் முக்கிய பிரச்னைகள் தெரிவிக்கப்பட்டுள்ளது; படக்குழுவினருக்கு பாராட்டுக்கள்: ரஜினிகாந்த்
 • BREAKING-NEWS இந்திய அணிக்கு எதிரான முதல் ஒருநாள் கிரிக்கெட் போட்டியில் நியூசிலாந்து அணி வெற்றி
 • BREAKING-NEWS கீழடியில் 4ஆம் கட்ட அகழாய்வு பணி விரைவில் தொடங்கும்: அமைச்சர் மாஃபா பாண்டியராஜன்
 • BREAKING-NEWS பேரறிவாளனுக்கான பரோல் அனுமதியை மேலும் 6 மாத காலத்துக்கு நீட்டிக்க வேண்டும்: திருமாவளவன்
 • BREAKING-NEWS ஆசியக்கோப்பை ஹாக்கி போட்டி: மலேசிய அணியை வீழ்த்தி இந்திய அணி சாம்பியன் பட்டம்
 • BREAKING-NEWS இரட்டை இலை சின்ன விவகாரத்தில் நாங்கள் வெற்றி பெறுவது உறுதி: கே.பி.முனுசாமி
 • BREAKING-NEWS முதலமைச்சர் நாற்காலியை அடைவதோ; அதை பறிகொடுத்து தர்மயுத்தம் நடத்த வேண்டியது திமுகவில் கிடையாது: ஸ்டாலின்
 • BREAKING-NEWS அமைச்சர் ராஜேந்திர பாலாஜி பேச்சில் அதிமுகவை யார் ஆள்வது என்பது தெரிகிறது: சீமான்
 • BREAKING-NEWS திருவள்ளூர்: பொன்னேரியில் அசுத்தமாக இருந்த 4 திருமண மண்டபங்களுக்கு தலா ரூ.50,000 அபராதம்
 • BREAKING-NEWS ஆர்.கே.நகர் தொகுதியில் 10 ஆயிரம் போலி வாக்காளர்களை நீக்க வேண்டும்: ஸ்டாலின்
 • BREAKING-NEWS சேலத்தில் டெங்கு கொசு உருவாக காரணமான தனியார் மருத்துவமனைக்கு ரூ.10 லட்சம் அபராதம்
 • BREAKING-NEWS மெர்சல் படத்தின் வசனங்கள் மக்கள் எண்ணத்தை பிரதிபலிக்கும் வகையில் உள்ளது: நாராயணசாமி
 • BREAKING-NEWS விஜய்யை வளைத்து அரசியல் செய்கிறோமா? தமிழிசை
 • BREAKING-NEWS விழுப்புரம்; கள்ளக்குறிச்சி கோமுகி, மணிமுக்தா அணைகளில் இருந்து நீர் திறப்பு
தமிழ்நாடு 06 Aug, 2017 10:57 AM

திடீரென உள்வாங்கிய வீட்டின் தரை தளம் - உயிர் தப்பிய தம்பதியினர்

suddenly-absorbed-a-house-ground-floor-in-ambathur

சென்னை அம்பத்தூரில் உள்ள அடுக்கு மாடி குடியிருப்பின் தரை தளம் திடீரென உள்வாங்கியதால் பெரும் பரபரப்பு ஏற்பட்டது. 

சென்னை அம்பத்தூரில் ஒரு அடுக்குமாடி குடியிருப்பு உள்ளது. இந்த குடியிருப்பின் தரைத்தளத்தில்  ஓய்வுபெற்ற எல்.ஐ.சி ஊழியர் சந்திரசேகர் அவர் குடும்பத்துடன் கடந்த 5 ஆண்டுகளாக வசித்து வருகிறார். இந்நிலையில் இருவரும் வழக்கம் போல் மாலை தங்கள் படுக்கையறையில் படுத்து இருந்தனர். அப்போது திடீரென படுக்கையறையின் தரை தளம் சுமார் 10 அடிக்கு உள்ளே சென்றது. இதில் அவர்கள் படுத்திருந்த கட்டிலுடன் இருவரும் உள்ளே சென்றனர்.இவர்களது அலறல் சத்தம்கேட்ட அக்கம் பக்கத்தினர் இருவரையும் பள்ளத்தில் இருந்து பத்திரமாக மீட்டனர். இதில் அதிஷ்டவசமாக இருவரும் சிறு காயங்கள் கூட இல்லமால் உயிர் தப்பினர். பின்னர் சம்பவம் குறித்து தகவல் அறிந்த அம்பத்தூர் காவல்துறையினர் கட்டிட பொறியாளரிடம் விசாரணை மேற்கொண்டனர். மேலும் பாதுகாப்பு கருதி மேல் தளத்தில் இருந்த மற்ற மூன்று குடும்பத்தினரையும் போலீசார் வெளியேற்றினர். இந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. இந்த அடுக்குமாடி குடியிருப்பு உருவாவதற்கு முன்பு படுக்கை அறை இருந்த இடத்தில் கிணறு இருந்ததாக கூறப்படுகிறது. அதனை முறையாக மூடாததால் திடீரென பள்ளம் ஏற்பட்டு உள்ளதாக பொறியாளர் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Advertisement:
Advertisement:
Advertisement:
[X] Close